நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை சரியான நேரத்தில் பயன்படுத்தத் தூண்டினால், நன்மையும் வரும்; கொசுறாக மனத் திருப்தியும் தரும்.
(எப்பவும் மெசேஜை கடேசீலதான் எழுதணுமா என்ன? ஜஸ்ட் ஃபார் எ சேஞ்ஜ்!)
என்னுடைய பெரியம்மா சென்னையில் தனியாக வசிக்கிறார். அவரது நலம் விசாரிக்கவும், சிறு சிறு உதவிகள் செய்துத் தரவும் அடிக்கடி அவரது வீட்டுக்குப் போவதுண்டு. அங்கே வீட்டு வேலைக்கு உதவியாக வரும் பெண்ணின் பெயர் தேவி. நல்ல புத்திசாலி, சுறுசுறுப்பு! அவளுக்கு ஒரு அக்கா மகள். அப்படியே எதிர்ப்பதம்; பெயர் கோமதி!
தேவி வேலைக்குப் போகுமிடமெல்லாம், தானும் போய் லேட்டஸ்டாக ஏதாவது சோகக் கதையைச் சொல்லி, யாசகம் கேட்பதுதான் கோமதியின் லைஃப் டைம் ஹாபியே!
நைந்த புடைவை, கலைந்த தலையுடன் இடுப்பில் ஒன்றும், கையில் ஒன்றுமாய் (நல்லவேளை… வயிற்றில் இல்லை!) இரண்டு ஆண் குழந்தைகளுடன் பெரியம்மா வீட்டில் ஆஜர் ஆகிவிடுவாள். டீ, டிபன் என உபச்சாரம் நடக்கும்.
“குழந்தைகளை பாட்டி வீட்டிலோ, அங்கன்வாடியிலோ விட்டுட்டு ஏதாவது வேலைக்குப் போயேன் கோமதி?” என்பேன். அவளும் தினுசு தினுசாகக் காரணம் சொல்லி நழுவுவாள்.
ஒரு சமயம், பெரியம்மா மும்பை போயிருந்தபோது, கோமதி வந்து உதவி கேட்டாள்.
“ஒரு ஐடியா சொல்கிறேன், செய்வியா?”என்றபடி, அவளை தோட்டத்துக்குக் கூட்டிச் சென்றேன். பச்சைப் பசேலென்று இருந்த முருங்கை மரத்தின் கீரைகளை ஒடித்து, சிறு சிறு கட்டுகளாகக் கட்டினேன்.
“இதுல பதினைந்து கட்டுகள் இருக்கு; ஒரு கட்டு பத்து ரூபாய்னு வித்துட்டு வா! வித்தா எல்லா காசுமே உனக்குதான். விக்கலைன்னா நான் பணம் தரேன்!”னு சொன்னேன்.
இரண்டு மணி நேரத்தில் வெற்றிகரமாக விற்றுவிட்டுத் திரும்பினாள்.
மறுவாரம் முருங்கைக்காய், கறிவேப்பிலை, மணத்தக்காளி கீரைகளை தானே பறித்து விற்கும் யுக்தி அவளுக்குத் தெரிந்துவிட்டதில் எனக்கே சர்ப்ரைஸ்!
சில வாரங்களில், கீரை, வாழைப் பூ, வாழைத்தண்டு போன்றவற்றை கோயம்பேட்டில் வாங்கி வந்து விற்கும் அளவுக்கு புத்தி வந்துவிட்டது. இப்போது எங்கள் காலனியில் ட்ரை-சைக்கிளில் கீரை விற்கும் சிறு வியாபாரி ஆகிவிட்டாள் கோமதி. (கூடவே, இரண்டு குழந்தைகளை அமர்த்தியபடியே வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி!)
“ஏன்மா… அந்த கோமதி இப்பல்லாம் நம்ப வீட்டுக்கு வர்றதில்லையே?” என்றார் மும்பை ரிட்டர்ன் பெரியம்மா.
“அவ இப்ப பிஸினெஸ் உமன் ஆயிட்டா பெரியம்மா!” என்று நான் சொல்ல…
“ஆமா, பாட்டிம்மா… கோமதி ரொம்ப பிஸி!” என்று தேவி ஒத்துப் பாட, கோமதியின் உள்ளுக்குள் மறைந்திருந்த சிறு வியாபாரி வெளிப்பட்ட வெற்றிக் கதை பெரியம்மாவுக்குச் சொல்லப்பட்டது.
