0,00 INR

No products in the cart.

குழந்தைகளைக் கொண்டாடுவோம்! – (குட்டீஸ் லூட்டீஸ்!)

நவம்பர் 14 – குழந்தைகள் தினம்!

மங்கையர் மலர் FB வழியாக வந்த குட்டீஸ் சுட்டீஸ் லூட்டி!

ங்க அபார்ட்மெண்ட் சுட்டி குட்டி மணிகண்டன் (இடமிருந்து வலம் இரண்டாவது) வித்தியாசமான கேள்விகள் கேட்டு அசத்துவான். ஒரு நாள் வந்து என்னிடம், ‘‘பாட்டி, ரெண்டு சைபர் உள்ள நம்பர் சொல்லுங்க’’ன்னு கேட்டான். நானும், டக்குன்னு நூறுன்னு சொல்ல, அவனோ இல்லன்னு சொல்லிட்டு, ரெண்டு சைபர் உள்ள நம்பர் இருபதுன்னு சொல்லநா முழிக்க, கணவர் சிரித்தார். இப்படி இன்னும் நிறைய சுட்டித்தனம் உண்டு குட்டி மணிகண்டனிடம்.
என்.கோமதி, நெல்லை

——————-

ன் பேரன் மூன்று வயது சச்சின் ஒரு நாள் எங்களுக்குத் தெரியாமல் நைசாக சாக்லேட் எடுத்து சாப்பிட்டுவிட்டு எங்கள் முன் வந்து நின்று அசடு வழிய சிரித்துக்கொண்டே,

‘‘பாட்டி, சாக்லேட் குடு பாட்டி’’ என்று பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான். அவனுடைய முகம், கைகள், போட்டிருந்த சட்டை எல்லாவற்றிலும் சாக்லேட் வழிந்து ஈஷிக் கொண்டிருந்ததைக் காட்டி, ‘‘இது யார் சாப்பிட்டது?’’ என்று கேட்டதும், ‘‘அதை சாப்பிட்டது நான் இல்லை பாட்டி. நான் தூங்கும்போது மான்ஸ்டர் சாப்பிட்டுவிட்டு, கையை என் மேலே துடைச்சுடுத்து பாட்டி’’ என்று சொல்லி சமாளித்ததற்காகவே அவனுக்கு முத்தமிட்டு இன்னொரு சாக்லேட் கொடுத்தேன்.

ன் பேத்தி அனன்யா இரண்டரை வயதாகும்போது ஒரு நாள் மதிய நேரத்தில் அனைவரும் தூங்கும் சமயத்தில் கோலப்பொடி டப்பாவை எடுத்து உமாச்சிக்கு கோலம் போடலாமென்று நினைத்து, பூஜை அறை முழுவதும் கன்னாபின்னாவென்று கோல மாவைக் கொட்டியதோடு, முகம், கைகள், சட்டை, பேண்ட் எல்லாவற்றிலும் கோல மாவை அப்பிக் கொண்டு தான் போட்ட கோலத்தை (?) ரசித்துக்கொண்டு நின்றாள்.

குழந்தையைக் காணோமென்று தேடி வந்த என் மகள், அனன்யா கோலத்தை ரசிப்பதைப் போட்டோ எடுத்து பிறகு எங்களிடம் காட்டினாள். பெரியவர்கள் சற்று கண்ணயர்ந்த நேரத்தில் குழந்தை அடித்த லூட்டி இது.
ஹேமலதா ஸ்ரீனிவாசன், பம்மல்

ங்கள் பேரன் பிராக்ஷித் மிகவும் குறும்புத்தனம் செய்பவன்.
ஐந்து வயது ஆகிறது. தொலைக்காட்சி பார்த்துவிட்டு அதன்படியே
சில சமயங்களில் இமிடேட் செய்வான்
. நடிகரின் ஸ்டைல்களை
செய்து பார்ப்பான்
.
நாகினி படம் பார்த்து விட்டு பாம்பைப் போலவே தரையில் நெளிந்து
அதகளப்படுத்தி விட்டான்
.
கதைகளை
சொல்லும்போதும் அப்படித்தான்
. கேள்விகளாகக் கேட்டு
பதிலும் அவனே சொல்லி விடுவான்
.
வாணி கணபதி, பள்ளிக்கரணை

