0,00 INR

No products in the cart.

திருக்கார்த்திகை திருநாள்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க!

கார்த்திகை விழா குறித்து புராணங்கள் பலவித காரணங்களைச் சொன்னாலும், மூன்று காரணங்கள் முக்கியமாகப் போற்றப்படுகின்றன.

மலையாய் அமர்ந்த மகாதேவன், அடி முடி காணாவண்ணம் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் காட்சி தந்து, அவர்களின் அறியாமையை நீக்கி, நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாய் அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும்.

தீப்பொறியாய் உதித்த சரவணன் :
சனின் ஆறு முகங்களிலிருந்து தீப்பொறியாய் உதித்த சண்முகக் கடவுளை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகைப் பெண்கள். அவர்களுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை கார்த்திகேயனாக வழிபட, நற்பேறுகள் யாவும் கிடைக்கும் என்பது முருகப் பெருமான் தந்தருளிய வரம். அதன்படி இந்நாள் கார்த்திகேயக் கடவுளுக்குரிய நாளாகவும் போற்றப்படுகிறது.

தீபமாக நின்ற திருமால் :
ஒருமுறை கலைவாணி சரஸ்வதிக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்றை நடத்தினான். இதனால் சினந்த சரஸ்வதி யாகத்தை அழிக்க அசுரன் ஒருவன் ஏவினாள். அவன் யாகத்தை தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதையும் இருட்டாக்கினான். உடன் பிரம்ம தேவன், திருமாலை வேண்டி நிற்க, பகவான் ஜோதியாய் ஒளிர்ந்து இருளை விரட்டி, யாகத்தைக் காத்தருளினார். இப்படி ஜோதியாய் தோன்றிய விஷ்ணுவை தீப உருவில் வணங்குவர் வைணவர்கள். திருக்கார்த்திகையன்று குறிப்பிட்ட நியதிகளோடு தீபங்கள் ஏற்றி கார்த்திகை தெய்வங்களை வழிபடுவதால் நம் வாழ்விலும் துன்ப இருளகன்று, இன்பவொளி பிறக்கும்.

திருக்கார்த்திகை தீபம் :
l தீபங்கள் பதினாறு : தூபம், தீபம், புஷ்ப தீபம், நாத தீபம், புருஷா மிருக தீபம், கஜ தீபம், ருயாஜத தீபம், வியாக்ர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், விருக்ஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், மேரு தீபம், கற்பூர தீபம் என தீபங்கள் பதினாறு வகைப்படும்.

l தீபம் ஏற்றும் முறைகள் பத்து : தரையில் வரிசையாக ஏற்றுதல், தரை மீது கோலம் போட்டு வட்டமாக தீபம் ஏற்றுதல், சித்ர தீபம், மாலா தீபம், அடுக்கு தீபம், ஆகாச தீபம், ஜல தீபம் (நீரில் மிதக்க விடுவது), நௌகா தீபம் (படகு போன்று கட்டி பெரிய தீபமாக ஏற்றி நீரில் மிதக்க விடுவது), கோபுர தீபம் (கோயில் கோபுரங்களின் மீது தீபம் ஏற்றுதல்), ஸர்வ தீபம் (இல்லத்தில் முழுவதும் தீப மேற்றுவது.)

l வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம், குங்குமம் இட வேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகங்களில் பொட்டு இட வேண்டும். அவை : உச்சி, முகங்கள் ஐந்து, தீப ஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும், பொட்டிடும்போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சமி, கஜ லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி ஆகியோரை நினைத்து தியானித்து இட வேண்டும். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைக்கப்படுவதற்கு தத்துவ ரீதியாகவும் ஒரு காரணம் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்றும் உயிர் தத்துவத்தையும் இந்த எட்டு பொட்டுகள் குறிக்கின்றன.

l திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளையும் அவசியம் ஏற்ற வேண்டும். இவ்வழிபாட்டில் சாம்பிராணி, பக்தி போன்ற தூப தீபங்களை திருவிளக்கு ஜோதிக்கு முதலில் காண்பிக்க வேண்டியது அவசியமாகும்.

மகா தீபமும் மகாவிஷ்ணுவும் :
l கார்த்திகை மாத சுக்ல பட்ச துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். அன்று துளசி தேவி மகாவிஷ்ணுவை மணந்து கொண்டதாக ஐதீகம். துளசி மணிமாலை அணிபவரிடம் லட்சுமி வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

l கார்த்திகை மாதம் முழுக்க மகாவிஷ்ணுவை புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவர்களாலும் அடைய முடியாத பாக்கியத்தை அடைவார்கள். துளசி தளத்தால் அர்ச்சனை செய்தால் அர்ப்பணிக்கும் ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

l பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை திருவிழாவினை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கார்த்திகை பௌர்ணமி விழா அன்று ஸ்ரீரங்கநாதர், சக்கரத்தாழ்வார் சன்னிதியில் எழுந்தருளுவார். அப்போது கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனையை பெருமாள் முன்னிலையில் ஏற்றுவார்கள். பெருமாள் அக்காட்சியைக் கண்டருளுவார். பிறகு சந்தன மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அங்கே அரையர்கள் திருமங்கையாழ்வார் பாடிய, ‘வாடினேன்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடுவார்கள். அதற்குப் பின் வரவிருக்கும் மார்கழி மாதத் திருநாளுக்காக நம்மாழ்வாருக்கு விவரமாக கடிதம் எழுதுவார்கள். இதனை, ‘ஸ்ரீமுகப்பட்டயம்’ எழுதியருளும் நிகழ்ச்சி என்பர். இந்நிகழ்வு நிறைவு பெற்றதும் பெருமாள் கோயிலுக்குச் செல்வார். பெருமாள் முன்னிலையில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியை தரிசித்தால் முன்வினைப் பாவங்கள் போகும்.

தீப தாத்பர்யம் :
கார்த்திகையன்று வீட்டில் தீபம் ஏற்றுவது தெரிந்ததுதான். ஆனால், அதிலும் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. 27 தீபங்களை இப்படி ஏற்ற வேண்டும். முற்றம் – 4, சமையலறை – 1, நடையில் – 2, பின் கட்டில் – 4, திண்ணையில் – 4, மாடம் – 2, நிலைப்படி – 2, சாமி படத்துக்குக் கீழே – 2, வெளியில் யம தீபம் – 1, கோலத்தில் – 5 மொத்தம் 27 தீபங்கள். இது 27 நட்சத்திரங்களைக் குறிக்கிறது.
-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி

திருவிளக்குத் துளிகள்

 • வாரம் ஒருமுறையாவது விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள சுமங்கலி பெண்கள் விளக்கை ஏற்றி பூஜை செய்வது சிறப்பு.
 • விளக்கில் உள்ள எல்லா முகங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும். திருவிளக்குக்கு சந்தனம்இ குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
 • விளக்கில் எப்போதும் குளம் போல் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.
 • வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல சுபிட்சங்களும் உண்டாகும்.
 • வீட்டில் உள்ள திருவிளக்கை வெறும் தரையில் வைக்கக்கூடாது.
  .எஸ். கோவிந்தராஜன், சென்னை

1 COMMENT

 1. திருக்கார்த்திகை திருநாள் விழா எதற்காக
  ெ கா ண்டாடப் படுகிறது ? புராணங்கள என்ன ெ சா ல்கிறது? எப்படி தீபம் ஏற் றவேண்டும்? ே பா ன்ற கே ள்விகளுக்கு
  வாசகர்கள் மூலம் பதிலுரைத்த மங்கை யர்
  மலருக்கு திருக்கார்த்திகை தீபஔி வாழ்த்துகள்.
  து.சேரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...