0,00 INR

No products in the cart.

மா இலைகளில் திருக்குறள்!

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை அவர். முதுகலை உயிரியல் பயின்றவர். முதுகலைத் தமிழிலும் தேர்ச்சிப் பெற்றவர். பள்ளி நாட்களில் இருந்தே அவருக்கு வினோதமான எண்ணம், சங்கத் தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப் பெற்றிருந்தன, அது போல திருக்குறளை மா இலைகளில் எழுதிப் பதிவு செய்திட வேண்டும்  என்று. அதற்காகப் பல வருடங்கள் காத்திருந்து, சமீபத்தில் தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

தொட்டியம் அருகே கோடியம்பாளையம் என்கிற கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு ஆசிரியை அமுதா. இருபத்தியோரு ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.   அவரிடம் நாம் பேசியதிலிருந்து சில துளிகள்…

உங்களுக்கு மாவிலையில் திருக்குறள் எழுத எண்ணம் எப்படி ஏற்பட்டது? 

ன் தந்தை தமிழாசிரியர், அதனால் எனக்கு தமிழ் மீது பற்று அதிகம். நானும்  முதுகலைத் தமிழ் பயின்றுள்ளேன். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் நம் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொருட்டு, ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து சேகரித்து அரும்பாடு பட்டுள்ளதாகப் படித்துள்ளேன். அதுபோல திருவள்ளுவர் நமக்கு அளித்துள்ள திருக்குறளை மா இலைகளில் எழுதிப் பதிவு செய்திட வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் ஏற்பட்டது. அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். புதுச்சேரி உலகத் திருக்குறள் மையத்திடம் எனது ஆர்வத்தைத் தெரிவித்தேன்.

இதற்கென மா இலைகளை ஏன் தேர்வு செய்தீர்கள்? 

ழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதிப் பதிவு செய்துள்ளார்கள். அதுபோல நான் செய்திட வேண்டாம், வேறு புதிதாகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்போது தான் எனக்கு இந்த மா இலையில் எழுதுகின்ற எண்ணம் தோன்றியது. நம் தமிழர் மரபுகளில், திருவிழாக்களில், வீடுகளில் சுப நிகழ்வுகளில் மா இலை மிக மிக முக்கியமானது. பெருமை வாய்ந்தது. அதனால் மா இலைகளில் அத்தனை திருக்குறளையும் எழுதிட வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.

இதற்கென மா இலைகளை சேகரித்தேன். இலைகளின் இருபுறமும் சேதாரம் இல்லாத இலைகள். அதிலும் எழுதுவதற்கு சமன்பாடான இலைகள். அதுபோன்ற இலைகளைச் சேகரித்து அதிலிருந்தும் எழுதுவதற்கு வசதியான நீளமான இலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதன் பின்னரே அந்த உலகத் திருக்குறள் மையத்துக்கு தகவல் தெரிவித்தேன்.

இந்தச் சாதனையை எங்கு நிகழ்த்தினீர்கள்? 

புதுச்சேரி உலகத் திருக்குறள் மையத்தினர் இதனை என் வீட்டில் இருந்த படியே நிகழ்த்துவதற்கு அனுமதித்திருந்தனர். ஆன்லைனில் கூகுள் மீட்டில் இருபத்தி நான்கு மணி நேரக் கண்காணிப்பில் இதனை நிகழ்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. என் வீட்டில் குறிப்பிட்ட நாளில் இதற்கு  நான் தயாரானேன். நீள நீளமான மா இலைகள் எடுத்து வைத்துக் கொண்டேன். திருக்குறள் புத்தகம் பார்த்துப் பார்த்து எழுதினேன். வரிசை எண் எழுதி ஒவ்வொரு திருக்குறளையும் வரிசையாக மா இலைகளில் எழுதினேன். ஒன்றிலிருந்து ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறளையும் ஒன்று விடாமல் எழுதினேன். சிடி மார்க்கர் பென் கொண்டு எழுதினேன். மா இலைகளில் நான் எழுதிய திருக்குறள் எழுத்துகள் தண்ணீர் பட்டாலும் அது அழியாது. எனக்கு இதற்கு முப்பது மா இலைகள் ஆகின. இருபது மணி நேரம் ஆனது. இடைவிடாமல் எழுதினேன்.

அந்த இருபது மணி நேரத்தில் மூன்று தடவை பழச்சாறுகள் மட்டும் அருந்தினேன். இருபது மணி நேரத்தில் ஒய்வு ஏதும் எடுத்துக் கொள்ள வில்லை. மார்ச் மாதம் பன்னிரெண்டாம் தேதி இது நிகழ்ந்தது. மார்ச் இருபதாம் தேதி இந்த உலக சாதனைக்கான விருதினை, புதுச்சேரி உலகத் திருக்குறள் மையம் எனக்கு வழங்கியது. எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. ஆயிரத்து முந்நூற்று முப்பது திருக்குறள் எழுதப்பட்ட மா இலைகள் அத்தனையும் பொக்கிஷம் போல நான் பாதுகாத்து வைத்துள்ளேன்.

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. பள்ளி நாட்களில் இருந்தே கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் தீராத ஆர்வம். வானொலி நாடகங்கள் எழுதுவதிலும் கால் பதித்தது உண்டு. சமூகப் பார்வையுடனான கட்டுரைகள், நேர்காணல்கள் படைப்பதிலும் வல்லுனர். கல்கி, மங்கையர் மலர், தீபம் போன்ற கல்கி குழும இதழ்களின் நடைபாதைதனில் பயணிக்கும் நிரந்தரப் பார்வையாளன்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...