0,00 INR

No products in the cart.

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை!
-தனுஜா ஜெயராமன்.

பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங், மாரத்தான், என பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் குடும்ப தலைவி இவர். தற்போது உலக அளவிலான ட்ரையத்லான் போட்டிகளில் பற்கேற்க பயிற்சிகள் எடுத்து வருகிறார்.

அவர் நமது மங்கையர்மலருக்காக பேசியதிலிருந்து சில துளிகள்…

“நான் 45 வயது வரை சாதாரணமாக வேலைக்குச் செல்லும் ஓரு பெண்மணியாக  தான் எனது கடமைகளை நிறைவேற்றி வந்தேன். திடீரென ஏற்பட்ட என் தந்தையின் இழப்பு என்னை பெரும் மன அழுத்தத்தில் தள்ளியது. அந்த வெறுமை தந்த கணத்தை தாங்க இயலாமல் மகனின் சைக்கிளை எடுத்து ஓட்டிப் பழகினேன்.  சைக்கிள் ஓட்டுவதில் மனதில் மகிழ்ச்சியும்  கூடுதல் ஆர்வமும் வந்தது. அப்போது தான் எனக்கு இதனை பயிற்சியாக மேற்கொண்டால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. அந்த விதை இன்று மரமாகி இந்த நான்கு வருடங்களில் என்னை சாதனை யாளராக மாற்றி விட்டது. இதுவரை 45,000 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டியிருக்கிறேன்.

பிரான்ஸ் நடத்தி வரும் ரேண்டனார் போட்டியில் இதுவரை மூன்று முறை ‘சூப்பர் ரேண்டனர்’ பட்டத்தை வென்றிருக்கிறேன். சைக்கிளிங்கில் ஒரே வருடத்தில் 200, 300,400,600 கிமீ   போட்டிகளில்  ஓட்டியவர்களுக்கு இப் பட்டத்தை வழங்குவார்கள். திருச்சியிலிருந்து தனுஷ்கோடி வரை 600 கிமீ  சைக்கிள் ஓட்டியது மறக்க இயலாத அனுபவம்.

அதே போல் ரன்னிங்கில் இதுவரை 4000 கி.மீ ஓடியுள்ளேன். மாரத்தான் ஓடுவதும் எனது சாதனைகளில் ஒன்று. அதில் இதுவரை ஏராளமான பரிசுகளும், மெடல்களும் வாங்கியுள்ளேன்,” என்கிறார் மஹாலக்ஷ்மி.

இவர் சென்னையில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறார். மதுரையில் நடந்த மாநில அளவிலான  போட்டியில் 5000 மீ போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார். அதன் பிறகு தேசிய அளவிலான போட்டியில் 5000 மீ ஓட்ட பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 1500 மீ போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார். தற்போது உலக அளவிலான போட்டிக்காக ட்ரையத்லான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உங்களது ட்ரையத்லான் பயற்சி குறிந்து சொல்லுங்களேன்?

முதலில் நீச்சல், அடுத்ததாக சைக்கிளிங், மற்றும் ரன்னிங் மூன்றையும் தொடர்ந்து செய்ய வேண்டும். இதில் ஸ்பிரிண்ட் மற்றும் ஒலிம்பிக் என்கிற இரண்டு கேட்டகிரி உண்டு. அதில் Iron Man என்கிற பட்டம் உண்டு.  உடலளவிலும் சரி, மனதளவிலும்சரி மிகவும் வலிமையானவர்களால் மட்டுமே அந்த மூன்று கட்டத்தையும் முடிக்க இயலும்.  நான்  தற்போது Half Iron Man பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதில் 1.45 கிமீ கடலில் நீந்தணும், அதன் பிறகு 90 கிமீ சைக்கிள் ஓட்ட வேண்டும். அதை முடித்து 21 கிமீ ஓட வேண்டும். இந்த மூன்றையும் முடித்தால் Half Iron Man பட்டம் கிடைக்கும்.

இதைத் தவிர உங்களது துறையில் எதிர்கால லட்சியம்?

