0,00 INR

No products in the cart.

ஒரு வார்த்தை!

து ஒரு காலேஜ் ஹாஸ்டல். அங்கே நூறு மாணவியர் தங்கிப் படித்து வந்தனர். அந்த விடுதியில், காலை உணவு என்னத் தெரியுமோ? ரவை உப்புமா! வாரத்துக்கு இரண்டு நாளோ, மூணு நாளோ இல்லை… தினமுமே ரவை உப்புமா… ரவை உப்புமா! தவிர வேறு ஒண்ணுமில்லை!

 • நூறு மாணவியரில் 80 பேருக்கு அந்த உப்புமா பிடிக்காமல் போகவே, வார்டனிடம் போய் புகார் கொடுத்துவிட்டனர். ஆனால் மற்ற 20 பேருக்கு உப்புமா பிடித்ததிருந்தது. “நோ…மேம்…. வி ஆர் ஓகே வித் உப்புமா!” என்றனர். வார்டனுக்கோ ஒரே குழப்பம்!

சரி, ஒரு தேர்தல் போல வெச்சு, எந்தச் சிற்றுண்டிச் செய்யலாம்னு, வோட்டு போட்டு முடிவெடுக்கலாம்னு தீர்மானிச்சாங்க.

உப்புமா பிடிச்சுருக்குன்னு சொன்ன 20 பேரைத் தவிர மிச்சம் 80 பேர் இருக்காங்களே! ஆளுக்கொரு டேஸ்ட் இருக்குமில்லையா? அதன்படி வாக்கு போட்டாங்க.

மசால் தோசை –  18

ஆலு பராத்தா – 16

ரோட்டி, சப்ஜி – 14

பிரட், பட்டர், ஜாம்- 12

நூடுல்ஸ் – 10,

இட்லி, சாம்பார்  – 10

 • இதுதான் ரிஸல்ட்! நம்ப தேர்தல் முறைப்படி, மெஜாரிட்டிதானே எப்பவும் ஜெயிக்கும்?

அப்ப சரி 20 வாக்குகள் வாங்கிய ‘உப்புமாதான் டிபன்’ன்னு மறுபடி முடிவாயிடுச்சாம்!

நீதி:- நம்மிடையே பல நல்ல மாற்றங்களை, புதுமைகளை விரும்பும் மக்கள் 80 சதவிகிதம் இருந்தாலும், நமக்குள்ளே சுயநலமும் வேற்றுமையும் காணப்படும்வரை, அந்த ‘உப்புமா பார்ட்டி’கள் நம்மை ஆளத்தான் செய்வார்கள்.

 • க்ரைனில், ஆஃப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், குறிப்பாக இலங்கையில் நடக்கும் பல துயரங்கள், நாளை நமக்கும் நடக்கலாம்!

நம் போன்ற பெண்களின் அரசியல் கண்ணோட்டமும் மன நிலையும், ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்கும் முக்கிய மாற்றங்களும், செம்மையாக, வலிமையாக, ஒன்றாக, நன்றாக இருந்தால், தரமாக வாழலாம்.

விலைவாசி விஷம் போல ஏறும் இக்காலத்திலும் யோசிக்கா விட்டால் எப்படி கண்மணிஸ்?

சேர்ந்தே சிந்திப்போமா?

3 COMMENTS

 1. ஒரு வார்த்தையில் உப்புமா கதை நமக்குச் சொல்வது நல்ல பாடம். உலக விஷயம், விலைவாசி உயர்வு நாம் யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்திக்காட்டியது, சூப்பர்.
  எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன்,
  லால்குடி.

 2. சிற்றுண்டிக்கு ஓட்டு போட்டு முடிவெடுத்த
  விதம் நன்றாக இருந்தது. விலைவாசி உயர்வு மிகவும் வேதனையை அளிக்கிறது.

 3. அருமையான தலையங்கம் .உப்புமாவோடு இணைத்து எழுதிய விதம்…. சூடான உப்புமாவின் ‘மேலே தகதக’ன்னுநெய்யை ஊற்றி பரிமாறியது போலிருந்தது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

“டர்ர..டர்ர்... டர்ர...” டெலிப்ரின்டரில் செய்திகள் மடிந்து மடிந்து சீராக விழும். அதை வாகாகக் கிழித்து, எடிட்டோரியல் டெஸ்க்கில் உள்ளவர்களுக்குப் பங்கிட்டுத் தருவார்கள். ஆங்கிலத்தில் இருக்கும். அந்தச் செய்திகளைத் தமிழ்ப்படுத்திச் சுடச்சுட முந்தித் தருவது எங்கள்...

ஒரு வார்த்தை!

என்னுடைய உறவினர் ஒருவர் மும்பையிலிருந்து எங்க வீட்டுக்கு வந்திருந்தார். எழுபத்தைந்து வயதைக் கடந்திருந்த அவருக்கு இலேசாகத் தலைச்சுற்றல் வரவே, “ரத்த அழுத்தப் பரிசோதனை செஞ்சுக்கறேன்” என்றார். நானும் அவசரத்துக்கு அருகில் இருந்த எம்.பி.பி.எஸ்....

ஒரு வார்த்தை!

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரான்னு... (லாட்டரிச் சீட்டு இல்லீங்க.... இது வேற மேட்டர். கொஞ்சம் சீரியஸ்!) தினசரி நம்பப் பொண்ணுங்க தில்லா, எப்படியோ நியூஸைப் பிடிச்சுடறாங்கப்பா! ************** கேரளாவில் சமீபத்துல நடந்த கூத்து இது. கல்யாண...

ஒரு வார்த்தை!

இன்னிக்கு கல்யாண மார்க்கெட்டுல இருக்குற எல்லா பெண்களும் சொல்லி வெச்சா மாதிரி கேக்குற விஷயம், “என்னோட ஹப்பி, என்னை ‘caring’ஆ பார்த்துக்கணும்... எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா அப்படியே துடிச்சுப் போயிடணும்... என் மேல...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

1
வால்நட்டின் சிறப்புகள்! வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. உயர் இரத்த...