0,00 INR

No products in the cart.

வெற்றி வேண்டுமா? போட்டுப்பாருங்கள் எதிர்நீச்சல்!

– சேலம் சுபா

புத்தாண்டு வாழ்த்துக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களும் இந்தக் கொரோனா பயத்தையும் மீறி, முகநூலிலும் இன்னபிற இணைய சேவைகளின் வழியாகவும் நம்மிடம் சேர்ந்து வாழ்வதற்கான தெம்பை அளித்து விட்டன. நமக்கு சரி… பெருந்தொற்றினால் வீட்டில் அடைபட்டு, அலைபேசி வழியே பாடங்களைப் புரிந்தும் புரியாமலும் படித்துத் ‘தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ?’ எனும் குழப்பத்தில் இருக்கும் இளைய தலைமுறையை நினைத்துப்பார்த்தால் கவலையே மிஞ்சுகிறது.

வாழ்வில் எல்லோரும் வெற்றி பெறவே விரும்புவோம். பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரேமாதிரியாகத்தான் பிறக்கின்றன. ஆனால், வளர வளர சூழ்நிலை மாற்றங்கள் அவர்களை வெற்றியாளர்களாகவோ, தோல்வியாளர்களாகவோ மாற்றி விடுகிறது. சரி… ஏன் எல்லோராலும் வெற்றிச்சிகரத்தை தொட முடியாதா? ஏன் முடியாது?

மனிதராகப் பிறந்த அனைவராலும் வெற்றிக்கனியை ருசிக்க முடியும். என்ன… அதற்காகக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ‘சரி, நாங்கள் கஷ்டப்படத் தயார். இந்தப் பெருந்தொற்று எங்களை முடக்கி, மூலையில் உட்கார வைக்கிறதே? நாங்கள் என்ன செய்ய? என்று கேட்கிறான் என் மகன். அவனுக்கு என்ன சொல்லி ஊக்கப்படுத்துவது?’ என்று கேட்ட என் தோழிக்கு நான் சொன்னதை, மன்னிக்கவும் மகாகவி பாரதியார் சொன்னதை அப்படியே இங்கு எழுதியுள்ளேன். நடுநடுவே எனது பஞ்ச் வரிகளும் உண்டு. படியுங்கள்… கட்டாயம் அது உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வழிகாட்ட உதவும்.  பிள்ளைகளுக்கு மட்டுமல்ல; நமக்கும் தற்போதைய சூழலில் இந்த வெற்றிக்கான ரகசியங்கள் தேவைதான்.

வாழ்க்கையில் ஒருவர் வெற்றியடைய வேண்டுமெனில், அவர் சம்பாதிக்க வேண்டிய பொருள்கள் எல்லாவற்றிலும் குணமே மிக மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
பஞ்ச் : தங்கமும் வைரமும் சேர்ப்பது மட்டும் நம் வெற்றியாகாது; ‘தங்கமான குணம் இவருக்கு, வைர நெஞ்சம் கொண்டவர் இவர்’ என பிறர் சொல்லும்படி நடந்துகொள்ளும் குணமே வெற்றிக்கு முதல் வழி.

எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் ஆணிவேராக உள்ளது. எனவே, அறிவிருந்தால் எதையும் வெல்லலாம்.
பஞ்ச் : எல்லாம் தெரியும் எனும் ஆணவத்தை விட்டு விட்டு, அறிவுக்கண்ணைத் திறந்து வைத்தால் வெற்றிப்பார்வை கிட்டும்.

அன்புடன் செய்யப்படும் உபகாரமே பூஜை எனப்படும். அன்பிருந்தால் கோபம் வராது. அன்பினால் உலகின் துன்பங்களை எளிதில் மாற்றி விடலாம்.
பஞ்ச் : அதிக அன்பும் துன்பத்தையே தரும். பேராசையைப் போல, துன்பம் தராத அன்பு மட்டுமே வெற்றியைத் தரும்.

உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோதைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.
பஞ்ச் : தெய்வ நம்பிக்கை உள்ளவன் தளர்ந்து போகமாட்டான். தளர்ந்து போகாதவன் தோல்வி அடைய மாட்டான். ஆக, இரண்டும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.

