0,00 INR

No products in the cart.

பறக்கும்  பாவைகள்!

 பகுதி -1
எங்களாலும் பறக்க முடியும்!

 –ஜி.எஸ்.எஸ்

மெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ மாநிலத்தில் உள்ளது சிலிக்கான் பள்ளத்தாக்கு.  இங்கு மிக அதிக எண்ணிக்கையில் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன. அதேபோல் இந்தியாவில் கர்நாடகத் தலைநகரில் அதிக அளவில் மின் பொருள் நிறுவனங்கள் இருப்பதால் பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது வழக்கம்.  சிலிக்கான் பள்ளத்தாக்கு உள்ள பகுதியும் பெங்களூருவும் உலகத்தின் நேரெதிர்ப் பகுதிகளில் இருக்கின்றன எனலாம்.

ஏர் – இந்தியா விமான நிறுவனம் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில் சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தை ஏற்பாடு செய்தது.  பதினாறாயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம்.  17 மணிநேரம் பயணம்.  நடுவில் எங்கும் விமானம் நிறுத்தப்படவில்லை.  ஏர் இந்தியா விமான சர்வீசுக்கு இப்படி ஒரு நீண்ட பயணம் என்பது இதுவே முதல் முறை.

ஆனால் இதைவிட சிலிர்ப்பூட்டும் ஒரு சாதனை இதில் நடைபெற்றது.  இதன் விமான ஓட்டிகள் குழுவில் மொத்தம் நாலு பேர்.  நான்கு பேரும் பெண்கள்.  இந்தியர்கள். 

ந்தப் பயணத்தில் வேறு ஒரு விசேஷமும் உண்டு. வடதுருவம் வழியாகப் பயணிக்கும் முதல் இந்திய விமானப் பயணம் இது. வட துருவப் பகுதி என்பது எதிர்பார்க்க முடியாத பலவித மாறுபாடுகள் கொண்ட வெப்பநிலையைக் கொண்டது.

கலங்காமல் இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்கள் அந்த நான்கு  இந்திய பெண்களும்.  தலைமை ஏற்றது கேப்டன் ஜோயா அகர்வால் மற்றும் கேப்டன் தன்மை பாபகிரி. (ஜோயா அகர்வால் 17 வருடங்களாக விமான ஓட்டியாக பணிபுரிபவர்).  அவர்களு​டன் இணைந்து செயல்பட்டது கேப்டன் ஷிவானி மன்ஹாஸ் மற்றும் கேப்டன் அகன்ஷா சோனாவேன்.

அமெரிக்காவில் உள்ள விமான ஓட்டிகளில் 5.4 சதவிகிதம் பேர் பெண்கள்.  பிரிட்டனில் இன்னும் குறைவு –  4.7 சதவிகிதம்.  இந்தியா இந்த விஷயத்தில் முன்னேறி உள்ளது.  விமான ஓட்டிகளில் 12.4 பெண்கள்.  என்றாலும் இதையும்  அதிகம் என்று சொல்லிவிட முடியாது. 

கேப்டன் தன்மை பாபகிரி

இந்த நிலையில் மேலே குறிப்பிட்ட சவாலான பயணம், பெண்கள்  விமானம்  ஓட்டுவதில் ஆண்களை விட சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

AI 176 என்று குறிப்பிடப்பட்ட இந்த விமான சர்வீஸ் இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மாலை எட்டரைக்கு கிளம்பியது.  பெங்களூருவின் கெம்பேகவுடா விமான நிலையத்தை ஜனவரி 11ஆம் தேதி அன்று மிக அதிகாலையில் அடைந்தது.  இதில் ஏதோ நான்கு விமான பைலட்கள் மட்டுமே இருந்ததாக நினைத்துவிட வேண்டாம். 250 பயணிகளும் இதில் இடம்பெற்றிருந்தனர்.

