வாசகர் ஜமாய்க்கிறாங்க…

வாசகர் ஜமாய்க்கிறாங்க…
Published on

விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்!

சீன விமானப் படை, பெண் விமானியான வாங்யாயிங் விண்வெளி நிறைய கட்டமைப்புப் பணிக்காக விண்வெளியில் நடந்து சாதனை புரிந்தார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த வாங்யாயிங் ஐந்து வயது பெண் குழந்தைக்குத் தாய் ஆவார். 41 வயதில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 1997ல் சீன ராணுவத்தின் விமானப் படையில் விமானியாகச் சேர்ந்தார். பின்னர், சீன ராணுவத்தின் விண்வெளிப் பிரிவில் 2010ல் இணைந்தார். இப்போதைய விண்வெளிப் பயணத்துக்காக அவர் 2019 டிசம்பரில் தேர்வு செய்யப்பட்டார். சென்ஷோ விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவர், ஏற்கெனவே மையத் தொகுதிக்குள் இருந்தவாறு மாணவர்களுக்கு விரிவுரை நிகழ்த்தினார். இதை நாடு முழுவதும் உள்ள 80,000 பள்ளிகளைச் சேர்ந்த 6 கோடி மாணவர்கள் கண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 1984ஆம் ஆண்டு முதல் 2019 அக்டோபர் வரை மொத்தம் 15 பெண்கள் 42 முறை விண்வெளி நடையில் பங்கேற்றுள்ளனர். ரஷியாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா சாவிட்ஸ் கயா என்பவர்தான் விண்வெளியில் நடந்த முதல் பெண் ஆவாள்.

குரங்கு வடிவப் பூ!

சில பூக்களைப் பார்த்ததுமே நமக்கு ரொம்பப் பிடித்துவிடும். அதன் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருப்போம். அப்படிப் பலரும் ரசிக்கும் பூ வகையில், 'மங்கி ஆர்கிட்' ரகமும் ஒன்றாகும். அதாவது குரங்கு பூ! இது மிகவும் வித்தியாசமான பூ. இந்தப் பூக்களைப் பார்த்தால் உடனே குரங்குதான் ஞாபகத்துக்கு வரும். குரங்கின் முகம் போலவே பூ மலர்ந்திருக்கும். அதனால்தான் இந்தப் பூவுக்கு இந்தப் பெயர். தாவரங்களிலேயே, 'ஆர்கிட்'தான் மிகப் பெரிய குடும்பம். இந்தக் குடும்பத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் இனங்கள் உள்ளன. ஆர்கிட் பூக்களின் சிறப்பே கண்கவர் வண்ணங்களிலும் விதவிதமான உருவங்களிலும் இருப்பதுதான். உலகின் பல இடங்களிலும் ஆர்கிட் இனங்கள் இருக்கின்றன.
ஆனால் இந்த, 'மங்கி ஆர்கிட்' எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. பெரு, ஈக்வடார் போன்ற தென் அமெரிக்க நாடுகளில் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. லூயர் என்ற தாவரவியல் அறிஞர்தான், 'மங்கி ஆர்கிட்' என்று இந்தப் பெயரைச் சூட்டினார்.
'மங்கி ஆர்கிட்'களில் மட்டும் சுமார் 120 வகைகள் இருக்கின்றன. இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, மஞ்சள் என்று வண்ணங்களால் வேறுபட்டாலும் உருவத்தில் குரங்கு போலவே இருக்கின்றன இந்த ரகப் பூக்கள்.

வினாடிக்கு 200 படம்!

ட்டான் என்பது பறக்கும் பூச்சியினங்களில் ஒன்று. மெல்லியதாக இருக்கும். இது பார்ப்பதற்கு அழகானது. இதில் பல வகைகள் உள்ளன. இது கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. ஒரு நாளைக்கு 30 முதல் 100 கொசுக்களை தட்டான் சாப்பிடுகிறது. இது மணிக்கு 36 லிருந்து 64 கி.மீ. வேகத்தில் பறக்கிறது. இதன் பார்க்கும் திறன் மிக வேகமானது. இதற்கேற்ப இதன் கண்கள் வினாடிக்கு 200 படங்களைப் பார்க்கிறது. இது 360 டிகிரி கோணத்தில் பார்க்கிறது.

வங்கேய்பீ

'வங்கேய்பீ' என்ன என்று யோசிக்கிறீர்களா? மணிப்பூர் மாநிலத்தில், 'வங்கேய்' என்னும் ஊரில் நெய்யப்படும் துணி வகைதான், 'வங்கேய்பீ' என்று அழைக்கப்படுகிறது. வெண் பருத்தியில் இருந்து நெய்யப்படும் இந்த மெலிதான துணியை மணிப்பூர் மாநிலப் பெண்கள் விழாக் காலங்களில் அணிகின்றனர். இந்தத் துணியின் தனித்தன்மைக்காக மணிப்பூர் மாநில அரசு புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

கோரத் பூனை!

'கோரத்' என்ற வகைப் பூனையை தாய்லாந்தில் ஒவ்வொரு வீட்டிலும் செல்லமாக வளர்க்கிறார்கள். இந்த வகைப் பூனையின் முகம் இதய வடிவில் இருப்பதால், வீட்டிலுள்ள அனைவருக்கும் அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் என நம்புகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மியாய்… மியாவ்தான்!
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com