கவிதை!

கவிதை!
Published on

– ஜி.பாபு, திருச்சி

வேண்டும்!

னதில் உறுதி வேண்டும்; என்றும் நீ
மனசாட்சியுடன் வாழ வேண்டும்!
அனுதினமும் கடவுளை துதிக்க வேண்டும்; எல்லாம்
அவன் செயலென்று நீ நம்ப வேண்டும்!
பெண்டீரைப் போற்ற வேண்டும்; நீ
பெரியோர்களை மதித்து நடக்க வேண்டும்!
இரு கண்களென பெற்றோர்களைக் காத்திட வேண்டும்; பெரும்
கல்விகள் கற்று நீ மேதையாக வேண்டும்!
நாட்டையும் வீட்டையும் ஒன்றாகக் கருத வேண்டும்; நல்
ஒழுக்கத்துடன் என்றுமிருக்க வேண்டும்!
வாழ்வை சாரதி போல் ஓட்ட வேண்டும்; வரும்
சங்கடங்களை எதிர்த்து நின்று வெல்ல வேண்டும்!
கல்வியே பெரும் செல்வம்; அதை
கற்றால் நீ உயர்வது நிச்சயம்!
வறுமையைக் கண்டு பயப்பட வேண்டாம்; உன்னை
வளமாக்கும் திறமையிருப்பதை நம்ப வேண்டும்!
எதிரிகளைக் கண்டு பயப்பட வேண்டாம்; வரும்
இன்னல்களை எதிர்த்து வெல்ல வேண்டும்!
ஓடும் நதி போல் நீ இருக்க வேண்டும்; நீ
நல்லவனென்று பெயர் எடுக்க வேண்டும்!
தாய்மொழியில் கற்க வேண்டும்; இனிய
தமிழை எங்கும் நீ பரப்பிட வேண்டும்!
நீ ஓயாமல் ஓடியோடி உழைக்க வேண்டும்; அந்த
உழைப்பில் வந்த செல்வத்தை சேமிக்க வேண்டும்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com