0,00 INR

No products in the cart.

முத்துச் செய்தி மூன்று!

மகளிர் சிறப்பு 
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன்

தமிழ் எழுத்தாளருக்கு சாஹித்ய அகாடமி விருது!

தமிழ் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான இவரது இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பெண் கல்வி குறித்த ஆராய்ச்சியாளரான இவர், தமிழில் சிறந்த படைப்பாளர்களில் ஒருவர். அம்பை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற பல படைப்புகளை எழுதியுள்ளார்.

எழுத்தாளர் அம்பை

‘காட்டில் ஒரு மான்’ என்ற இவரது
படைப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.
எழுத்தாளர் அம்பைக்கு 2021ம்
ஆண்டுக்கான சாஹித்ய அகாடமி விருது,
‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’
என்ற சிறுகதைக்காக அறிவிக்கப்
பட்டுள்ளது.
பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர்,
கனடா நாட்டின் இலக்கிய அமைப்பின்
வாழ்நாள் சாதனையாளர்
விருதும் பெற்றவர்.

 

75 வயதில் களரி கற்றுத்தரும் வீரப் பெண்மணி!

கேரளாவில் புகழ் பெற்ற தற்காப்புக்கலை களரிப் பயட்டு. பழைமையான கலைகளில் ஒன்றான களரியை 55 வருடங்களுக்கும் மேலாகக் கற்றுத் தரும் ஆசிரியையாக இருப்பவர் பத்மஸ்ரீ மீனாக்ஷி குருக்கள்.
ஏழு வயதில் தந்தையின் விருப்பத்திற்கிணங்க களரி கற்றுக்கொள்ள ஆரம்பித்த மீனாக்ஷி, விரைவிலேயே அதில் தேர்ச்சி பெற்று தனது பதினேழாவது வயதில் மற்றவர்க்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
இவர், களரியில் பயிற்சியாளராக இருந்த ராகவன் மாஸ்டர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு 1949ல் கேரளாவில் கோழிக்கோடு (Calicut) அருகே, வடகரா என்ற இடத்தில், ‘காடதனாடன் களரி சங்கம்’ (Kadathanadan Kalari Sangam) என்ற களரி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

கேரளாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இவரிடம் களரி கற்று, தாங்களும் அந்தக் கலையை மற்றவர்க்குக் கற்றுத் தருகிறார்கள்.
பயிற்சி அளிப்பதோடு மட்டுமின்றி; வருடத்துக்கு அறுபது மேடை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்.

இந்தப் பள்ளியில் கற்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஆவர். ‘‘பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து காத்துக்கொள்ள, இந்த தற்காப்புக் கலையை அறிவது அவசியம்” என்கிறார் இவர். 2017ம் ஆண்டில் இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. இவரது இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் எல்லோருமே களரியில் சிறந்தவர்கள். பயிற்சிப் பள்ளியில் இவரது ஒரு மகனும் குருக்களாக இருக்கிறார்.

மூன்று கோடி உதவித் தொகை பெறும் மாணவி!

ரோடு மாவட்டம், காசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சுவேகா.
இவர், ‘டெக்ஸ்டெரிட்டி குளோபல்’ என்ற அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார். தொடர்ந்து, இந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பைப் படிக்க ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகையைப் பெற்றிருக்கிறார்.

தாய், தந்தையுடன் மாணவி சுவேகா

இதுகுறித்து, அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில், ‘‘சுவேகா பதினான்கு வயது சிறுமியாக இருந்தபோதே, தனது திறமையால் டெக்ஸ்டெரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டு, பயிற்சி பெற்று வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

1 COMMENT

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

எல்லாம் நாராயணன்!

0
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி படங்கள்: சேகர் இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....