இப்பல்லாம், “எப்படிக்‘கீரே’ கோமதி?”ன்னு கேட்டா,
“நல்லா‘கீரேன்’பெரீம்மா!” என்று சொல்லி, ஏதாவது ஒரு கீரையை அன்புப் பரிசாக பெரியம்மா கையில் திணித்துவிட்டுச் செல்கிறாளாம் கோமதி!
வாங்கிய கரங்கள், இன்று கொடுக்கும் கரங்களாய் ஆகிவிட்டன. ஓஹோய்!
சின்னதோ, பெருசோ, அல்பமோ, ஆதாயமோ… உங்கக்கிட்ட இதைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமோ?
ஆரம்ப வரிகளை மீண்டும் ஒருமுறை வாசிச்சு, ‘என்ட் கார்ட்’ போட்டுக்கோங்க டியர் கண்மணீஸ்.
நம்மிடம் இருக்கும் திறமையை வெளிகொண்டு வர சில ஆர்வமூட்டல்கள்
இருந்தாலே போதும். உதாரணமாக ‘ஒருவார்த்தை’யை படிக்கும் போதே அந்த ஆர்வம் கிடைத்து விடுகிறது.
காசு கொடுத்து பழக்கி சோம்பேறித்தனம் உண்டாக்காமல் இது போல் உழைத்து வாழ வழி ஏற்படுத்தி கொடுத்தது எக்ஸ்ஸலன்ட் ஐடியா
உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் என்பதை புரிய வைத்த மேடம் அவர்களுக்கு நன்றி.
வேலை இல்லா தாே ர் என்ன வேலை பார்க்க என்று சிந்திக்கும் பாே து “ஒரு வார்த்தை “தலையங்கம்” கை காெ டுக்கும்.அனுஷா மே டத்தின் அபாரமான
அறிவுப்பெட்டக மான தலையங்கத்துக்கு
ஒரு ராயல் ” சல்யூட்.” வாழ்த்துகள்.
து.சே ரன்
ஆலங்குளம்
நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதனை வெளிக்கொணர தூண்டினால் நன்மை வரும், மனத் திருப்தியும் வரும் என்ற வார்த்தை அட்சர லட்சம் பெறும் . காரணம் தாங்கள் தீபாவளிக்கு பட்சணங்களை இரண்டு நிமிடங்களுக்குள் வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னீர்கள். அப்போது எனக்கு அதைப் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லாததால் ஏதோ சுமாராக செய்து அனுப்பி இருந்தேன் (கோதுமை அதற்குப்பிறகு அதைப்பற்றிய மும்முரமாக யோசித்து செயலாற்ற தொடங்கியது இப்பொழுது யூடியூப் சேனலில் ஒன்றரை மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 75 வீடியோக்கள் அப்லோடு செய்து என்னைப் பொருத்தவரை சாதனை செய்து உள்ளேன் இவை அத்தனைக்கும் காரணம் மங்கையர் மலரில் வந்த வீடியோ போடச்சொல்லி அழைத்த அழைப்பு தான் காரணம் தேங்க்யூ ஆசிரியர்
நம் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதனை வெளிக்கொணர தூண்டினால் நன்மை வரும், மனத் திருப்தியும் வரும் என்ற வார்த்தை அட்சர லட்சம் பெறும் . காரணம் தாங்கள் தீபாவளிக்கு பட்சணங்களை இரண்டு நிமிடங்களுக்குள் வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னீர்கள். அப்போது எனக்கு அதைப் பற்றிய அறிவு அவ்வளவாக இல்லாததால் ஏதோ சுமாராக செய்து அனுப்பி இருந்தேன் (கோதுமை அல்வா).அதற்குப்பிறகு அதைப்பற்றி மும்முரமாக யோசித்து செயலாற்ற தொடங்கி இப்பொழுது யூடியூப் சேனலில் ஒன்றரை மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 75 வீடியோக்கள் அப்லோடு செய்து உள்ளேன்(என்னைப் பொருத்தவரை சாதனை செய்து உள்ளேன்) .இவை அத்தனைக்கும் காரணம் மங்கையர் மலரில் வந்த வீடியோ போடச்சொல்லி அழைத்த அழைப்பு தான் காரணம் . தேங்க்யூ ஆசிரியர்.
“”மீ னை கொடுக்காதே .மீன் பிடிக்க கற்றுக்கொ டு ” எனற சீனத்து பழமொழியை நினைவு படுத்தியது .ஆசிரியரி ன் செயல் முறை .
அனு ராதா மேடத்தை “”ஐடியா ராணி என அழைத்தாலும் மிகையாகாது.