-பி.சி.ரகு, விழுப்புரம்.எப்படி சிரிப்பது?.மணமேடையில் உட்கார்ந்திருக்கும்என் காதருகில்தோழி வந்துசொல்லிவிட்டுப் போகிறாள்சிரித்த முகமாய்இருக்கச் சொல்லி….என் தாலி செய்வதற்காகஅம்மாவின் தாலிவிற்கப்பட்டதையும்….என் திருமணச் சீர் செய்யஅப்பா ஆசையாய் பயிரிட்டஐந்து ஏக்கர் நிலம்விற்கப்பட்டதையும்….திருமணச் செலவிற்காகஇருந்த வீட்டையும்அடமானம் வைத்த என்குடும்பநிலையை எண்ணும்போதுஎப்படிச் சிரிப்பேன்மணமேடையில்?.**************.கொலுசொலி….வாசல் கூட்டிகோலம் போடுகையில்அழகாய் கேட்கும்அக்காவின் கொலுசொலி….அடுப்படியில் நின்று அக்காஅங்குமிங்கும் நடக்கையில்சங்கீதம்போல் சத்தமிடும்அக்காவின் கொலுசொலி.வரப்பில் நடக்கையில்,நீர் எடுக்கையில்,கடைக்குப் போகையில்,களை எடுக்கையில்,விதவிதமாய் சத்தமிடும்அக்காவின் கொலுசு!.தங்கை பூப்பெய்தியநாளில் இருந்துகேட்பதே இல்லைஅக்காவின் கொலுசொலி….அக்காவிடம் கேட்டேன்கொலுசு எங்கே என்றுஅக்கா சிரித்தபடி சொன்னாள்அப்பா செலவிற்காககொலுசை அடகு வைத்துவிட்டதாய்….வீடுமுழுக்க சத்தமிட்டஅக்காவின் கொலுசுஅழுதிருக்குமோஅடகு வைக்கையில்?