0,00 INR

No products in the cart.

ஒரு பக்கக் கதைகள்!

படங்கள்: பிள்ளை

 

பூஜை! 
– அகிலா மணிவண்ணன்

வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, அதில் அகல்விளக்கு  வைத்தாள் மைதிலி. கணவன் ரகுவிற்கு தகவல் கொடுத்து விட்டு அவன் வருகைக்கு தவித்தாள்.

பக்கத்து வீட்டு பரிமளா பத்து நிமிடம் முன்பு சொல்லி விட்டு போனது நினைவுக்கு வந்தது. “மைதிலி! எங்கம்மா ஊர்ல இருந்து இப்பதான் போன் பண்ணாங்க.”

“என்ன விஷயம் அக்கா?”

“வீட்ல இருக்கிற பெரியவங்கள ஒரு வாரம் வீட்ல தங்க வைச்சி பூஜிக்கணுமாம். இல்லைன்னா நாம் பெத்த பிள்ளைங்க ஆணோ, பெண்ணோ உயிருக்கு ஆபத்தாம். என் வீட்டுக்காரரு அவங்க அம்மாவை கிராமத்திலிருந்து கூப்பிட்டு வர போயிட்டாரு. நீ வேற ஒத்த பெண் புள்ளைய வைச்சிருக்க…” மைதிலி கலங்கிப் போனாள்.

ரகு வந்துவிட்டான்.”இப்பவே முதியோர் இல்லத்தில் இருக்கற உங்க அப்பா, அம்மா இரண்டு பேரையும் அழைச்சிட்டு வாங்க!”

மனைவி சொல்லே மந்திரம் என வாடகை கார் எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டான். முதியோர் இல்லம் வாசலில் நிறைய வாகனங்கள். விஷயம் காட்டுத்தீயாக பரவி இருந்தது.

மைதிலி வீட்டில் பூஜை அறை சென்று வழிபட்டாள். டிவியை ஆன் செய்தாள். “ வீட்டு பெரியோரை வழிபடுங்கள்! இல்லையேல் குழந்தைகளை இழக்க வேண்டி இருக்கும்,” என்று ஒரு பெண் பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தாள். முதியோர் இல்லத்தில் மேனேஜராக பணிபுரியும் விக்னேஷ் அதே செய்தியைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.  “பிள்ளை செண்டிமெண்ட் எப்படி வேலை செய்கிறது? பெத்தவர்களை காப்பது கடமை என்பது மாறி புண்ணியம்,” என்ற நிலை வந்துவிட்டதை நினைத்து பெருமூச்சு விட்டான். “ஏதோ என்னால் முடிந்த ஒரு செயல் !” என புரளி கிளப்பிவிட்டு, பெற்றோரை அழைத்து செல்லும் பிள்ளைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தான் விக்னேஷ்.

———————————————-

 வரமா? சாபமா? 
அனுராதா சுரேஷ் 

ந்த புகழ்பெற்ற முருகன் கோயிலில் கூட்டம் முண்டியடித்தது. குடும்பத்தோடு காரில் வந்திறங்கிய ஆனந்த்  தர்ம தரிசன க்யுவில் நுழைந்தார். ”என்னங்க! 300 ரூபா வரிசையிலே போகலாங்க! சாமி கும்பிட கொஞ்சம் பணம் செலவழிச்சா பரவாயில்லை!” மனைவி ரேவதி சொல்வதை காதில் வாங்கவே இல்லை.

“இவர் கூட சாமி கும்பிட வந்தேன் பாரு!” முணுமுணுத்தபடி பின் தொடர்ந்தாள் ரேவதி. கூட்டத்தில் தள்ளுமுள்ளில் சிக்கி உடையெல்லாம் கசங்கி வியர்த்துப் போய் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரவும் கோயிலின் தர்மகர்த்தா வரவும் சரியாக இருந்தது. “என்ன ஆனந்த் சொல்லியிருந்தா நேரா மூலவர் கிட்டேயே கூட்டிப் போய் தரிசனம் செஞ்சு வச்சிருப்பேனே? ஒரு போன் பண்ணக் கூடாதா?” என அவர் கேட்க…

இருக்கட்டும் சார்! திடீர்னு கிளம்பி வந்துட்டோம்! இன்னொரு முறை பார்ப்போம்! என்று கோயில் பிரகாரத்தை வலம் வந்து காரில் ஏறியதும் ரேவதி கேட்டாள், ”கோயில்ல பெரிய ஆளையெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க! நம்ம கிட்டே பணத்துக்கும் குறைச்சல் இல்லே! அப்புறம் எதுக்குங்க கூட்டத்துலே முண்டியடிச்சிட்டு தரிசனம். நேரா போய் சாமி தரிசனம் பார்த்துட்டு பத்து நிமிஷத்துலே திரும்பிடலாம் இல்லே?”