சைக்கிளிங்கில் சரித்திர புகழ் மிக்க போட்டி ஒன்று உள்ளது. அது ப்ரான்ஸ் அரசாங்கம் சார்பாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன் பெயர் PBP அதாவது பாரிஸிலிருந்து – ப்ரஸ்ட் மற்றும் ப்ரஸ்ட்டிலிருந்து- பாரீஸ் செல்கிற ஈவன்ட் அது. இதில் பனி, மழை, வெயில், குளிர் என பல்வேறு பருவநிலை மாற்றங்களில் 90 மணி நேரத்தில் பயணிக்க வேண்டும். சவால் நிறைந்த இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமல்ல லட்சியம்.

உங்கள் தலைமுறைப் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

ந்த சாதனைகளுக்கும் வயது ஒரு தடையல்ல. பயிற்சியும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதும் பல்வேறு சாதனைகள் படைக்கலாம். பெண்கள் தங்கள் குடும்பத்தை கவனிப்பதோடு நின்று விடாமல் தனக்கென்று நேரத்தை ஒதுக்கி தங்களது ஆர்வங்களை, ஆசைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முன் வரவேண்டும். விடாமுயற்சி இருந்தால் வெற்றிகள் உங்கள் காலடியில்.

ஒரு தனியார் நிறுவனத்தில்  மேனேஜராக பணியாற்றும் மஹாலக்ஷ்மியின் இந்த சாதனைகளுக்கு பின்புலமாக, பக்கபலமாக இருப்பது அவரது கணவர் ரவியும் அவரது குடும்பமும்தான் என்கிறார். “இந்தப் பயிற்சிக்காக எந்த ஸ்பெஷல் உணவுகளையும் உண்பதில்லை. நம் முன்னோர் வழக்கப் படுத்திய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்,”  என்கிறார் சைவப்ரியரான மஹாலக்ஷ்மி.

கணவர் ரவியுடன் மஹாலக்ஷ்மி

அதுமட்டுமல்லாது சைக்கிளிங் பயிற்சியுடன் மட்டும் நிறுத்தி விடாமல், தனது வாழ்க்கை முறையாகவே மாற்றிக் கொண்டுவிட்டார் இவர். அவரது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் 30 கிமீ சைக்கிளிங் செய்தே பயணிக்கிறார். இந்தப் பழக்கம் உடலுக்கு மட்டும் நல்லதல்ல, இப்போது இருக்கும் பெட்ரோல் விலைக்கு, பணத்தை மிச்சப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும்  மிகவும் உகந்தது என்கிறார். தனது கூர்மையான திட்டமிடல், கடும் உழைப்பு , முயற்சி, தன்னம்பிக்கை மட்டுமே தனது வெற்றியின் தாரக மந்திரம் என்கிறார் மஹாலக்ஷ்மி.

4 COMMENTS

  1. அருமையான நேர்காணல். வாழ்க்கையில் ஒரு சின்ன இழப்பு ஏற்பட்டாலே அதைத் தாங்க இயலாமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளத் துடிக்கும் பெண்களை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இரும்பு பெண்மணி தன் தந்தையை இழந்த இழப்பில் இருந்து தன்னை மீட்டெடுக்க ஒரு சாதனையாளராக மாறிவிட்டார்.

  2. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. பாராட்டுக்கள் – ரேவதி பாலு

  3. சோதனையின் மூலம் சாதனைகள் பெற்ற
    பெண்மணிக்கும்,அவர்களை மங்கையர்மலர் மூலம் அறிமுகப்படுத்திய
    தனுஜா ஜெயராமனுக்கும் வாழ்த்துக்கள்.

  4. நம்ப முடியாத சாதனைகளை
    சாதித்துக்கொண்டிருக்கும் மஹாலக்ஷ்மிக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!

-ஜி.எஸ்.எஸ். டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர். இவர் 2018ஆம் ஆண்டு புலிட்சர் பரிசை வென்றார். (புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம்,...

தூது சென்ற தூதுவளை!

-ரேவதி பாலு ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான...

யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்! 

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஓவியம்; தமிழ் யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான். வடகிழக்கு மாநிலங்கள்,...

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...