0,00 INR

No products in the cart.

 உத்திர நன்னாளும், கலர் ஃபுல் ஹோலியும்! 

– மீனலதா, மும்பை

புதுத் தளிர்களை மென்மையாக ஏந்தி மரங்கள் பூத்துச் சொரியும் வசந்த கால ஆரம்பத்தில் பிறக்கும் பங்குனி மாதத்தில், சுமங்கலிப் பெண்களின் காரடையான் நோன்பு, தெய்வத் திருமணங்கள், ஹோலிகா தகனம், ஸ்ரீஐயப்பன் அவதாரம், அன்னை மகாலெட்சுமி அவதரிப்பென பல வகையான சுப நிகழ்வுகளும் அணிவகுத்து ஜம்முனு வரும்.

அதிலும் பங்குனி உத்திர நன்னாள் விசேஷமானது. அன்றைய தினம் விரதமிருந்து  கடவுளை வழிபடுவது சிறப்பானதாகும். இந்நாளை கல்யாண விரதம் எனவும் கூறுவதுண்டு.

திருஞானசம்பந்த பெருமான், தனது திரும்பூம்பாவை பதிகத்தில், மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் ஒன்றாக விளங்கும் பங்குனி உத்திர நாள் குறித்துப் பாடியிருக்கிறாரெனவும், அதனால் இந்நாள் மிகவும் பழம்பெருமை பெற்றதெனவும் கூறப்படுகிறது.

பங்குனி உத்திர தெய்வத் திருமணங்கள்

ண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்” என கம்பரஸம் அருமையாகப் பேசும் ஸ்ரீராமர் – சீதா பிராட்டியார் தெய்வீகக் காதல், உத்திரத்தன்று திருமணத்தில் முடிந்தது. அத்துடன் லட்சுமணன், பரதர், சத்ருக்னனுக்கும் முறையே ஊர்மிளா, மாண்டவி, சுதகீர்த்தி ஆகியோருடன் திருமணம் நடைபெற்றன.

பாற்கடலிலிருந்து மகாலெட்சுமித் தாயார் வெளியே வருகையில் ஸ்ரீமன் நாராயணனைக் காண, அவர்களது திருமணமும் நடைபெற்றது உத்திரத்தன்றுதான்.

கைலாய மலையில் நடந்த பார்வதி – பரமேஸ்வரன் திருமணம் காண அனைவரும் கைலாயம் செல்ல, பாரம் தாங்காமல் வடதிசை சரிய, தென் திசைக்கு அகத்திய முனிவரைச் செல்ல ஈசன் பணித்தார். உலகம் சமநிலை பெறவும், குமரனின் திரு அவதாரம் நிகழவும், அகத்தியர் பொதிகை மலை சென்று பூமி பாரத்தை சமம் செய்ததும் உத்திரத்தன்றுதான்.

திருமாலின் கண்ணீர் துளியிலிருந்து உருவான அமிர்தவல்லி மற்றும் சுந்தரவல்லி ஆகிய இருவர்களில், அமிர்தவள்ளி தெய்வயானையாகவும், சுந்தரவல்லி வள்ளியாகவும் பிறந்தனர். தெய்வானையை திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் கரம் பிடித்து மணம் செய்தது உத்திரத்தன்றுதான்.

அரியும், சிவனும் இணைந்ததால் ஜனித்த ஐயப்பர் அவதரித்ததும் உத்திர நாளன்றுதான். சைவமும், வைணவமும் சேர்ந்ததால் ஏற்பட்ட அவதாரமென்பதால், கேரளாவில் 10 நாட்கள் விமரிசையாக இந்நாள் கொண்டாப்படுகிறது.

பங்குனி உத்திரமும், முருகப் பெருமானும், காவடியும் 

ங்குனி உத்திரநாள் முருகப் பெருமானுக்கு விசேஷமான நாள்.பல்வேறு வகைக் காவடிகளைச் சுமந்து பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். அதிலும் பழனிக் காவடி சிறப்பானது. எதனால்? இதற்கொரு கதை கூறப்பட்டுள்ளது.

