spot_img
0,00 INR

No products in the cart.

வீட்டிலிருந்தே வியாபாரம்! நல்ல பிஸினஸ் எது?

 

மங்கையர் மலர் வாசகியர் FB பதிவுகள்!

லாபம் தரும் தையல் தொழில்!

வீட்டிலிருந்தே நல்ல பிஸினஸ் செய்ய வேண்டும் என்றால், சிறந்த தொழில் தையல்தான். அதைக் கற்றுக்கொள்ள பட்டப்படிப்பு தேவையில்லை. ஒரே மாதத்தில் தையல் கலையைக் கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொண்ட பின், பின்பற்ற வேண்டிய விஷயங்கள்தான் ஒரு சிறந்த டெய்லரை உருவாக்கும்.

1. முதலில் மின்சாரத்தில் ஓடும் தையல் மிஷினை வாங்க வேண்டும். இதனால் காலில் பிரஷர் கொடுக்க வேண்டி இருக்காது.
2. வீட்டில் உள்ளவர்களுக்கு முதலில் விதவிதமாகத் தைத்துக்கொடுத்து நேர்த்தியாக தைக்கப் பழக வேண்டும்.
3. வெளியில் ஒரு பிளவுசுக்கு தையல் கூலி 150 ரூபாய் என்றால், நாம் நூறு ரூபாய் என்று நிர்ணயித்து நோட்டீஸ் அடித்து, அவற்றை நாம் வசிக்கும் பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
4. பொதுவாக, டெய்லர்கள் சொன்ன நேரத்தில் தைத்துக்கொடுக்க மாட்டார்கள். அதில் நாம் நேரம் தவறாதவர்களாக இருக்க வேண்டும்.
5. ஆர்டர்கள் அதிகமானால் உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம்.
6. பண்டிகைக் காலங்களில் கூலியைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தலாம்.
7. நம் மூளையையும் கற்பனைத் திறனையும் உபயோகித்து புதுப்புது டிசைன்கள் உருவாக்கி மக்களை ஈர்க்கலாம்.
8. ரெகுலர் கஸ்டமர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளில், நாமே எம்பிராய்டரி செய்த கைக்குட்டை அல்லது டேபிள் கிளாத் பரிசாகக் கொடுக்கலாம்.
9. பொதுவாக, தையல் பிரிந்த துணிகளையும், ஆல்டரேஷன் வேலைகளையும் தையல் கடை வைத்திருப்பவர்கள் செய்துக்கொடுக்க மாட்டார்கள். நாம் அதை மாற்றலாம்.
10. நன்றாகப் பிரபலமான பின், நாமே தையல் பயிற்சிப்பள்ளி ஆரம்பித்து, அதன் மூலமும் சம்பாதிக்கலாம்.
11. யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் ஆன்லைன் தையல் வகுப்பு எடுக்கலாம். பிரபலமாவதுடன் நிறைய தொடர்புகளும், வருமானமும் வரும்.
12. கஸ்டமர்களின் வீடுகளுக்கே சென்று தைத்த துணிகளை டெலிவரி செய்யவும், புதுத்துணிகளை வாங்கி வரவும் ஆள் வைத்துக் கொள்ளலாம்.
13. சில வருடங்களில் நம் கடையில் தைக்கும் துணிகளை வைத்து ஒரு பொட்டிக் வைக்கலாம்.

மேலே சொன்ன யோசனைகளைக் கடைபிடித்து நிறைய பணம் சேர்த்து பிரபலமான பின், மேலும் இரண்டு தையல் மெஷின்கள் வாங்கி, இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தி நம் வீட்டின் ஒரு அறையை தையல் கடை ஆக்கி விட்டால் வீட்டையும் கவனித்துக்கொண்டு வீட்டிலிருந்தே பிஸினஸையும் கவனிக்கலாம்.
பெண்கள் வீட்டின் கண்கள். பெண்கள் முயன்றால் மாமலையும் சிறு தூசு என்று நிரூபிக்கலாம்.
– ஹேமலதா ஸ்ரீனிவாசன், சென்னை.

………………………………..

வருமானம் பெருக்கும் சமையல் பிசினஸ்!

வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய மிகச் சிறந்த பிஸினஸ் சமையல்தான். வேலைக்குச் செல்லும் பெண்கள், ‘யாராவது சமைத்துக் கொடுப்பார்களா?’ என்று ஏங்கும் நாட்கள் இது.

