0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

நடிகை ரோஜா ஆந்திரப் பிரதேசத்தின் அமைச்சர் ஆகிவிட்டாரே!!
– வாசுதேவன், பெங்களூரு

நான் ரோஜாவை ஸ்ரீலதாவாகச் சந்தித்தது ‘செம்பருத்தி’ காலக்கட்டத்தில்… சென்னை தி.நகரில் உள்ள விஜயராகவன் சாலையில் உள்ள ஃபிளாட் ஒன்றில் சந்தித்தேன். (பேட்டி, டைரக்டர் செல்வமணியின் சிபாரிசு!)

தூக்கம் மிச்சிமிருந்த கண்களுடன், கலைந்த தலையுடன் வந்து கதவைத் திறந்தார் ரோஜா.

ரூபிணி, சீதா, தேவயானி, மீனா போன்ற பால்மேனி நடிகையருடன் இந்தத் திருப்பதிப் பெண் போட்டிப் போடுவாரா என்றுதான் முதலில் தோன்றியது.

ஆனால் அந்த முகவெட்டும், பளிச் பல்வரிசையும், அழகான கண்களும் (கூடவே அதிர்ஷ்டம்) அவரை முன்னணி கதாநாயகியாக்கிவிட்டது. அடுத்தது என்ன? அரசியல்தானே?

துணிச்சலான பேச்சும் (‘மோட்டார் மவுத்’ என்ற பட்டப்பெயர் இருந்தாலும்…) தடாலடியாகப் போராடுவதும் அவரை நகரி எம்.எல்.ஏ.வாக்கியது.

இப்போது கட்சி விசுவாசமும், தொகுதி செல்வாக்கும் சுற்றுலாத்துறை மந்திரி ஆக்கியுள்ளது.

“என் ரோல் மாடல் ஜெயலலிதா மேடம்தான்” என்று அடிக்கடி சொல்லிக் கொள்பவர் ரோஜா! வருங்கால ‘சி.எம்.’ ஆனாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அரசியல் உலகில் எதுவும் சகஜமப்பா!

எனிவே, உங்க விடாமுயற்சிக்கு அபிநந்தனமு ரோஜாகாரு!

……………………………………

மேடம், ‘ஸ்டான்லி கா டப்பா’ பார்த்தீங்களா?
-என்.கோமதி, நெல்லை

நெஞ்சைத் தொடும் சில படங்கள், வணிகரீதியாக வசூலிக்காவிட்டாலும் பரவாயில்லை, ரசிகர்களின் கவனத்தைக்கூட கவராமல் போவது வருத்தமே! ‘ஸ்டான்லி கா டப்பா’ அந்த ரகம்!

ஸ்டான்லி ஒரு புத்திசாலியான, கற்பனை மிகுந்த, அழகுப் பையன். (அவன் தினமும் பள்ளிக்குள் நுழையும்போது, பாலகன் ஏசு பெற்றோருடன் இருக்கும் சிலையை ஏக்கத்துடன் பார்ப்பதாக காட்சி இருக்கும்!)

அப்படிப்பட்ட குழந்தை, ஏன் தினமும் தலை கலைந்து, முகமெல்லாம் வீக்கத்துடன், லஞ்ச் – பாக்ஸ் இல்லாமல் பள்ளிக்கு வருகிறான் என்று எந்த டீச்சருமே கவனிப்பதில்லை. (நம்முடைய கல்வித்துறையின் லட்சணத்தைக் காட்டியதற்கு நன்றி) அதுமட்டுமல்ல, பசி, ஆசிரியர் துன்புறுத்தல், அழகிய நட்பு, மனிதநேயம் என பல தளங்களில் உணர்ச்சிகரமாகச் சுழல்கிறது கதை!

க்ளைமேக்ஸ் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியானது அல்ல; ஆனால் நிச்சயம் நெகிழ்ச்சியானது.

உபரி தகவல் 1- ‘தாரே ஸமீன் பர்’ ‘ஹவா ஹவா’ போன்ற சிறுவர் படங்களை இயக்கிய அதே அமோல் குப்தேதான் இதையும் இயக்கியுள்ளார்.

உபரித் தகவல் 2 ஸ்டான்லியாக நடித்திருக்கும் பார்த்தோ குப்தே, இயக்குநர் அமோலின் மகன்!