அசுரர் குலத்தைச் சேர்ந்த இடும்பன் என்பவன் சிறந்த முருக பக்தனாக இருந்தான். தமிழ் முனிவராகிய அகத்தியரைக் கண்டு முருகனின் அருள் கிடைக்க வேண்டினான். அவரும் பூர்சவனம் எனும் இடத்திலுள்ள சக்திகிரி, சிவகிரி என்கிற இரு சிகரங்களைப் பொதிகை மலைக்கு கொண்டு செல்ல பணித்தார். இடும்பன் இரண்டையும் காவடி போல தோளில் வைத்து சுமந்து அரோஹரா! அரோஹரா! என்று கூறிச் செல்கையில், களைப்பு ஏற்பட, ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து இளைப்பாறினான். சிறிது நேரம் சென்று அவற்றைத் தூக்குகையில் இயலவில்லைல. அந்த இடமே பழனி மலையானது.

இடும்பனின் பக்தி கண்டு முருகப் பெருமான் அவன் முன் தோன்றி “உன்னை மாதிரியே வழிபாட்டு சாதனங்களைப் பக்தர்கள் தோளில் சுமந்து வருவார்கள். இம்மலையின் இடையே நீ, எனக்கு அடியவனாக இரு” என அருளினார்.

பழனி மலை செல்பவர்கள் இடும்பனையும் கடம்பனையும் வழிபட்டு செல்வார்கள். இதை ‘தொழுது வழிபடுமடியவர். காவற்காரப் பெருமானே’ என்கிறார் அருணகிரிநாதர். (அதாவது, பக்தியுடன் அவனைத் துதிக்கும் அடியார்களைக் காவலிருந்து காப்பான் என்பதாகும்.)

உத்திர நாளில் கலர்ஃபுல் ஹோலி

லகம் முழுவதும் வாழ்கின்ற இந்தியர்கள் ஜாதி மத பேதமின்றி ஒருவர் மீது ஒருவர் கலர் கலராக வர்ணம் பூசி, தண்ணீர் தெளித்து, ஆடிப்பாடி, பாங்க் அருந்திக் கொண்டாடுவதும் இந்நாளில்தான். “பூரண் போளி” முக்கியமாகச் செய்யப்படும் ஐட்டம். முதல் நாள் ‘ஹோலிகா தகனம்’ அல்லது ‘சோட்டி ஹோலி’ என்று அழைக்கப்படும்.

ஹோலிகா தகனம் ஏன்? 

ண்டைய காலத்தில் பழங்குடி மக்களிடையே, பயங்கரமானவளாக ஹோலிகா என்பவள் இருந்தாள். குழந்தைகளை விழுங்கி அட்டூழியங்கள் செய்து வந்ததால், கிருஷ்ண பகவான் அவளை அழித்து குழந்தைகளைக் காப்பாற்றினார். அதன் நினைவாக, ஹோலிகாவின் கொடும்பாவி தகனம் செய்யப்படுகிறது.

பிரகலாத சரித்திரத்தில், ஹோலிகா இரண்ய கசிபுவின் சகோதரி. மகன் பிரகலாதன், நாராயண நாமம் கூறுவதைப் பொறுக்காத இரண்ய கசிபு, தீயிலிடப்பட்டாலும் எரிந்து விடாதபடி தவ வலிமை பெற்ற சகோதரி ஹோலிகாவிடம் மகன் பிரகலாதனை கட்டியைணத்து தீக்குள் நுழையச் சொன்னான். தீயினுள் சென்ற ஹோலிகா எரிந்து சாம்பலாக, பிரகலாதன் முன்முறுவலுடன் வெளியே வந்தான். இதுவும் ஹோலிகா தகனத்திற்குக் காரணமாகும்.

தீய குணங்களைச் சுட்டெரித்து, அறிவுச் சுடரை ஏற்றும் புனிதமான நாளான ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுவதுவும் உத்திர நாளன்றுதான்.