காலை, மாலை இரண்டு வேளையோ அல்லது நமக்கு உதவிக்கு யாராவது இருந்தால் மூன்று வேளையும் கூட சமைத்துக்கொடுக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது நேரம் தவறாமை. எந்தத் தொழில் செய்தாலும் இதுதான் முக்கியம். காலை 8 மணிக்குள் டிபன், இரவு 8 மணிக்குள் டிபன் என்று திட்டமிடல் வேண்டும். காலை இட்லி, சட்னி மற்றும் இரவில் சப்பாத்தி, குருமா போடலாம். முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்பு விரிவாகச் செய்யலாம். முதலில் நம் தெருவாசிகளை வாடிக்கையாளர்கள் ஆக்கிக்கொண்டால் அவர்களின் நட்புவட்டம் மூலம் நமக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். இடையே நம் வீட்டில் உள்ளவர்களையும் கவனித்துக்கொள்ளலாம்.

சுய உதவிக் குழு சகோதரிகளையும் பிஸினஸில் சேர்த்துக்கொள்ளலாம். பேக்கிங் பாக்ஸ் கடைகளில் கிடைக்கும் அதை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு பேக்கிங் செய்து கவரில் போட்டுக் கொடுத்தால், அலுவலகம் முடிந்து செல்பவர்களுக்கு எடுத்துச்செல்ல எளிதாகவும் வசதியாகவும் இருக்கும்.

ரு கிலோ கோதுமை மாவில் குறைந்தது இருபத்தைந்து சப்பாத்திகள் போடலாம். ஆர்டர் வாங்கிக்கொண்டு செய்தால் உணவுப்பொருள் வீணாகாது. மிச்சமாகும் உணவை அருகிலுள்ள முதியோர் காப்பகத்தில் கொடுக்கலாம். நமக்கும் அதில் ஒரு மனநிறைவு கிடைக்கும். வியாபாரம் விரிவாக விரிவாக, நவீனப் பொருட்களை கொண்டு பிஸினஸை சிறப்பாகச் செய்யலாம். விடாமுயற்சி, நேர்மை, உழைப்பு இம்மூன்றும் பிஸினஸை திறம்பட நடத்த உதவும். எடுத்தவுடனே விண்ணில் பறக்க முயலாமல், படிப்படியாக முன்னேறலாம். பெண்கள் நினைத்தால் முடியாதது இல்லை.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பெண்களே! பிஸினஸ் சிறக்க வாழ்த்துக்கள்.
– அன்புக்கரசி பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

………………………………..

மசாலா பொடியில் இருக்கு கொள்ளை லாபம்!

வீட்டில் இருந்தபடியே செய்யச் சிறந்த வியாபாரம், மசாலா பொடி வகைகளை தயார் செய்து விற்பனை செய்வதுதான். சாம்பார் பொடி, ரசப்பொடி தவிர, சாதத்தில் கலந்து சாப்பிடக்கூடிய பொடி வகைகள் ஏராளமாக உள்ளன. அவற்றை மிகச் சிறந்த முறையில் ஆரோக்கியமாகவும், ருசியாகவும் , தரமானதாகவும் தயாரிக்கலாம்.

குழம்பு, ரசம் முதலியவை செய்வதற்கு வித்தியாசமான பொடி வகைகளைத் தயாரித்து சந்தைப்படுத்தலாம். மேலும், தவலை அடை மிக்ஸ், அரிசி உப்புமா மிக்ஸ், ரவா உப்புமா மிக்ஸ், உப்புமா கொழுக்கட்டை மிக்ஸ் போன்றவற்றையும் வீட்டிலேயே தரமான பொருட்களைக் கொண்டு ஹைஜீனிக்காக தயாரிக்கலாம். இதில் முக்கியமானது, தீபாவளி மருந்து பொடி மற்றும் பிரசவ மருந்து பொடி. இவற்றிற்கு நல்ல டிமாண்ட் இருக்கும்.

இவற்றைத் தயார் செய்வதற்குத் தேவையானவை :
ஒரு நல்ல ஹெவி ட்யூட்டி மிக்ஸி. ஒரு நல்ல தரமான மைக்ரோவேவ் ஓவன்.
வெளிச்சமான இடத்தில் மேஜை வைத்து இரண்டு தனித்தனி பவர் பாயிண்ட் பிளக் அமைத்துக் கொள்ளவும். மிக்ஸி, மைக்ரோவேவ் ஓவன் இரண்டையும் தனித்தனி கனெக்ஷன் ஆக வைத்துக்கொள்ளவும்.