உபரித் தகவல் 3 ‘இவ்வளவு சிறு வயதில் இப்படியெல்லாம் கூட முகபாவம் காட்டி கேஷுவலாக நடிக்க முடியுமா?’ என்று ஆச்சரியப்பட வைத்த பார்த்தோ, இப்போது வெளிநாட்டில் ஃபிலிம் கோர்ஸ் படிக்கிறாராம்!பார்த்தோவுக்கு வாழ்த்து!

……………………………………

ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்ட தமிழணங்கு சர்ச்சைக்கு உள்ளானதே!
– வாணி வெங்கடேஷ், சென்னை

வெள்ளைச் சேலையில், தலைவிரி கோலமாக கோபத்துடன் சுழன்றாடுவதுதான் தமிழன்னையா? சுந்தர் சி. படத்தில் வரும் பேய் போல அல்லவா இருக்கிறது?

‘தமிழ்த்தாய்’ எப்படி இருப்பாள் தெரியுமா?
(ஜீவக) சிந்தாமணியை மார்பிலும்
குண்டலக்கேசியைக் காதிலும்
வளையாபதியை கையிலும்
(மணி)மேகலையை இடுப்பிலும்!
சிலம்பை பாதங்களிலும்
சூளாமணியை பொன்முடியிலும் அணிந்து
தாமரைப் பூவில் அழகு தேவதையாக அறிவுப் பொலிவுடன் சுகாசனத்தில் அமர்ந்திருப்பாள்.
உருப்படியா எதுனா செய்யுங்க மிஸ்டர் ஏ.ஆர்.ரஹ்மான்! உங்க பர்சனாலிடிக்கு பாலிடிக்ஸ் செட் ஆகல! புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்…!

……………………………………

மங்கையர்மலருக்குப் படைப்புகளை இ-மெயில் மூலம்தான் அனுப்பணுமா? தபாலில் அனுப்பப்படுபவைப் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா?
-எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

லகமே நுனிவிரலில்… ஒரு கிளிக்கில் சுலபம் ஆகிவிட்டபோது… நாமும் மாறுவது புத்திசாலித்தனம் இல்லையா ராஜம்? தபாலில் அனுப்பி, அது கிடைத்து… வேண்டாமே பிளீஸ்… ஜம்முன்னு mail தட்டி விடுங்க.
பை தி வே, உங்க விலாசம் பார்த்தேன். ‘மல்லிகைப் பூ அக்ரஹாரமா?’ முகவரியே ‘கும்’முன்னு மணம் வீசுதே! ’ஜம்…கும்’ இந்த வாக்கியம்கூட எதுகை – மோனையோட செமையா வர்க் அவுட் ஆயிடுச்சே!
வாட் எ ப்யூட்டி!

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

அன்னையர் தினத்தை சிறப்பித்து வந்த சலுகைகளில் தங்களைக் கவர்ந்தது எதுவோ? -ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம் “சிக்குபுக்கு, சிக்குபுக்கு ரயிலே’ ஆஃபர்தான்! சிறு குழந்தைகளுடன் இரவு ரயிலில் பிரயாணிக்கும்போது, அவர்களைத் தூங்கவைக்க போதிய இடம் இல்லாமல் அவஸ்தைப்படுவோம் இல்லையா? தனியாகப் படுக்கவைத்தால்...

அன்புவட்டம்!

டி.வி.யில் வரும் சமையல் குறிப்புகளுக்கும், பத்திரிகையில் வரும் சமையல் குறிப்புகளுக்கும் என்ன வித்தியாசம்? -கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி டி.வி. ல பார்த்து சமைக்கும்போது (அதுவும் ஏகப்பட்ட கமர்ஷியல் பிரேக்குப் பிறகு...!) கவனமா பார்த்து, எல்லாத்தையும் ஞாபகத்துல...

அன்புவட்டம்!

காலம் காலமாய் கச்சேரி கேட்டாலும், கல்யாணி, காம்போதி அலுக்கவில்லையே... எப்படி? -சீனு சந்திரா, சென்னை கல்யாணி, காம்போதி இரண்டுமே கனமான ராகங்கள்... ஐ மீன் ஹை க்ளாசிக்கல். அதனால் அவை தரும் நேர்வள அதிர்வலைகளின் வீர்யமும் மகத்தானவையாம்....

அன்புவட்டம்!

பெண்கள், பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்று பெருமையுடன் பேசிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குடும்பத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பெண்களின் நிலைமை என்னவென்று சொல்வது? -வத்சலா சதாசிவன், சென்னை ‘அதிசயப்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

1
வால்நட்டின் சிறப்புகள்! வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. உயர் இரத்த...