0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்… டர்ர…”

டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள் பணி!

முதல் நாளே, முதல் வேலையே, எனக்கு வந்தது இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றியது.

நான் தமிழாக்கம் செய்ததை, எடுத்துக் கொண்டு போன ப்யூன், போன கையோடு திரும்பி வந்து என்னை முதன்மை ஆசிரியர் அழைப்பதாகச் சொன்னார்.

“என்ன எழுதியிருக்கீங்க?”

“இலங்கை போர் செய்தி!”

“‘ஜாஃப்னா’ என்றால் ‘ஜாஃப்னா’ என்றே எழுதுவதா?”

“பின்ன என்ன எழுதணும்?”

“‘யாழ்ப்பாணம்’னு எழுதணும். சிங்களப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தணும்!”

“ஓ… அப்படியா? இனி அப்படியே எழுதறேன் ஸார்!”

அடுத்துத் தரப்பட்டதும் இலங்கை போர் செய்தி!

இந்த முறை உஷாராகி விட்டதால், ‘பாட்டிக்கோலா’ என்ற மாகாணத்தை மிகச் சரியாக ‘மட்டக்களப்பு’ என்று எழுதிக் கொண்டு போனேன். ஆசிரியர் மேலோட்டமாகப் பார்த்து ‘டிக்’ அடித்துக் கொடுத்துவிட்டார்.

(“சபாஷ்!” சொல்லக் கூடாதோ?)

அன்றிலிருந்து அந்த நாளிதழில் நான் பணிபுரிந்த அத்தனை வருடமும் இலங்கைப் போர் செய்திகள் என்னிடம் மட்டுமே விசேஷமாகத் தரப்பட்டன.

(‘பெரிய சண்டைக்காரி’ன்னு தெரிந்துவிட்டது போலும்!)

தன்பிறகு உள்நாட்டுப் போர் ஓரளவுத் தணிந்து, சிற்சில உடன்படிக்கைகள் ஏற்பட்டு, கொஞ்சம் அமைதி திரும்பிய சமயம் இலங்கைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது ஓர் பத்திரிகையாளராக!

‘கண்டேன் கண்டி’யை என்று ஒரு கட்டுரை பள்ளிப்பாடத்தில் இருந்தது… எழுதியது மு.வரதராசனார் என்று நினைவு! இயற்கை எழிலரசி கோலோச்சும் நாடு. கேரள நாட்டின் தொடர்ச்சியோ என்று நினைக்கும்படி, பாக்கு, தேக்கு, ரப்பர், மிளகு, பலா, வாழை, தேயிலை என அவ்வளவு பசுமை! புலம் பெயர்ந்த உழைப்பாளிகளை, தோட்டத் தொழிலாளிகளை, ஈழத் தமிழர்களை ஆண்டாண்டு காலமாய் வஞ்சித்ததன் விளைவு? வெறும் சுற்றுலாவை மட்டுமே நம்பி ஜீவிக்க வேண்டிய நிலைமை!

தொடர்ந்த யுத்தச் செலவுகள், குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகக் கோளாறு, ஏதேச்சதிகாரம் கூடவே கொரோனா என எல்லாமே சேர்ந்து மோசமாக்கியதில் அழகான தீவுக்கு அதன் மக்களே ‘தீ’ வைக்கும் அளவுக்கு மக்கள் போராட்டம் வலுத்துவிட்டது பரிதாபம்!

அரசியல் பிரமுகர்களின் பிரம்மாண்டமான வீடுகள், வெளிநாட்டுக்கார்கள் கொளுத்தப்பட்டன. கொடிய பஞ்சம், பொருளாதார இழப்பு போன்றவற்றால் மாணவர்களும் புத்த பிட்சுகளுமே தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், அந்த வலியின் தீவிரம் அப்படி! “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்” – குறள்தான் நினைவுக்கு வருகிறது!

ந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, ராஜபக்சே அண்ட் கோ, வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கலாம். அல்லது ராணுவ அதிகாரத்தால் பதற்றமும் வன்முறையும் கட்டுக்குள் வந்து, சட்டம், ஒழுங்கு
நிலை நாட்டப்படலாம். உலக வரைப்படத்தில் பார்த்தால், இலங்கையி்ன் அமைப்பே ஒரு சொட்டுக் கண்ணீர் போலத் தோற்றம் தரும். இனி அது மாற வேண்டும். புதிய அரசு தலைமை ஏற்று, இலங்கையில் நல்லாட்சி வர வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

அண்டை அசலான் சுபிட்சமாக வாழ்ந்தால்தான் நாம் அமைதியாக வாழ முடியும்.

இலங்கை மீளட்டும்… பழைய அழகு மிளிரட்டும்!

 

3 COMMENTS

  1. ஒரு வார்த்தை உன்னதக் கருத்தின் வெளிப்பாடாக இருந்தது. அன்று ராமாயணம் காலத்தில் ராவணன் சீதையைக் கடத்தியத்தற்காக அனுமன் இலங்கையை எரித்தான். இன்று ராஜபக்சேயின் கொடுங்கோல் ஆட்சியால் இலங்கை தீப்பற்றி எரிகிறது. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது சரியாகத்தான் இருக்கிறது.
    எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
    லால்குடி.

  2. பொரளாதார விலை ஏறிபோனதை பார்த்தாலே இது எதில் போய் முடியுமோ
    என்று பயமாக இருந்தது. சர்வாதிகாரம் அளிந்து நல்லாட்சி நடக்கும் என்பது தான்
    உண்மை.நன்மையே நடக்கட்டும்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

எட்டு ஆண்டுகளாக ஏங்கித் தவித்துப் பிறந்த குழந்தை அவள்! ப்ரீத்திக்கு மூன்று வயசாக இருக்கும்போது, அவளது அப்பா ஸ்ரீநிவாசன், அவளை நீச்சல் குளத்தில் தள்ளிவிட, தானே முயன்று நீந்தி மேலே வந்ததோடு, பயமில்லாமல்...

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...