அன்பு வட்டம்!

அன்பு வட்டம்!
Published on

இளம் வயதில் மாமியாரைப் பிடிக்காத பெண்ணுக்கு, வயதான பிறகு மருமகளையும் பிடிக்காமல் போவதேன்?
ஆர்.வித்யா சதீஷ்குமார்,
பள்ளிக்கரணை

ந்த வீட்டு ஆணுக்கு பேலன்ஸ் பண்ணத் தெரியாததுதான்! அதென்ன எப்பப் பாரு பெண்களையே குறை சொல்வது? 'தட் மேன் கேரக்டர்' எப்படி இருக்கணும்னு யாரும் சொல்றதே இல்லையே? வெரி ராங்!
"எங்கம்மாவோட குணம் இது! அவங்களோட எதிர்பார்ப்பு இன்னின்னஅவங்க மனசைக் காயப்படுத்தினா, எனக்கும் வலிக்கும்!"னு புது மனைவிகிட்ட காதலா சொல்லிப் புரிய வைக்கணும்.
"அம்மா, நான் என்னிக்குமே உன் பிள்ளைதான்ஆனா, அவ என்னையே நம்பி வந்திருக்கா. உன்னோட அறுபது வருஷ அனுபவத்தை, இருபது வருஷ பெண்கிட்ட எதிர்பார்க்காதே! அவளை நீ வெறுத்தா, நம்ப சந்தோஷம் போய்விடும்"னு அம்மாகிட்ட பக்குவமா சொல்லிப் புரிய வைக்கணும். அதெல்லாம் செய்யாம, பல ஆண்கள் ஜடபர்தனா இருப்பதால்தான் எல்லா இமோஷன் + கமோஷன்!
அப்புறம்ஒரு வீடு வீடா இருக்கணும்னா, ஆட்சியும் அதிகாரமும் ஒரு இடத்தில்தான் இருக்கணும். அது யார் என்பதை 'காலம்' தீர்மானிக்கும். அதுவரை பொறுமையான அணுகுமுறை தேவை.
உங்கக் கேள்விக்கு சின்னதாய் இன்னொரு பதில் :
ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியுமா? ஹிஹி…!

அண்ணாத்த…?
எஸ்.மோகனா, சென்னை

'ணிக ரீதியாக வெற்றி'ன்னு என்னதான் முட்டு கொடுத்தாலும், இதுவரை வந்த எல்லா அண்ணன் தங்கை செண்டிமென்ட் படங்களின் கன்னாபின்னா கலவையே அண்ணாத்த!
70 ப்ளஸ் வயதான கதாநாயகனுக்கு ஏற்ற கதையைத் தயார் செய்வது சுலபம்! ஆனால், அது ரஜினிக்கான, 'மாஸ் ஹீரோ' படமாகவும் இருக்கணும். 'Pan India' படமாகவும் இருக்கணும். எல்லா மொழிகளுக்கும் ஏற்றபடி ஸ்டார்காஸ்ட் செய்த பிறகு, காட்சிகளை அதற்கேற்ப மாற்றியே ஆகணும். அப்புறம் தயாரிப்பாளர், ரஜினி பக்கத்திலிருந்து வரும் குறுக்கீடுகளை சமாளிக்கணும்கேக்கும்போதே டென்ஷன் ஏறுதுல்ல? இப்படிஎல்லாவற்றையும் காம்ப்ரமைஸ் செய்து, குழம்பினால் ரிசல்ட் வேறெப்படி இருக்கும்? என்ன அவசரம்? 2022 புத்தாண்டு திரைப்படமா சன் டீ.வி.யில் கட்டாயம் போடுவாங்க! அப்ப பார்த்தா போச்சு!

'சூப்' என்றதும் உங்கள் முதல் சாய்ஸ்?
வாசுதேவன், பெங்களூரு

நான் சைவம் என்பதால் வெஜிடேரியன் சூப் பற்றிதான் சொல்ல முடியும். .கே.வா?
மஷ்ரூம், வெஜிடபிள், ப்ரோக்கோலி என பலவித சூப்கள் இருந்தாலும் புளிப்பு, இனிப்பு, உப்பு, காரம், மணம், திடம், சுவை என எல்லாமே சப்ஜாடாக இருப்பதால், போடுங்கம்மா வோட்டு தக்காளிச் சின்னத்தைப் பார்த்து! தக்காளி சூப் மட்டுமே சூப்! மற்றதெல்லாம் டூப்!!
அதுலயும் வெளியில, 'சோ'ன்னு மழை பெய்யணும். அப்ப சூடான தக்காளி சூப்பில், கொஞ்சம் போல வறுத்த வெங்காயத்தாள், நெய்யில் புரட்டிய ரஸ்க் துண்டுகளை படகு போல மிதக்கவிட்டு, அதன் தலை மீது மிளகுத் தூளால் ஆசீர்வாதம் செஞ்சு கலக்கிவிட்டுப் பருகினால், ஆஹா… 'சூப்'பரோ 'சூப்'பர்!

உலகின் ஏழு அதிசயங்களில் தாங்கள் பார்த்து ரசித்தது எது மேடம்?எஸ்.கெஜலட்சுமி, லால்குடி

சில விஷயங்களை கிட்டத்திலிருந்து பார்ப்பதை விட தூரத்திலிருந்து பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும். கிட்டத்திலும் தூரத்திலும் பரவசம் தரக்கூடியது தாஜ்மகால்! பாரசீக, இந்திய, இஸ்லாமியக் கலப்பில் எழும்பி பிரம்மாண்டமாக நிற்கும் தாஜ்மகாலின் கட்டட அழகு, கலை மிளிர்வு, காதல் பரிசுஅடடா, உயரிய ரசனையின் மகோன்னதத்தைப் பார்த்து ரசிக்கலாம்!

கிட்டத்தட்ட 22 வருடங்கள், நூற்றுக்கணக்கானோர் இரவு பகல் பார்க்காமல் உழைத்து, மக்கள் மீது ஏராளமான வரிகளைச் சுமத்தி, காதல் மனைவி மும்தாஜுக்காகக் கட்டிய அந்தக் கல்லறையை, பின்னாளில் சிறையில் இருந்தபடி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கண்ணீர் வடிப்பாராம் ஷாஜகான்!

எனக்கென்னவோ, ராமர் என்னும் அரசர் தன் காதல் மனைவியை மீட்டுக் கொண்டு வர, கட்டிய ராமர் சேது பாலமே, தாஜ்மகாலை விட சிறப்பான காதல் சின்னமாகத் தோன்றுகிறது.

முன்னதில் தெரிவதுநிறைய மனைவிகள் உடைய ஓர் அரசனின் படோடோபம்; விரகப் பெருமூச்சு!

பின்னதில் தெரிவதுஏக பத்தினி விரதனின் காதல் + வீரம் + தெய்வீகம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com