——————-

னக்கு இரண்டு பேரன்கள். இரண்டாவது பேரன் படு சுட்டி. ‘‘தோசைக்கு சாம்பார் ஊத்தப்போறேன்’’ என்று ஊற்றி விட்டு, அவன் ஜீனியை தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘‘சாம்பார் ஊத்தப்போறேன்னு சொன்னியே, சாம்பார காணோம்’’ என்றதுக்கு. ‘‘மாவுல ஊத்திட்டேன் பாட்டி’’ என்றானே பார்க்கலாம். அன்று அனைவருக்கும் மஞ்சள் கலர் தோசைதான். மஞ்சள் கலர் டி சார்ட் போட்டு. ‘‘ஆஹா ஜெயிச்சுட்டேன்’’ என்பது போல, இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டிருக்கிறானே அந்த சுட்டிதான். பெயர் ரத்தன். அவன் அருகில் இருப்பது அவன் அண்ணன் ரஞ்சன்.
ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

——————-

ங்கள் ஐந்து வயது மகன் கார்த்திக்கு மொட்டை போட்டு, காது குத்த பழனிக்கு சென்றோம்.
காது குத்தியதும், வலி தாங்காமல் ரொம்ப அழுதான். சாமி கும்பிட்டு விட்டு யானைப் பாதையில் இறங்கினோம்.
ஆட்கள் அதிகமில்லை.
மகனின் அழுகையும் நிக்கலை.
என் காது வளையத்தைப் பிடுங்கி தூர எறிந்தான். அப்போது, தும்பைப்பூ போன்ற வெள்ளை நிற ஆடையில் ஒரு மூதாட்டி அருகில் வந்தார். குழந்தையை வாங்கி சமாதானம் செய்தார்.
பின் என்னிடம் தந்தபோது, மகனின் அழுகை முற்றிலும் நின்றிருந்தது. திரும்பிப் பார்த்தபோது மூதாட்டி அங்கில்லை. வந்தது அந்த
முருகனேதான் என்று பரவசமாகி
, ‘முருகனுக்கு அரோகரா’ என்று சொன்னபடி
கீழிறங்கினோம்
.
ஜெயகாந்தி மகாதேவன்,
சென்னை

——————-

ன்னுடைய பேத்தி ஸ்ரீசரஸிஜா.
தற்போது அவளுக்கு வயது ஐந்து.
அவளுக்கு மூன்று வயதாக
இருக்கும்பொழுது
, ‘‘அம்மா, பெரிய பூச்சி பாரு’’ என்று தன் தாயிடம் சொல்லி இருக்கிறாள். என் மகளும் பதறிப்போய், ‘‘எங்கேஎங்கே…?’’ என்று தேடியபொழுது, ஸ்ரீ சரஸிஜா
தன் நிழலையே பூச்சி என்று காண்பித்து
, பிடித்துக்கொடுக்க வேறு முயற்சித்தாள்.
அது பூச்சி இல்லை என்று
விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது என் மகளுக்கு
.

ங்களுடைய பேத்தி தேஜஸ்வினி ஒரு நாள் மல்லிகைச் செடியில் பூத்து வந்த மலர்களை எண்ணிவிட்டு, ‘‘திட்ட கிட்ட திட்ட கிட்ட எய்ட் ஃப்ளவர்ஸ்’’ என்று மீண்டும் மீண்டும் கூற, எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான் புரிஞ்சது, அவள் கிட்டத்தட்ட என்பதைத்தான், ‘திட்ட கிட்ட’ என்று கூறியிருக்கிறாள் என்பதே.
சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்

——————-

ன் பையனுக்கு ஆறு வயது வரை,க’ என்று சொல்ல வராது. ‘க’வுக்குப் பதில்,த’ போட்டுப் பேசி விடுவான். ‘மரத்துல தாக்கா’ என்பான். அவன் டீச்சர் அவனிடம்,வீட்டிற்குப் போய் என்ன சாப்பிடுவே?’ என்று கேட்டதற்கு,தாப்பி துடிப்பேன்’ என்று சொன்னதும், அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இவனைக் கலாய்ப்பதற்காகவே என் உறவுக்காரப் பெண் ஒருத்தி இவனை,கொக்கு பறபற, குருவி பறபற, கிளியே பறபற, கோழி பறபற, காக்கா பறபற’ என்று சொல்லச் சொல்வாள். இவனும்.தொத்து பறபற, துருவி பறபற, திளியே பறபற, தோழி பறபற, தாத்தா பறபற’ என்று சொல்வான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.
ராதிகா ரவீந்திரன், சென்னை

