0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

நளபாகம்… 
 • தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.
 • அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.
 • துவரம் பருப்புடன் இரண்டு மஞ்சள் பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.
 • கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.
 • வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
 • பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.
 • சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.
 • ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!
 • முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்… உடல் வலி குணமாகும்.
 • மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.
 • சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.
 • இட்லிமாவு அரைத்த பின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.
  -சுந்தரி காந்தி, சென்னை 

******************

கொத்தமல்லி  கருவேப்பிலை  டிப்ஸ்!
 • கருவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
 • கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
 • கருவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
  – சௌமியா சுப்ரமணியன், சென்னை 

******************

ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியங்கள்:

ராகி

கேழ்வரகில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிக அளவில் கால்சியம் உள்ளது. கேழ்வரகை தினமும் நாம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, உடல் சூட்டை தணிக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுத்தால் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைவர்கள்.

தினை

பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் தினையில் உள்ளது. கண்பார்வை சிறப்பாக இருக்கவும், இதயத்தைப் பலப்படுத்தவும் உறுதுணையாக இருக்கிறது. குழந்தைப் பெற்ற பெண்களுக்கு தினையைக் கூழாக்கித் தந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து அவர்களுக்கு அதிக பால் சுரக்க உதவுகிறது. மேலும் கபம் தொடர்பான நோய்கள் மற்றும் வாயுத்தொல்லையை போக்குகிறது.

 சாமை 

புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம்,
தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற சத்துக்கள் சாமையில் உள்ளது. மேலும், சாமை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.

குதிரைவாலி 

ட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும், செரிமானத்தின் போது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவாகப் பயன்படுகிறது. மேலும், உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்க ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக குதிரைவாலி செயல்படுகிறது.

கம்பு 

வைட்டமின்கள் நிறைந்துள்ள கம்பு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் வலிமையையும் தருகிறது. மேலும் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வு தருகின்றது, அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. நம் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கம்பில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

சோளம் 

நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துக்கள் சோளத்தில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. செரிமான குறைபாடுகள், இரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. இது, குடலுக்கு சத்தை கொடுத்து குடல் புற்றுநோயை தடுக்கக்கூடியது. கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிக அளவில் உள்ளது.
– கோவிந்தராஜன், சென்னை

1 COMMENT

 1. சோளத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்து
  மாவாக்கி அத்துடன் சிறிது தேங்காய் துருவல், தேவைக்கேற்ப வெல்லம், ஏலக்காய் பவுடர் போட்டு நீர் விட்டு பிசைந்து
  கொழுக்கட்டை செய்து ஆவியில் வேக வைத்து சாப்பிட்டால் மிகவும்
  சத்தாகவும்,சுவையாகவும் இருக்கும்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...