பொருட்களை வறுப்பதற்கு மைக்ரோவேவ் ஓவனை பயன்படுத்தலாம். அதற்கு நல்ல தரமான கனமான கிளாஸ் பவுல் மற்றும் கிளவுஸ்கள் தேவை.
பொடிகளைத் தயாரித்து விற்பதற்குத் தயாராக 250 கிராம், 100 கிராம், 50 கிராம் பாக்கெட்டுகள் வைத்துக் கொள்ளவும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ரீஸீலபிள் மாற்று பைகளை உபயோகப்படுத்தலாம்.
முதலில் நான்கைந்து பொடிகள் தயார் செய்து, தெரிந்தவர்களுக்கு இலவசமாக சாம்பிள் கொடுக்கலாம்.

வீட்டில் இருப்பவர்களே இந்த வேலையில் ஈடுபட்டால் வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் மிச்சமாகும். மின்சாரத்தின் அளவைக் கணக்கிட்டு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யலாம். தோராயமாக ஒரு கிலோ பருப்புப் பொடி தயார் செய்ய 120 ரூபாய் ஆகலாம். முதலில் கால் கிலோ 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்குள் விற்கலாம்.
20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்த வியாபாரத்தைத் தொடங்கலாம்.
வீட்டிலிருந்து கேட்டரிங் செய்பவர்களுக்கும் இந்தப் பொடி வகைகள் உபயோகப்படும்.
– சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்.

1 COMMENT

  1. எனக்கு பிடித்த தொழில் தையல்.வீட்டில் இருந்து சிறியதாக செய்து கொண்டிருக்கிறேன்.ஆட்ரேஷன் வேலைகளும் மிக நன்றாக செய்து கொடுப்பேன்.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,885FollowersFollow
3,140SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

வாசகர் ஜமாய்க்கிறாங்க…

0
பை ஒன் கெட் ஒன் ஆஃபர் கோபத்தை வாங்கினால் ரத்தக்கொதிப்பு இலவசம். பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம். வெறுப்பை வாங்கினால் பகை இலவசம். கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம். இது தேவையா? அல்லது நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம். உடற்பயிற்சியை வாங்கினால் ஆரோக்கியம் இலவசம். அமைதியை...

ஜோக்ஸ்!

0
ஓவியம் : பிள்ளை “கடைக்காரரே, பத்து ரூபாய்க்கு தக்காளியும் முருங்கைக்காயும் கொடுங்க!” “இந்தாங்கம்மா... கால் தக்காளியும், ஒரு துண்டு முருங்கைக்காயும்!” - ஆர்.மகாதேவன், திருநெல்வேலி ....................................................................................... “என்ன சார்... சிலிண்டரோட என்னைப் பார்க்க வந்திருக்கீங்க... என்ன பிராப்ளம்?” “கேஸ் பிராப்ளம் வந்தா...

வங்கி முதலீடு – தனியார் நிறுவன முதலீடு: எது சிறந்தது?

0
கருத்து யுத்தம்! முகநூல் வாசகியர்களின் பதிவுகள்! வங்கி முதலீடே சிறந்தது! அரசு வங்கி முதலீடு மட்டுமே சிறந்தது. தனியார் நிறுவனங்களுகளிடம் ஆரம்ப காலத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் விதத்தில் செயல்பட்டு போகப்போக ஷேர் மார்க்கெட் முதலீட்டில் பங்கு போட்டு...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

0
வெற்றிலை ரசம் தேவையானவை : வெற்றிலை - 6, புளிச்சாறு - 2ஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெல்லத் தூள் - ஒரு ஸ்பூன், தாளிக்க - நெய், கடுகு, சீரகம், பெருங்காயம். செய்முறை :...

வெற்றி வேண்டுமா? போட்டுப்பாருங்கள் எதிர்நீச்சல்!

2
- சேலம் சுபா புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களும் இந்தக் கொரோனா பயத்தையும் மீறி, முகநூலிலும் இன்னபிற இணைய சேவைகளின் வழியாகவும் நம்மிடம் சேர்ந்து வாழ்வதற்கான தெம்பை அளித்து விட்டன. நமக்கு சரி......