0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

படங்கள்: பிள்ளை

 

“உன் புருஷனுக்கு சமைப்பது ‘கைவந்த கலை’ங்கிறியே! ரொம்ப வருஷமா சமைத்திருக்கிறாரா?”

“இல்லை! நேத்துதான் முதன் முதலா சமைச்சார்! அதுலேயே கையில கொதிக்க, கொதிக்க சாம்பாரை கொட்டிக்கிட்டு, ‘கைவெந்த கலை’ ஆயிடுச்சு!

-சம்பத்குமாரி, பொன்மலை

…………………………………………

“சர்வர் சரியா கிடைக்காததால தொழில்ல ஏகப்பட்ட நஷ்டம்கிறாரே! அவர் என்ன ஓட்டல் வச்சிருக்காரா?”

“இல்லை. IT கம்பெனி வச்சிருக்கார்!”

-சம்பத்குமாரி, பொன்மலை

…………………………………………

“அந்த இளைஞர் அப்படி என்ன கேட்டார்…? நம்ம பேங்க் மானேஜர் கடுப்பாயிட்டார்?”

“ஸ்டார்ட் – அப் நிறுவனங்களுக்கு கடன் தர்ற மாதிரி, ஸ்டார்ட் – அப் காதலுக்கு கடன் தர முடியுமான்னு கேட்டாராம்!”

-சம்பத்குமாரி, பொன்மலை

…………………………………………

என்னது? “சாப்பிடற பண்டங்கள் ருசியே தெரியாமல் மண்ணு மாதிரி இருக்கா?”

“முப்பது வருஷமா அப்படித்தான் இருக்கு டாக்டர். கல்யாணம் ஆனதில் இருந்து!”

– ஆர். யோகமித்ரா, சென்னை

…………………………………………

“புலவரே… முதலில் உமது எழுத்தாணியை கூர் தீட்டும்.”

“ஏன் மன்னா?”

“ஓலையில் எழுத்தே பதியவில்லை”

–  ஆர். யோகமித்ரா, சென்னை

…………………………………………

“என்னது இட்லியில மல்லிகைப்பூ வாசனை வருது?”

“நீங்கதானே இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருக்கணும்னு சொன்னீங்க!

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

…………………………………………

“என்ன புது டிபன் செய்தாலும் முதல்ல என் மாமியாருக்கக் கொடுப்பேன்!

“டேஸ்ட் பண்ணவா?”

“இல்ல டெஸ்ட் பண்ண!

– எஸ். ராஜம், ஸ்ரீரங்கம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...