ஜோக்ஸ்!

ஓவியம்: பிள்ளை
ஓவியம்: பிள்ளை
Published on

ஓவியம்: பிள்ளை

"என் மனைவி பண்டிகைக்கு துணி எடுக்கப் போனா, கடிகாரம்னு ஒண்ணு இருக்கறதையே மறந்துடுவா!"

"இது பரவாயில்லை… என் மனைவி காலண்டர்னு ஒண்ணு இருப்பதையே மறந்துடறா!"

——————-

"கட்சியின்
கலங்கரை விளக்கமேன்னு
தலைவருக்கு
போஸ்டர்
அடிச்சிருக்காங்களே?"

"ஆமாம்…
கட்சியிலே பாதி பேர் ஜெயிலுக்குப் போக, இவர்தான் வழி காட்டினாராம்!"

——————-

"உன் மாமனார் அத்தியாவசியப் பொருளுக்கு மாத்திரம்தான் செலவு பண்ணுவேன்னு லாஜிக் பேசுவாரே… பண்டிகைக்கு சீர் அனுப்பினாரா இல்லையா?"

"அனுப்பினாரு… பண்டிகை சீரா ஒரு வருஷத்துக்குத் தேவையான மாஸ்க், சானிடைஸர், ஹேண்ட் வாஷ் எல்லாம் அனுப்பி, ஒரு கொரோனா இன்சூரன்ஸும் போட்டுக் கொடுத்திருக்காரு…!"
– ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

——————-

"குடையை பையில் வைத்துக்கொண்டு
மழையில்
நனைஞ்சி வர்றீங்களே!"

"நீதான் குடை கொடுக்கும்போது, புதுக்குடை பத்திரம் பத்திரம்னு சொன்னீயே, அதான் குடை நனையாமல் பத்திரமாகக் கொண்டு வந்துவிட்டேன்!"

——————-


"அந்த ஹீரோ
ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டாலே நடுங்குகிறாரே!"

"பிறந்த நாளன்று குடம் குடமாக பால் கொண்டு வந்து அவர் தலையில் அபிஷேகம் பண்ணிட்டாங்களாம்!"

——————-

"என்னங்க… தாலி கட்டி கொஞ்ச நேரத்திலேயே மணப்பெண் தாலியைக் கழற்றுகிறாள்?"

"மாப்பிள்ளையும் நடிகர் என்பதால் சினிமா ஷூட்டிங்குன்னு நினைச்சுட்டாங்க போலிருக்கு!"
-பவானி, திருச்சி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com