——————-

னடாவில் வசிக்கும் எங்கள் மகள் மற்றும் பேத்தியுடன் வாட்ஸ் அப் மூலம் பேசுவோம். அன்றும் அதுபோல் பேசும்பொழுது,கான்பெரன்ஸ்’ வசதி மூலம் நானும் என் மனைவியும் எங்கள் வீட்டின் வெவ்வேறு அறையிலிருந்து பேசிகொண்டு இருந்தோம். அந்நேரம் போன் சரியாகக் கேட்காததால், ‘‘அப்பா, அம்மா காலை கட் பண்ணுங்க. சரியாகக் கேட்கவில்லை’’ என்று என் மகள் கூறவும், எங்களது நான்கு வயது பேத்தி மணிஷிகா, ‘‘ஐயோ, காலை கட் பண்ணிணால் ஆச்சி எப்படி நடப்பாங்க?’’ என்று கூறியபோது, அவளின் அன்பையும், பாசத்தையும் எண்ணி மகிழ்ந்தோம். அவள்தான் எங்கள் வீட்டு தேவதையாக ஜொலிக்கிறாள்.
சுந்தரிகாந்தி, பூந்தமல்லி

——————-

ங்கள் வீட்டுக் குட்டியின் பெயர் ஸ்ரீயது. நான்கு வயது ஆகிறது. அப்பப்பாஅப்படி ஒரு சேட்டை பண்ணுவான். அவன் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்கணும். ஒரு பண்டிகை நாளன்று, எல்லோரும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்தில் இவனைக் கவனிக்க மறந்து விட்டோம். அறையை விட்டு வெளியே போனவன், கதவைத் தாழ்ப்பாள் போட்டு விட்டான். சிறிது நேரம் கழித்து, குழந்தையைத் தேடி, கதவைத் திறக்கப்போனால், பூட்டி உள்ளது. கதவைத் தட்டி, ‘‘திறம்மாயது எங்க இருக்க?’’ என்றெல்லாம் கத்தினோம். பதிலே வரவில்லை. ஒரு பத்து நிமிடம் கழித்து, அவனாகவே திறந்தான். சமையல் அறைக்குப் போய், சர்க்கரை டப்பாவைத் திறந்து, வாய் நிறைய சர்க்கரையைப் போட்டுக்கொண்டு ஒளிந்திருக்கிறாள்.

அவன் மேல் கோபப்படவும் முடியல. ‘நல்ல வேளைகதவு தாழ்ப்பாளைத் திறந்தானே’ என்று சந்தோஷப்பட்டோம். தனி ஆளாக, அவனைப் பார்த்துக்கொள்ளவே முடியாது. நிறைய சேட்டைகள் பண்ணினாலும், பயங்கர புத்திசாலி. என்ன கத்துக் கொடுத்தாலும், உடனே புரிந்துகொள்வான்.
ஜெயா சம்பத், கொரட்டூர்

——————-

தெரு நாய்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் உடைய என் மகளுக்கு, ஒரு நாள் நாய்களைக் காண்பித்து சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போது அவளுக்கு திடீரென்று விக்கல் எடுக்கவே, சாதத்தை அங்கே வைத்துவிட்டு உள்ளே தண்ணீர் எடுக்கச் சென்று திரும்பி வருவதற்குள் அந்தப் பாத்திரத்தில் இருந்த அவ்வளவு சாதத்தையும் நாய்களுக்குப் போட்டுவிட்டாள். ‘‘ஏன் போட்ட?’’ என்று கேட்டதற்கு, ‘‘பாவம், தோத்தோவிற்கு தொப்பை பசிக்கும் இல்லையா? அதான் போட்டேன்’’ என்று அவள் வெகுளியாக சொல்லிச் சிரித்ததை நான் ரசித்து அவளுக்கு வேறு சாதம் ஊட்டினேன்.
உஷா முத்துராமன்,
திருநகர்

