0,00 INR

No products in the cart.

லட்சியத்தில் தொடங்கி லட்சங்களில் சம்பாதிக்கிறேன்!

-தனுஜா ஜெயராமன், சென்னை

ள் பாதி, ஆடை பாதி என்பது பழமொழி. அத்தகைய பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக நமது வெளிப்புற தோற்றங்களை தனது அழகான ஆடை வடிவமைப்பினால் பேரழகாக பரிமளிக்க வைக்கிறார் பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ‘ஆதிரா பொட்டிக்’ வைத்திருக்கும் அதன் உரிமையாளர் வனஜா செல்வராஜ். ஆடை வடிவமைப்புத் துறையில் தனக்கென தனிமுத்திரை பதித்து வரும் ஆதிரா பொட்டிக் பாண்டிச்சேரியில் மிக பிரபலமான நிறுவனம்.

வனஜா செல்வராஜ்

தற்போது தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியின் பல்வேறு துறைசார்ந்த விஐபிக்கள் இவரது ரெகுலர் கஸ்டமர்களாக உள்ளனர். தற்போது பெருகிவரும் சமூக தொழில்நுட்ப தளங்களின் உதவியுடன் ஆன்லைனிலேயே அளவெடுத்து, கச்சிதமான கண்கவரும்  உடைகளை வடிவமைத்து வெளிநாட்டுவாழ் வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பி வைத்து  தனது வியாபாரத்தை உலகெங்கும் விரிவுபடுத்தியிருக்கிறார். எல்லாவற்றையும் விட  நமது மங்கையர்லரின் முப்பது வருட வாசகி என்பதை பெருமையுடன் சொல்லி கொள்கிறார் திருமதி. வனஜா செல்வராஜ் அவரிடம் பேசியதிலிருந்து…
“நான் எட்டுவயதாக இருக்கும் போது ஒரு பேப்பரில் கத்தரிக்கோல் வைத்து கட் செய்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த அம்மா எனக்கு தையற்துறையில் ஆர்வமிருப்பதை புரிந்து கொண்டார். அதனால் தையல் கற்கும் வகுப்பில் சேர்த்து விட்டார். என் எட்டு வயதில் தொடங்கிய இந்த தையல் பயணம் தற்போது வரை தொடர்கிறது. பத்து வயதிலேயே வெளிநபர்களின் துணிகளை தைத்து தரும் அளவிற்கு வளர்ந்து விட்டேன். நாளடைவில் என்னால் தைக்க இயலாத அளவு ஆர்டர்கள் குவிந்தன.

எனது இருபத்தியைந்தாவது வயதில்  ஆறு தையற் கலைஞர்களுடன் எனது தையல் யூனிட்டை விரிவுபடுத்தியிருந்தேன். எனது தையற்கலையின் நேர்த்தியையும் அழகையும் கண்டு பல்வேறு ஆர்டர்கள் மளமளவென குவிந்தன. அந்த காலகட்டத்தில் தையலை தவிர பல்வேறு உபத்தொழில்களை செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு என் அன்பும் ஆதரவும் அதிகம் தேவைப்பட மற்ற தொழில்களை நிறுத்திவிட்டு தையற்தொழிலை மட்டுமே முழுநேரம் செய்யலாம் என்ற என் மகள்களின் ஐடியாக்களை நடைமுறை படுத்தினேன்.

அப்படி உதித்ததுதான் ‘ஆதிரா பொட்டிக்’. நான் தையற்வேலைகளை கவனித்துக்கொள்ள அதில் கலர்கள் மற்றும் டிசைன்களை தேர்தெடுக்க பெரிய மகள் உதவ, என் சிறிய மகள் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் என சமூக வலைத்தளங்களில் நான் தைத்த உடைகளை அப்லோட் செய்யும் தொழில்நுட்ப உதவிகளை செய்து தர என எங்கள் மூவரின் உழைப்பில் ஆதிரா பொட்டிக் பெரிய அளவில் வளர்ந்தது.

இன்று எங்களது வாடிக்கையாளர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்லாந்து சுவிட்சர்லாந்து என உலகமெங்கும் பரவியுள்ளனர். எங்களது நிறுவனத்திற்கு இதுவரை தனியாக பணம் கொடுத்து விளம்பரம் செய்ததே  இல்லை. அனைத்துமே எங்கள் தொழில் நேர்த்தியால் கிடைத்த வாய்மொழி விளம்பரங்களே. எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய காரணம்  எங்களுடைய கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் எங்களது வாடிக்கையாளர்கள் மட்டுமே எனலாம்.

தற்போது 21 பணியாளர்களுடன் ஆதிரா பொட்டிக் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. மணப்பெண் உடைகள், விழாக்கள், பார்ட்டிக்கான உடைகள், போட்டோ ஷூட்கள், சின்னத்திரை, பெரியத்திரை ஷூட்கள் என அவர்களின் ஆடைகள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.

அதன் பிறகு எங்களது மகள்கள், அவரவரது வேலை,  குடும்பம் என வேறுதிசையில் பயணிக்க தொடங்க, தற்போது அட்மின் பொறுப்புகளை கணவர் கவனித்துக்கொள்கிறார். நான் மற்ற அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். ஒரு லட்சியத்துடன் தொடங்கினேன் இன்று லட்சங்களில் சம்பாதிக்கிறேன்,”  என்கிறார் வனஜா.

இதைத் தவிர கார்டனிங், கோலம் போடுதல், புத்தகங்கள் வாசிப்பது
என எஞ்சிய பொழுதுகளையும் பயனுள்ளதாக  கழிக்கிறார்
வனஜா அவர்கள். அவரது புத்தக அலமாரியை, சுமார் முப்பது
வருடங்களாக அவர் சேர்த்து வைத்த மங்கையர்  மலர்
இதழ்கள் அலங்கரிக்கின்றது.

‘நம்மால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை மட்டுமே இருந்தால் போதும்
பெண்கள் வானத்தையும் தொடலாம் என்கிறார் பெண் தொழில் முனைவோரான வனஜா செல்வராஜ்.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...