0,00 INR

No products in the cart.

சஞ்சீவராயர்!

நெடுங்கதை – 3

– லேzy
ஓவியம் : வேதா 

மிகவும் பழைமை வாய்ந்தது சஞ்சீவராயர் கோயில். அங்கே வீற்றிருக்கும் ஆஞ்சனேயர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். கோயிலுக்குள் வந்தவுடன் சீதாலஷ்மி, தான் எடுத்து வந்த பூஜை சாமான்கள் எல்லாவற்றையும் அழகாக அடுக்கி வைத்து, கோயில் குருக்களிடம் சொல்லி, மிக விமரிசையாக பூஜை, புனஸ்காரம், அர்ச்சனை, மாலை சாத்துதல், நைவேத்தியம் என்று ஒரு குறையுமின்றி செய்து முடித்தாள்.

கோபாலனும் சங்கரனும் நன்றாக சாமி கும்பிட்டனர். இருவரும் கோயிலை ஐந்து முறை, ‘ஓம் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்’ என்று ராம நாமத்தை ஜபித்தபடி வலம் வந்து, கொடி மரத்துக்கு அருகே சாஷ்டாங்கமாய் மூன்று முறை விழுந்து நமஸ்கரித்தனர். பின்னர் இருவரும் கோயிலுக்குப் பின்னாடி இருக்கின்ற ஏரிக்கரையில் சென்று அமர்ந்தனர். அந்த ஆண்டு ஐப்பசி மாதம் நல்ல மழை. ஏரி ரொம்பவே நிரம்பி இருந்தது. அதன் அழகை ரசித்தபடி இருவரும் இருந்தனர். சீதாலஷ்மி கோயில் குருக்களோடு சற்றுத் தள்ளி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

சங்கரன் சொன்னான், “அண்ணா… என்ன ஒரு பொய்யான வாழ்க்கை வாழறோம். சென்னையில, எங்கு பார்த்தாலும் ஒரே கூட்டமும், குழப்பமும், கூச்சலும், புகையுமாக. ஒருத்தனை ஒருத்தன் பார்த்தா சிரிச்சு பேசுறதுகூட இல்லாம போச்சுண்ணா. இங்க பாருங்க… என்ன ஒரு அமைதி, இயற்கைச் சூழல்!”

கோபாலனும், ‘ஆம்’ என்று தலை அசைத்தவாறு, அந்தக் காட்சிகளைப் பார்த்தான். இவர்கள் பக்கம் ஏரிக்கரையில் நான்கு பெண்கள், சந்தோஷமாகப் பேசியபடி துணி துவைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய குழந்தைகள் கரையில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு பெண், தான் வைத்திருந்த ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து சாப்பாடு எடுத்து ஒவ்வொரு குழந்தையையும் அழைத்து அதுகளுக்கு ஒரு கை சாப்பாடு கொடுத்த வண்ணம் இருந்தாள்.

ரியின் எதிர்க்கரையில் வெகுதூரம் ஒரே தோப்பும் தோட்டமுமாய் இருந்தது. அந்த தோப்பின் அடர்ந்த மரக்கிளைகளிலிருந்து, கிளிகளும் மற்ற பறவைகளும் பாடிக் கொண்டிருந்த சப்தம், கேட்பதற்கு வெகு ஆனந்தமாய் இருந்தது. ஏரிக்கரையில், ‘ஜில்’ என்று காற்று வீசிக்கொண்டிருந்தது. இவை அனைத்தையும் ரசித்தபடி சங்கரனும் கோபாலனும் பேசிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு குருக்கள் எழுந்து எங்கோ சென்றார். சீதாலஷ்மி கோயில் மாடத்தில் படுத்து சிறிது நேரம் கண் அயர்ந்தாள்.

கோபாலன் கேட்டான், “சங்கரா, பாதி வழி வந்தாச்சு. அப்படியே போய் வந்தவாசியில உனக்குப் பெண் பார்த்துட்டு வந்துடலாமா?”

“அட, அத உடுங்கண்ணா. ஆமாம் அண்ணா… நான் உங்களை ஒண்ணு கேட்கிறேன். நீங்க ஏன் கல்யாணமே வேண்டாமுனு இருந்துட்டீங்க?”

“எனக்கு என்னமோ கல்யாணத்துல இஷ்டம் இல்லப்பா.”

“அண்ணா, சும்மா சொல்லுங்க, ஏதோ ஒரு காரணம் இருக்கு. என்கிட்ட மறைக்காதீங்கண்ணா, சொல்லுங்க ப்ளீஸ்…” என்றான் சங்கரன்.

