0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

சருமத்தைக் காக்க!

  • ஆரோக்கியமான உடல், பொலிவானமுகம், பளப்பளப்பான சருமம்பெற அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறை குடித்து வரவேண்டும்.
  • சருமம் பளப்பளப்பாக இருக்க ஆவாரம்பூ தேநீர் குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டுவரலாம்.
  • முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவிவர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.
  • வறண்ட சருமம் உள்ளவர்கள் பால்மற்றும்தேன் இரண்டையும் கலந்து சருமத்தில் பூசி வர சருமம் மிருதுவாகும்.
  • முகத்தில்தயிர்பேக்போட்டுவந்தால்முகப்பருவராமல்தடுக்கஉதவும்.
  • எந்தவிததோல்நோயும்அண்டாமல்இருக்கவெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூசேர்த்துஅரைத்துஉடலில்பூசிக்குளித்துவந்தால்சருமம்மின்னும்.-எம். ராஜதிலகா, அரவக்குறிச்சிப்பட்டி

அரிசி  களைந்த தண்ணீரை இனி கொட்டாதீர்கள்! 

 அரிசி தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, முகத்தை சுத்தமாக்க, இயற்கையான பேஸ் கிளின்ஸர் தேவை எனில் அரிசி நீர் கைகொடுக்கும்.

ஒரு சிறிய காட்டன் துண்டை அரிசி கழுவிய நீரில் நனைத்து பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இது உங்கள் சருமத்தின் மேல் பகுதியை நீர்த்தன்மை பெற வைத்து, சரும அணுக்களை புத்துணர்ச்சி பெற வைத்து அதை ஆரோக்கியமாக நீர்த்தன்மை மிக்கதாக மென்மையானதாக ஆக்குகிறது.
– பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

குளிக்காமல் இருந்தால் என்ன ஆகும் ?

ரண்டு நாட்களுக்கு குளிக்காமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா? உடலில் 1000 வகையிலான பாக்டீரியாக்களின் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. தினமும் குளிக்கவில்லை எனில், சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சருமத்தின் மேற்புறத்தில் உப்பு திட்டு போன்று உருவாகும். இவை, சருமத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. இதனால், சருமத் தொற்றுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அன்றாடம் நம் உடலில் உருவாகும்  நோய்க் கிருமிகளை அழிக்க வேண்டுமானால், நாம் தினமும் குளிக்க வேண்டும்.

அற்புதங்கள் நிறைந்த கற்றாழை! 

தோ வெயில் காலம் வந்துவிட்டது, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதை பற்றி நாம் யோசித்து கொண்டிருக்கும் இத்தறுவாயில் கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகின்றது. சாதாரணமாக எங்கும் காணப்படும் கற்றாழை, எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டவை. கோடைக்காலத்தில் இதனை எப்படி பயன்படுத்தவது என்பதை பார்க்கலாம்.

வாட்டியெடுக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, கற்றாழை ஜீசை அருந்தலாம். கற்றாழையை சுத்தமாக கழுவி அதன் ஜெல்லை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து தண்ணீர்’ மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இந்த ஜெல்லை மோருடன் சேர்த்து குடித்தால் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.

கற்றாழை ஜெல்லினை முகத்தில் அப்ளை செய்து, சிறிது நேரம் வைத்து கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும், முகப்பருநீங்கும்.

இந்த ஜெல்லை தலைக்கும் தேய்த்து குளித்து வந்தால் உடல் உஷ்னம் நீங்கும், முடி உதிர்வது குறையும்.

இந்த சோற்று கற்றாழையை தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி தைலமாக தலைக்கு பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்லை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சருமம் வறண்டு போகாமல், முகம் இளமையாகவே இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...