——————-

சிறு வயதில் இருந்தே என் மகனிடம், ‘புதியவர் யாரேனும் அழைத்தால் பேசக்கூடாது, ஏதேனும் கொடுத்தால் வாங்கக் கூடாது’ எனக் கூறி இருந்தேன். அதை நானே மறந்தாலும், அடிக்கடி அதை ஞாபகப் படுத்துவதே அவனுடைய வேலை ஆகி விட்டது. நான் கடைக்குச் சென்றாலோ, வெளி இடத்துக்குச் சென்றாலோ, எனக்கு ஒருவரைத் தெரிந்து இருந்தாலும், அவனுக்கு அவர்களைப் பார்ப்பது புதிதாக இருந்ததால், என் மகன் என்னிடம், ‘‘ஏன் அவங்கக்கிட்ட பேசுறம்மா. அவர் யாருன்னு தெரியல. அவங்கக்கிட்ட போய் பேசிட்டு இருக்க’’ன்னு அவங்க முன்னாடியே சொல்றான்!
வினோப்ரியா முருகன்

——————-

டந்த பிள்ளையார் சதுர்த்தி அன்று என் பேரனுக்கு பிள்ளையார் வேடம் போட்டு போட்டோ எடுத்தோம். அப்போது கைவசம் மாம்பழம் இல்லாததால், மாதுளம் பழத்தை கையில் கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னேன். உடனே அவன், ‘‘பாட்டி, பிள்ளையார் கையில் மாம்பழம்தானே தரணும். நீ ஏன் மாதுளம் பழம் கொடுக்கிறாய்’’ என்றான். நானும் சமாளிக்க, ‘‘ஏண்டா, பிள்ளையார் மாதுளம் பழம் சாப்பிட மாட்டாரா?’’ எனக் கேட்க, அவனோ சீரியஸாகி, ‘‘இல்லை பாட்டி, நீதானே பிள்ளையார் அம்மா அப்பாவை சுற்றி வந்ததும் ஈசன் பிள்ளையாருக்கு மாம்பழம் கொடுத்தார். முருகன் சாமி கோச்சுண்டு போய்விட்டார்னு சொன்ன’’ என்றானே பார்க்கலாம். நாம் சொன்ன கதையை எவ்வளவு அழகாக உள்வாங்கி இருக்கிறான் என ஆச்சரியப்பட்டுப் போனேன்.
கே.எஸ்.கிருஷ்ணவேணி

——————-

போன மாதம் எங்கள் உறவுகளோடு குலதெய்வம் கோயிலுக்குச் சென்று இருந்தோம். வழிபாடு முடித்த பின், மதியம் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். வீட்டிலேயே சமையல் செய்து எடுத்துக்கொண்டு சென்றதால், நாங்களே பரிமாற ஆரம்பித்தோம். அப்போது என் எட்டு வயது பேத்தி ஹஸ்விதா, ‘‘பாட்டி, நானும் பரிமாறுகிறேன்’’ எனக் கேட்டதும், லட்டு வைத்திருந்த தூக்கை கையில் கொடுத்து, ‘‘ஒவ்வொரு இலையிலும் ஒரு லட்டுதான் வைக்க வேண்டும். எல்லோருக்கும் வேண்டும். சரியா?’’ என்றேன். அவளும், ‘எஸ்’ என்று தலையை ஆட்டிவிட்டு, பரிமாற ஓடினாள்.

எல்லோரும் அமர்ந்து இருக்க, ஹஸ்விதா லட்டை இலையில் வைத்துக்கொண்டே போகும் போது என் அண்ணா, ‘‘ஒரு லட்டு போதும்மா’’ என்றதும், ‘‘ஆமாம்தாத்தா, பானு பாட்டி ஒண்ணுதான் வைக்கணும்னு சொன்னாங்க. யாருக்காவது இன்னொன்னு வேணுன்னா பாட்டிய கேளுங்க’’ என்றதும், பந்தியில் அமர்ந்து இருந்த அனைவரும் சிரித்ததோடு, என்னையும் கேலி செய்ய ஆரம்பித்து விட்டனர். குழந்தைகள் கிளிப்பிள்ளை போலநாம் சொல்வதைச் சொல்வார்கள் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
பானு பெரியதம்பி, சேலம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...