0,00 INR

No products in the cart.

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா 

“கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம ஷோவுல ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றித்தான் பேசப்போறோம். அது என்னன்னா, இன்று ‘சர்வதேச பெண்கள் வன்முறை எதிர்ப்பு’ தினத்தை முன்னிட்டு நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்க இப்ப நம்ம கூட இருக்காங்க, முகநூலிலும், எழுத்துகளிலும் பிரபலமான புதுவை புவனா. இவங்களோட ஒவ்வொரு எழுத்தும் பெண்களுக்கான சிறுமைகளைக் கண்டு பொங்கி அவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும் என்பது எனக்கு மட்டுமல்ல படிச்ச உங்களுக்கும் தெரியும். வாங்க அவங்களோட பேசலாம் !”

“வணக்கம்  மேடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகிட்டே வருது. ஒரு பெண் தனக்கு நேரும் வன்முறைகளை எப்படித் தடுக்க வேண்டும்? எப்படி அதை எதிர்கொள்ள வேண்டும்?”

“வணக்கம்! ஒரு பெண் குழந்தை வளரும்போதே  ‘அவன் ஆண் தூர விலகிப்போ’  ‘அவன் உசத்தி  அவன்கிட்ட வம்ப வெச்சுக்காத’ என்றெல்லாம் சொல்லி அவள் மனதில் ஆண்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை விதைக்காமல் வளர்க்க வேண்டும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உசத்தியில்லை என்று சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இது ஆண் பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்களுக்கும்தான்.

உலகின் மிகப்பெரும் வலியான பிரசவவலியையே தாங்கும் பெண்ணிற்கு கண்டிப்பாக வன்முறையை எதிர்க்கும் வலிமையும் இருக்கும்.

ஆணிற்கு பெண்ணின் மகத்துவத்தை புரியவைத்தும் பெண்ணுக்குத் துணிவையும் தன்மீதான நம்பிக்கையையும் தந்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கைகளிலேயே உள்ளது.

முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு வன்முறையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள நிச்சயம் கற்றுத்தர வேண்டும். அம்மாவாக இருக்கும் பெண்ணும் வாழ்வில் பல வன்முறைகளைக் கடந்தே வந்திருப்பாள். தன் மகள் மனதில் உள்ளதை, தனக்கு நேர்ந்ததை தாயிடம் முதலில் சொல்லும் நம்பிக்கையை ஒவ்வொரு தாயும் தரவேண்டும்.

பெண்ணுக்கு பெண்ணே எதிரி எனும் கருத்தை உடைத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல் தர ஒவ்வொரு பெண்ணும் முன்வரவேண்டும் வேண்டும்.”

இப்படிப்பட்ட பல கருத்துகளை பேசி ஐந்து நிமிட பேட்டி நிறைந்தது.

“என்ன மக்களே நம்ப புவனா மேடம் சொன்னதைக் கேட்டீங்களா ? நல்ல கருத்துகளை கனல் தெறிக்கத் தந்த புதுவை புவனா மேடத்துக்கு உங்க சார்பாகவும், நம் ரேடியோ சார்பாகவும் நன்றிகள் சொல்லி உங்ககிட்டயிருந்து ஜகா வாங்குவது உங்க பேவரைட் பவித்ரா. மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் பேசுவோம்.”

கேட்ட பலரின் கைதட்டல்கள், பாராட்டுகளுடன் வீடு வந்து சேர்ந்தாள் புவனா.

“அம்மா ஒரு நிமிஷம். ” மகளின் குரல்  கேட்க, எதிர்பார்ப்புடன் நின்றாள் புவனா. “கண்டிப்பா பொண்ணு நான் பேசியதை கேட்டுருப்பா. அதான் கூப்பிடறா. “ என்று எண்ணியபடி, மகளின் பாராட்டு மழையில் நனையத் தயாரானாள்.

“இவ்வளவு நேரம் நீங்க பேசியதைக் கேட்டேன். சூப்பர்மா! ஆனா, நான் ஆறாவது படிக்கிறப்போ ஆட்டோ மேன் அடிக்கடி என் தொடையைப் பிடிச்சு விடறாருன்னு சொன்னப்ப அவன்லாம் பெரிய ரவுடி, நாம் வேற ஆட்டோவை மாத்திக்கலாம். இதையெல்லாம் வெளியே சொல்லிக்கிட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.  அப்புறம் பிளஸ் டூ படிக்கிறப்ப என் பிரண்டு கோகுலோட அப்பா என்னை ஒரு மாதிரிப் பார்த்து கையைப்பிடிச்சார்னு சொன்னேன். சரி சரி அவர் எப்பேர்ப்பட்ட பெரிய  அதிகாரி. கோகுலோட பிரண்ட்ஷிப்பை கட் செய்துக்கோ. இனி அங்க போகாதேன்னு சொன்னீங்க. இப்ப நான் காலேஜ் போற பெரிய பெண் ஆயாச்சு. எல்லா  விஷயங்களும் புரியவும் செய்யுது. இப்பவும் எனக்கு ஏதாவது நடந்தா நீங்க வயசுக்கு வந்த பொண்ணு, இதெல்லாம் வெளியே தெரிஞ்சா நாளைக்கு யார் வந்து பொண்ணு கேட்பாங்கன்னு சொல்வீங்க.

ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யற நீங்க உங்க பொண்ணுகிட்ட அநீதியை தட்டிக் கேட்கற துணிச்சலைக் கற்றுத் தரலையே? எதையும் உங்க கிட்ட ஷேர் செய்யவும் டைம் தரலையே? ஒண்ணு பயந்து தலைகுனிந்து  போகணும் அல்லது கண்டுக்காத மாதிரி விலகிப் போகணும். இதுதான் நீங்க எனக்கு சொல்லித் தந்துருக்கீங்க. இது எப்படிம்மா ?”

விடுமுறையில் கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கும் மகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வெட்கித் தலைகுனிந்தார் சாதனைப்பெண் மன்னிக்க சாதாரணப் பெண்ணான புரட்சிப் புயல் புதுவை புவனா.

1 COMMENT

  1. வெளியே சாதனைப் பெண்மணியாகவும் புரட்சிப்புயல் ஆகவும் தன்னை காட்டிக் கொள்ளும் புதுவை புவனாவை போல
    அநேகம்பேர் வீட்டில் மிக சாதாரணமான பெண்மணியாகத் தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான் – ரேவதி பாலு

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...