பொறுமை எவ்வளவு குறைகிறதோ அந்த அளவிற்கு வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றி குறைகிறது. அதாவது, லாபங்கள் குறைந்துகொண்டே இருக்கும். எனவே, பொறுமை அவசியம்.
பஞ்ச் : ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’னு எந்தச் செயலையும் அவசரப்பட்டு செய்யக்கூடாது. வெற்றிக்குப் பிரதானம் நிதானம்தான்.

பொறுமை இல்லாதவன் இவ்வுலகத்தில் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பான். அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எந்த அளவிற்குப் பொறுமை இருக்கிறதோ, அந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும்.
பஞ்ச் : ரொம்ப பொறுமையா இருந்தாலும் துன்பம்தான். (வி)வேகமான செயல்கள்தான் வெற்றியைத் தரும்.

உடல் வலிமையாக இருக்க மனவலிமை அவசியம். உடலிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை பெறுவதற்கான மன உறுதி, நம்பிக்கை, உற்சாகம் ஆகிய மூன்று குணங்கள் அவசியம் வேண்டும்.
பஞ்ச் : இந்த குணங்களோடு அப்பப்ப உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் அவசியம் தேவை. முக்கியமாக, தீய பழக்கங்கள் பக்கம் போகாத மன உறுதி வேண்டும்.

உடலை வியர்க்க வியர்க்க உழைக்கப் பயன்படுத்தினால் நல்ல பசி உண்டாகும். உழைப்பால் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதை உற்சாக நிலையில் வைத்துக்கொண்டால் உடலில் சக்தி கூடும்.
பஞ்ச் : கணினி முன்னாடியே உட்கார்ந்திருந்தால் உடலில் எங்கே வியர்வை வரும்? பேசாமல் அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளைச் செய்து பாருங்க. வியர்வையும் வரும். நல்ல சாப்பாடும் கிடைக்கும்.

வையெல்லாம் பாரதியார் சொன்ன வெற்றி ரகசியங்களில் சிறு பகுதிதான். உண்மயான வெற்றி என்பது என்ன தெரியுமா? உங்கள் பார்வையில் நீங்கள் வெற்றி என்று எந்த விஷயத்தை உணர்கிறீர்களோ, அதுதான் உங்களின் முழுமையான வெற்றி. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வெற்றியின் அளவும் நோக்கமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதை உணர்ந்து அடுத்தவரைப் பார்த்து ஒப்பீடு செய்யாமல் நம்முடைய பலத்தையும் பலவீனத்தையும் மட்டும் கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுங்கள். பாரதியார் போன்ற சான்றோர்களின் அறிவுரைகளையும் அவ்வப்போது குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.

தோழிக்கு சந்தோஷம். நான் பேசியவைகளை அலைபேசியில் பதிய வைத்தவள், அதை அப்படியே தனது மகனுக்குப் போட்டுக் காண்பிப்பதாகச் சொல்லிச் சென்றாள்.

என் மைன்ட் வாய்சில், ‘வெற்றி வேண்டுமா? போட்டுப்பாருங்கள் எதிர்நீச்சல்’ எனும் பாடல் வரிகள் ஒலித்தது.

2 COMMENTS

  1. ‘தெய்வ பக்தி உள்ளவன் தளர்ந்து போக மாட்டான். தளர்ந்து போகாதவன் தோல்வி அடைய மாட்டான் . ‘ மிகவும் அருமை.

    ஆ. மாடக்கண்ணு
    பாப்பான்குளம்

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!

- மஞ்சுளா சுவாமிநாதன்  கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு. கடந்த இரண்டு வருஷமா வீட்டுலயே  முடங்கிக் கிடந்த எங்களுக்கு சென்ற டிசம்பர் மாதம் ‘ஓமைக்ரான்' வருதே,...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம், பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் அவர்களை, கலாசாரத்திற்கான ஆலோசனைக் குழு (Central Advisory Board...

முத்துக்கள் மூன்று

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன் ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா. தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்...

எல்லாம் நாராயணன்!

0
தொகுப்பு: எஸ். சந்திர மௌலி படங்கள்: சேகர் இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு: பத்மினி பட்டபிராமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சாதனை அண்மையில் நியூசிலாந்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சுற்றுப் பயணம் செய்து நியூசிலாந்து மகளிர் அணியுடன் திறமையாக விளையாடினார்கள்....