சற்று நேரம் கோபாலன் அமைதியாக ஏரி நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு திரும்பி சற்றுத் தொலைவில் படுத்துறங்கும் சீதாலஷ்மியைப் பார்த்தான். அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

ங்கரா, உன்கிட்ட இன்னிக்குச் சொல்றேன். இத்தனை நாள் நான் இதை யாரிடமும் சொன்னதே இல்லை. நான் சின்ன வயசிலேயே அப்பாவை இழந்துட்டேன். எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். அம்மா சின்ன வயசிலேயே தன் கணவரை இழந்ததனாலே எங்க சொந்தக்காரங்க யாருமே அம்மாவை எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் அழைத்தது கிடையாது. நாங்க இரண்டே பேர் ஒருத்தருக்கு ஒருத்தர்னு வாழ்ந்தோம். வீட்டுல நீ உட்கார்றியே அந்த வாச தின்னை, அங்கேதான் என்னை சின்ன வயசுல உட்கார வெச்சு, எங்க அம்மா எனக்கு சாதம் ஊட்டுவா. அந்தத் திண்ணையிலேயே எனக்குத் தலை சீவி, என் தோளிலே பையை மாட்டி என்னை பள்ளிக்கு அனுப்புவா. நான் தெரு திரும்புற வரைக்கும் வாசலிலேயே நின்னு பார்த்துண்டிருப்பா. வாயை கட்டி, வயத்தைக் கட்டி எங்க அம்மா என்னை வளர்த்தது எல்லாம் என்னால இந்த ஜன்மத்தில மறக்க முடியாது சங்கரா. அவ பட்ட கஷ்டம் எல்லாத்தையும் நான் பார்த்து விட்டேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தேன்னா, எனக்கு மனைவியா வரவ எப்படி இருப்பாள்னு எனக்குத் தெரியாது. அதை நினைச்சாலே மனசு பகீர்ன்னுது. எங்க அம்மா ஒரு நொடி கஷ்டப்படுறதைகூட என்னால பார்க்கவே முடியாது. அதான், நான் என் காலம் முழுக்கத் தனிக்கட்டையாகவே இருந்துட்டு போயிடுறேன்” என்று சொல்லி முடித்தான்.

திரும்பி சென்னைக்கு வரும் வழியில் சீதாலஷ்மி, ‘காப்பி வேண்டும்’ என்று கேட்டாள். பூந்தமல்லியில் ஒரு ஹோட்டலின் வாசலில் வண்டியை நிறுத்தி, கோபாலனும் சங்கரனும் உள்ளே சென்றனர். ‘‘அண்ணா, நீங்க உட்கார்ந்து காப்பி சாப்பிட்டுவிட்டு வாங்க. நான் அம்மாவுக்கு ஒரு காப்பி கொடுத்துவிட்டு வரேன்” என்று ஒரு கப் காப்பியை எடுத்து வந்து, ஆற்றி, அதை சீதாலஷ்மிக்குக் கொடுத்தான்.

காப்பி சாப்பிட்டுக்கொண்டே சீதாலஷ்மி கேட்டாள், “டேய் சங்கரா, எப்போ போகப்போறே வந்தவாசிக்கு பெண் பார்க்க…?”

‘‘அது… பார்க்கலாம்மா. இப்போ ஒண்ணும் அவசரம் இல்லை.”

“என்னடா திடீர்னு குண்டை தூக்கிப் போடறே?”

“அப்பா, அம்மாவுக்கு வயசாகிக்கிட்டே இருக்கு. உடம்பும் சரியில்லை. அக்கா வேற வீட்டோட கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கு. இந்த நிலைமைல என்ன கல்யாணம் வேண்டியிருக்கு? வரவ, ‘வாங்க நம்ம தனியா குடுத்தனம் போகலாம்’னு ஆரம்பிச்சா அப்பா, அம்மா, நிலமை என்னவாகும்? அக்காவை யார் பார்த்துப்பா?” என்றான்.

“அப்போ என்னதான்டா பண்ணப்போறே?” என்றாள் சீதாலஷ்மி.

“எனக்கு என்னம்மா குறை? நீங்க இருக்கீங்க. கோபாலண்ணா இருக்காரு. வண்டி ஓடுது. போதும்… தினம் உங்க இரண்டு பேரையும், காசி விஸ்வநாதரையும் பார்த்துட்டு, மாம்பலத்தை சுற்றி சவாரி செய்தாலே போதும்” என்றான்.
(நிறைந்தது)

லேZY
‘லேzy’ என்ற புனைப்பெயரில் தனக்கே உரிய, இயல்பான பாணியில், கதை – கட்டுரைகளை எழுதி வருகிறார் ஹரி. தினசரி தான் சந்திக்கும், பழகும் மனிதர்களையே தன் கதைகளுக்கான கதாபாத்திரங்களாக மையப்படுத்தி எழுதுவது இவர் சிறப்பு. அதனாலேயே, அக்கதாபாத்திரங்களின் வயதையொத்த வாசகருக்கு, ஏதோ ஒரு வகையில் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் அனுபவம் கிடைக்கிறது.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

0
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...