“ரேவதி! நாம சாமி கிட்டே வரம் கேட்டு சாமி கும்பிட வந்திருக்கோம்! அதுக்கு கொஞ்சம் சிரமப்படறதுலே தப்பே இல்லை! நாம நம்ம இன்ப்ளூயண்ஸை வெச்சு இத்தனை ஜனங்களை முந்திகிட்டு முன்னே போய் சாமி கும்பிட்டிருந்தா இத்தனை பேரோட வாயிலேயும் விழுந்திருப்போம்! சாபங்களை சம்பாதிச்சிருப்போம்! வரம் வாங்க வந்துட்டு சாபம் வாங்கிட்டு போறது சரியா?” ஆனந்த் கேட்கவும். “உண்மைதாங்க! நீங்க செஞ்சதுதான் சரி!” என்றாள். ரேவதி.

———————————————-

அம்மா
 சசிமாலா சேகர் 

னக்கு என் துணிகளை தனியாக துவைக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. என் வீட்டில் அப்படி இல்லை . என் துணி , அம்மா துணி , அப்பா துணி , அண்ணன் துணி என எல்லோர் துணியையும் ஒன்றாகப் போட்டுத்தான் துவைப்போம். தனியாக சிறிது துணியைப் போட்டால் , மின்சார கட்டணம் யார் கட்டுவது என அம்மா சண்டைக்கு வந்து விடுவாள். அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாது . திருமணத்திற்குப் பிறகு , என் மாமியார் அப்படித்தான் அனைவரது துணியையும் ஒன்றாக போட்டுத் துவைப்பார்கள் . எனக்கு அது ஒரு நெருடலாகவே இருந்தது. ஏன் மற்றவர்கள் துணியோடு நம் துணியை சேர்க்க வேண்டும் என நினைத்த நான் , இனிமேல் என் துணியை பிறர் துணியோடு சேர்த்து துவைக்கக் கூடாது என சொன்னதும் , என் கணவர் உட்பட யாரும் எதிர்ப்புச் சொல்லவில்லை. என் சுதந்திரத்தை நான் காப்பாற்றிக் கொண்டதாக என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.

மாதங்கள் சில ஓடின. நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு , படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயம் . ஒரு மாதமாவது கட்டாயம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்லி விட்டனர்.

நடுவில் என்னை பார்க்க வந்த என் அம்மா கூட , இரு நாட்களில் கிளம்பி விட்டார்கள் . என் மாமியார் என் அருகில் வந்து , ‘பயப்படாதே செல்லம் , அம்மா இருக்கேன் ‘ என்று சொன்னதுடன் என்னை ஒரு குழந்தையாய் பார்த்துக் கொண்டார்கள். இரவில் சில நாட்கள், எழுந்திருக்க முடியாததால் நான் படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுவேன். அது மட்டுமல்ல, தினம் நான் மலம் கழிக்க மாமியார் தான் உடனிருந்து , என்னை பக்குவமாக மலம் கழிக்கும் நாற்காலியில் உட்கார வைத்து, சுத்தம் செய்து , தினம்  விடியற்காலை எனக்கு சுடு தண்ணி வைத்து ,உடலை துடைத்து, உடைமாற்றி விட்டார்கள். நான் சிறுநீர் கழித்த துணியை, சிரித்த முகத்துடன்  எவ்வித முக மாற்றமும் இல்லாமல் கையால் எடுத்துக் கொண்டு ,“ அம்மாடி , கவலை படாதேடா . இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் . எல்லாம் சரியாகிடும். உனக்குத்தான் உன் துணியை மத்தவங்க துணியோடு சேர்த்து துவைத்தால்  பிடிக்காதே. அதனால தினம் உன் துணியை அம்மாவே  தனியா , கையால் துவைச்சி காய வச்சிடுவேன்.” என சாதரணமாக பேசினார்கள்.

மூச்சுக்கு மூச்சு மாமியார் என அதுவரை நினைத்த நான், அவமானத்தால் கூனி குறுகி, உடைந்துப்  போனேன். எனக்கு பேச்சு வரவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது.

1 COMMENT

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...