ஹோலி ‘காமன்’ பண்டிகை எனவும் அழைக்கப்படுகிறது. அநேக திரைப்படங்களில் ஹோலி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹோலி ஸ்பெஷல் ரெஸிபி!

பூரண் போளி 

ராட்டிய மாநிலத்தில் மகத்துவம் வாய்ந்த தினங்களாகிய ஹோலி பண்டிகையையும், குடி பாட்வாவையும், பூரண் போளி இல்லாமல்அவர்கள் கொண்டாட மாட்டார்கள். பூரண் போளியை கடவுளுக்கு நிவேதனம் செய்து, வணங்கியப் பின்தான் சாப்பிடுவார்கள். தூத் போளி, கூட் போளி, தூப் போளியென விதவிமாகச் செய்வதில் வல்லவர்கள். மராட்டிய மாநில பூரண் போளி செம டேஸ்ட்டாக இருக்கும்.

தேவையானவை:
கடலைப்பருப்பு – ¾ கிலோ, வெல்லம் – ½ கிலோ (பொடி செய்து கொள்ளவும்), சலித்த மைதா மாவு – 300 கிராம், நல்ல நெய் – 1 கப், பொடி உப்பு – சிறிது, தண்ணீர் – தேவையானது, ஜாதிக்காய் பவுடர் – ½ டீஸ்பூன், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், கேசரி கலர் பொடி – ½ சிட்டிகை.

செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை, சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துப் பின் நன்கு களையவும். இதை மலர வேகவிட்டெடுத்து, அதிகப்படியான நீரை இறுத்துவிடவும்.

இத்துடன் வெல்லப் பொடியை மிக்ஸ் செய்து, அடிக்கனமான வாணலியில் சிறிது நெய்விட்டு, இதைப் போட்டு சிம்மில் வைத்துக் கிளறவும். இத்துடன் ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும்வரை கிண்டவும். ஆறியபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

மைதா மாவுடன் சிறிது உப்பு, கேசரி கலர், கொஞ்சம் நெய் சேர்த்து பிசிறியபின் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அடித்துப் பிசைந்து மெல்லிய துணி கொண்டு மூடி அரை மணி நேரம் வைக்கவும்.

மைதா மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து, உள்ளங்கையிலும் வைத்து தட்டி அதனுள் கடலைப் பருப்பைக் கலவை உருண்டையை வைத்து நன்றாக முடி, மாவில் தோய்த்து சப்பாத்தி மாதிரி இடவும்.

தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக்கை அடுப்பில் வைத்து சூடானதும், இட்டு வைத்திருப்பதை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, சுற்றிவர நெய் விடவும். இருபுறமும் திருப்பிக் கொடுத்து பொன்னிறமானதும் தட்டில் எடுத்த வைக்கவும். மராட்டியர்கள் செய்யும் பூரண் போளியைப் பிட்டு வாயில் போடுகையில் கமகம வாசனையுடன் கரையும். மெத்து மெத்தென சூப்பராக இருக்கும்.

மைதா மாவுடன் சிறிது உப்பு, கேசரி கலர், கொஞ்சம் நெய் சேர்த்து பிசிறியபின் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அடித்துப் பிசைந்து மெல்லிய துணி கொண்டு மூடி அரை மணி நேரம் வைக்கவும்.

மைதா மாவை சிறிய உருண்டைகளாகச் செய்து, உள்ளங்கையிலும் வைத்து தட்டி அதனுள் கடலைப் பருப்பைக் கலவை உருண்டையை வைத்து நன்றாக முடி, மாவில் தோய்த்து சப்பாத்தி மாதிரி இடவும்.

தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக்கை அடுப்பில் வைத்து சூடானதும், இட்டு வைத்திருப்பதை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, சுற்றிவர நெய் விடவும். இருபுறமும் திருப்பிக் கொடுத்து பொன்னிறமானதும் தட்டில் எடுத்த வைக்கவும். மராட்டியர்கள் செய்யும் பூரண் போளியைப் பிட்டு வாயில் போடுகையில் கமகம வாசனையுடன் கரையும். மெத்து மெத்தென சூப்பராக இருக்கும்.

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...