
"உங்க வீட்டுக்குத் திருட வந்தவன் நல்லவன்னு எப்படிச் சொல்ற?"
"என் கணவரோட நகையை மட்டும் எடுத்துட்டு, என் நகையைத் தொடவே இல்லை!"
………………………………………………………………….
"எதுக்கு தலைவர் கடற்கரைக்கு மட்டும் லாக்டவுன் போடுறாரு?"
"இனி வரக்கூடிய அலைகளைத் தடுக்கத்தான்!"
………………………………………………………………….
"இருந்தாலும் எமதர்மருக்கு குசும்பு அதிகம்தான்!"
"ஏன்?"
"மாஸ்க் கேக்குறாரு, கொரோனாவிடம் இருந்து தப்பிக்க!"
………………………………………………………………….
"என்னோட மனைவி, பள்ளி முதல்வர் மாப்ள…"
"அதுக்காக வீட்டுக்குள்ளே வர அனுமதி கேட்டு வரச் சொல்றது நல்லவா இருக்கு?!"
………………………………………………………………….
"எதுக்கு இந்தப் பேஷண்டை வேகமாக டிஸ்சார்ஜ் செய்யுறீங்க?"
"இவரை விட வசதியான பேஷண்ட் வந்துக்கிட்டு இருக்கு சிஸ்டர்!"
………………………………………………………………….
"எதுக்கு ஜெயில் அதிகாரி ரொம்ப டென்ஷனா இருக்கார்?"
"ஒரு கைதி ஷாப்பிங் போக அனுமதி கேட்டாராம்!"
………………………………………………………………….
"அச்சம் தவிர்…"
"ஐ லவ் யூ டீச்சர்…!"
………………………………………………………………….
"டாக்டருக்கு கடவுள் பக்தி அதிகம்"…
"அதுக்காக அபரேஷன் செய்ய தேங்காய், வாழைப்பழம், சூடம் கேட்பது நல்லாவா இருக்கு"?
………………………………………………………………….
"எதுக்கு தலைவர் மேலே பொதுமக்கள் கோபமா இருக்காங்க?"
"நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வெள்ள சேதத்தைப் பார்க்க வருவேன்னு சொன்னா எப்படி?"