வட துருவத்தைக் கடக்கும் விமான சர்வீஸ் என்பது கணிசமான எரிப்பொருளையும் நேரத்தையும் சேமிக்கக் கூடியது. இல்லையென்றால் இது மிகவும் நெடுந்தூர பயணமாக இருந்திருக்கும். இந்த ஒரு பயணத்திலேயே 10,000 கிலோ எரிபொருளை சேமித்து இருக்கிறார்கள்.

வடதுருவத்தில்  பயணிக்கும் போது உள்ள சவால்கள்.

ட துருவப் பகுதியில் உள்ள கடும் குளிர் பயணிகளுக்கு ஏற்றதல்ல,   என்னதான் விமானத்துக்குள் வெப்பம் இருக்க வழி செய்யப்பட்டிருந்தாலும்.  தவிர இது போன்ற பயணங்களில் சூரியனின் கதிரியக்கம் நேரடியாக விமானத்தைத் தாக்க அதிக வாய்ப்பு உண்டு.

துருவப்பகுதியில் குளிர்காலங்களில் வெப்பம்  மைனஸ் 60 டிகிரி சென்டிகிரேடு என்கிற அளவுக்கு இறங்குவது வெகு சகஜம். அப்போது விமான எரிபொருள் முழுவதும் உறைந்து போனால் எப்படி இருக்கும்?

கேப்டன் ஜோயா அகர்வால்

அப்போது விமானத்தை இறக்க வேண்டி வந்தால்  அருகில் உள்ள விமான நிலையங்கள் எவை,  தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டால் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று பல பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டன.

மேற்படி விமானத்தில் இரண்டு உடைகள் தயாராக இருந்தன.  ஒவ்வொன்றும் கனமான 32 பவுண்ட் எடை கொண்ட உடை.  உடல் முழுவதும் மூடிக் கொள்ள வேண்டிய உடை.  அவசர நிலை ஏற்பட்டால் இதை அணிந்துக் கொண்டு வெளியேறி விமானத்தையும் எரிபொருளின் நிலையையும் சோதித்துப் பார்க்க வேண்டி இருக்கும், அதுவும் ஆயிரம் அடி உயரத்தில் பனிபடர்ந்த பகுதியில்.

துருவப் பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது.  பயணத்துக்குப் பின் தங்களது துருவ அனுபவத்தை பற்றி அந்தப் பெண்கள் இப்படி விவரித்தார்கள். “இதுவரை எங்கும் பார்த்திராத அளவுக்கு துருவப் பகுதியில் இருந்த வானம் மிக மிக இருட்டாக இருந்தது.  அதே சமயம் அந்த அளவு நட்சத்திரங்களை இதுவரை நாங்கள் எங்கும் பார்த்ததில்லை”.

பயணிகளும் சாகச விரும்பிகளாக இருந்திருக்க வேண்டும்.  அவர்களுக்கு முன்னதாகவே இந்தப் பயணத்தில் உள்ள ரிஸ்க்குகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆக, பெண்களின் சக்தி மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டது.

ஆனால் பெண்கள் பறப்பதற்கு, எண்ணியும் பார்க்க முடியாத பல தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது…

(தொடர்ந்து பறப்பார்கள்)

2 COMMENTS

  1. பறக்கும் பாவைகள் தொடரின் பாகம் ஒன்றைப் படித்து மெய் சிலிர்த்தேன். இந்தியப் பெண் நான்கு பேர் ஓட்டிய பதினாறாயிரம் கி.மீ. விமானப் பயணம் படிக்கவே பெருமையாகவும், சுவாரசியமாகவும், த்ரிலிங்காகவும் இருந்தது. மேற்கொண்டு படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.
    ஆர். வித்யா சதீஷ்குமார்,
    பள்ளிக்கரணை

  2. மிக அருமை. பெண்கள் சக்தியின் மாண்பை விவரிக்கும்
    இந்த கட்டுரை மிக சுவாரசியமான அடுத்த வாரம் எப்போது வரும் என்ற ஆவலை தூண்டுவதாக இருக்கிறது – ரேவதி பாலு

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...