கைகளைப் பராமரித்து கைதட்டல் பெறுவோம்!

கைகளைப் பராமரித்து கைதட்டல் பெறுவோம்!
Published on

அழகோ அழகு – 3

– அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

ம் கைகள் மிருதுவாகவும் பளபளப்புடனும் இருந்தால் தனி அழகுதானே? அதோடு, விரல் நகங்களும் பிங்க் நிறத்தில் ஆரோக்கியமாக இருந்தால் அழகுக்கு அழகு சேர்த்த மாதிரிதானே? கைகள், விரல் நகங்களைப் பராமரிப்பது, எப்போதும் இளமையாகவே வைத்திருப்பது எப்படி? பார்ப்போமா?

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

சிலருக்குக் கைகள் முழங்கை வரை அல்லது அதற்கு மேலும் கறுத்துக் காணப்படும். இந்தக் கறுமையை நீக்குவது எப்படி? பால் பவுடரில் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழைத்து கைகளின் மேல் தடவி பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் கழித்து சுழற்சி (rotary movement) மசாஜ் செய்வது போல நன்றாக ஸ்க்ரப் (scrub) செய்து, பின்னர் குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யலாம்.

எண்ணெய் சுரப்பிகள் குறைபாடு காரணமாக, சிலருக்கு கைகள் உலர்ந்து வறட்சியாகக் காணப்படும். அதிலும், இந்தக் கொரோனா காலத்தில் சானிடைசர் உபயோகிப்பதாலும், அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைச் சுத்தம் செய்வதாலும் கொரோனாவிலிருந்து தப்பித்தாலும், கைகள் வறட்சி அடைவதிலிருந்து தப்புவது கடினம். மாய்ஸ்சரைசர் (moisturizer) உபயோகிப்பதன் மூலம் இந்த வறட்சியைத் தடுக்கலாம்.

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதானே? கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, ஸ்க்ரப் செய்வது, தண்ணீருக்கடியில் கைகளை அதிக நேரம் வைத்திருப்பது, கடினமான துவாலையால் துடைப்பது எல்லாம் கூட கைகளை வறட்சி அடையச் செய்து விடும். இதற்கான சிறந்த தீர்வு நம் வீட்டில் உள்ள பொருட்களிலிருந்தே கிடைக்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை (சிறந்த ஸ்க்ரப்பர்), ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் (சருமத்தில் உள்ள கொழுப்பு மற்றும் தண்ணீர் சத்துக்களைத் தக்க வைக்கும்), ஒரு டேபிள் ஸ்பூன் தேன் (சிறந்த மாய்ஸ்சரைசர்) மூன்றும் கலந்து கைகள், நகங்களில் தடவி, பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் ஊறிய பின் சுத்தம் செய்யலாம்.

கங்கள் அடிக்கடி உடைந்துபோவது அநேகமாக எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்னை. கால்சியம் அல்லது விட்டமின் D குறைபாடு காரணமாக இருந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை தேவை. புரோட்டின் (protein) சத்து நிறைந்த உணவுகள், சோயா மற்றும் ஆல்மண்ட் (almond) பால், பால் சார்ந்த உணவுப் பொருட்கள் எடுத்துக்கொள்வது அவசியம். ஆலிவ், பாதாம், தேங்காய் மூன்று எண்ணெய்களும் தலா ஒரு டீஸ்பூன் வீதம் கலந்து ஒவ்வொரு நகத்தின் மீதும் மசாஜ் செய்வது போல தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். நகங்களில் காணப்படும் கோடுகள், வெண் புள்ளிகள் போன்றவற்றிற்கும் இது நல்ல தீர்வு. கைகளுக்கும், உடலுக்கும் (முகத்திற்கு அல்ல) மட்டும் கிடைக்கக்கூடிய மாய்ஸ்சரைசர் உபயோகிக்கலாம். வெளியில் அதிகம் செல்பவர்கள், குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது மிக அவசியம். கைகளுக்கு பருத்தியினாலான நீளக் கையுறைகள் (வெள்ளை மற்றும் சரும நிற வண்ணம்) அணிந்து செல்லலாம்.

கிளிசரின் நான்கு டீஸ்பூன், மூன்று டீஸ்பூன் ரோஸ் வாட்டர் இவற்றுடன் எட்டு துளிகள் எலுமிச்சை சாறு கலவை கைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். கைகளில் உண்டாகும் சுருக்கங்களுக்கு தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த நிவாரணி. விதவிதமான வாசனைகளில் கிடைக்கும் candle wax வாங்கி சூடுபடுத்தி, பொறுக்கும் சூட்டில் தேங்காய் எண்ணெய் மேலேயே தடவி, பத்து நிமிடங்கள் கழித்து மெழுகை நீக்கிவிட்டு சுத்தம் செய்தால் கோடுகள் மறையும். இது மெழுகு குளியல் (wax bath) எனப்படும்.

கங்களின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் ஆலிவ் எண்ணெயே போதுமானது. ஆலிவ் எண்ணையை லேசாக சூடு பண்ணி நகங்கள் மூழ்கும் வரை ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பின் நகங்களை நன்றாகத் துடைக்கவும். பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரில் சுத்தம் செய்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும். நகச்சுற்று அறவே வராது.

கடலை மாவு நான்கைந்து டேபிள் ஸ்பூன், அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், நான்கைந்து டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து நன்கு அடித்து கைகளில் தடவி பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து வாஷ் செய்தால் கைகள் மிருதுவாகவும், இளமையாகவும் இருக்கும். நகங்களுக்கும் இது பொருந்தும்.

பாக்டீரியா பாதிப்பால் பூஞ்சை பிடித்த நகங்களை உடையவர்கள் மேற்சொன்னபடி எடுத்துக் கொள்வதே நல்லது.

இனி, சில குட்டி குட்டி ஈஸியான டிப்ஸ் இதோ உங்களுக்காக:

விட்டமின் மற்றும் சிலிகான் சத்துக்கள் நிறைந்த வெள்ளரியின் சாற்றில் கைகளை ஊற வைத்து பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம். வாரத்தில் இரண்டு மூன்று முறை இதை செய்வது நல்லது.

முதல் நாள் இரவே ஊற வைத்த நான்கைந்து பாதாமை மறுநாள் தோல் நீக்கி நன்கு அரைத்து பாலுடன் கலந்து கைகள், நகங்களில் தடவி பத்து பதினைந்து நிமிடங்களுக்குப் பின் நீரில் சுத்தம் செய்யலாம்.

நன்கு பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தை சர்க்கரையில் தோய்த்து மசாஜ் செய்வது போல் நன்கு தடவலாம்.

அழகு நிலையங்களிலும் கைகள், நகங்களுக்கான சிகிச்சை முறைகள் உள்ளன, Manicure, உடைந்த நகங்களுக்கான செயற்கை நகங்கள், நக அலங்காரங்கள், கைகள் whitening போன்ற பல வகைகள் உண்டு. அவரவர் தேவைக்கேற்ப செய்து கொள்ளலாம்.

தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com