0,00 INR

No products in the cart.

சரிவிகித உணவு கொள்வோம், நோய்களை வெல்வோம்!

-உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

 

சந்திப்பு: பத்மினி பட்டாபிராமன்

“நமது அனேக உடல் பிரச்னைகளுக்குக் காரணமே மன அழுத்தம் தான்”. அழுத்தமாகத் தன் கருத்தினைப் பதிவு செய்கிறார், சென்னையின் மிகப் பிரபலமான உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன். இவர், பல மருத்துவமனைகளில் உணவியல் ஆலோசகராக இருப்பவர்.

சரிவிகித உணவுக்கான Indian Dietetic Association அமைப்பின் முன்னாள் தலைவர். Nutrition Society of India உட்பட பல உணவியல் அமைப்புக்களில் ஆலோசகர் மற்றும் வாழ்நாள் உறுப்பினர்.

dharini krishnan easy diet என்ற You tube சேனல் மூலமும் டயட் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்.

உணவும் வாழ்வியலும் குறித்த ஏகப்பட்ட சந்தேகங்களுடன், அவருடன் உரையாடினோம்.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

சிறு வயதிலிருந்தே உணவுக் கட்டுப்பாடு அவசியமா டாக்டர்?

ரிவிகித உணவு அந்தந்த வயதுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இப்போதெல்லாம், சரியாக படிக்க வேண்டுமே, தகுதியான நல்ல வேலை கிடைக்கவேண்டுமே என்று அந்தந்த வயதிற்கான டென்ஷன் அதிகரித்து வருகிறது. எந்த வயதானாலும், அவரவர்க்குரிய பிரச்னைகள், வந்து மன அழுத்தம் ஏற்படும் போது அது ஜீரண சக்தியை பாதிக்கிறது.

ஜீரண சக்திக்கும் நம் வாழ்க்கை முறைக்கும் மனசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதால்  பொதுவாக எந்த வயதிலும் மன அழுத்தம் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் ஜீரண சக்தி நார்மலாக இருக்கும்.

80 வயதைக் கடந்தவர்களில் ரிலாக்ஸ்டாக இருந்து நன்றாக சாப்பிடுபவர்களும் உண்டு.

இளம் வயதிலேயே உணவு செரிக்காமல் அவஸ்தைப் படுபவர்களும் உண்டு. இதற்கெல்லாம் அவர்களது பரபரப்பான வாழ்க்கை சூழல்தான் பெரும்பாலும் காரணம்.

டயட் அல்லது சரிவிகித உணவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுமா?

டிப்படையில் ஆண்களுக்கு பெண்களை விட தசை (muscles) அதிகம்.(அதனால்தான் அவர்களால் சண்டைகளில் ஈடுபடமுடிகிறது).

எனவே அவர்களுக்கு நிறைய புரோட்டீனும், அதிக கேலரிகள் கொண்ட உணவும் தேவைப்படுகிறது. பெண்களின் உடலில் கொழுப்பு சத்து சற்று கூட என்பதால் அதிக கொழுப்புப் பொருட்களைகளைத் தவிர்த்து, உணவு கொள்ள வேண்டும்.

இந்தியா, உலக அளவில், கார்டியாக் அரெஸ்ட் எனும் இதய பாதிப்பில் முதலிடத்திலும், சர்க்கரை நோய் பாதிப்பில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. மிக கவனமாக இருக்க வேண்டாமா?

சரிவிகித உணவு என்பது சைவம் சாப்பிடுபவர்களுக்கும், அசைவ உணவு உண்பவர்களுக்கும் எப்படி வேறுபடுகிறது டாக்டர்?

ம் உடலில் செல்களுக்கு புரதச்சத்துதான் அத்தியாவசியத் தேவை. எல்லா உறுப்புக்களுக்கும் புரோட்டீன் தேவை. இந்த சத்து குறைந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் போய் விடும்.

அசைவம் உண்பவர்களுக்கு இறைச்சி உண்ணும் போது,அதில் .எந்த அளவு கொழுப்பு இருக்கிறதோ அதே அளவு புரோட்டீனும் கிடைத்து விடும்.

ஆனால் அசைவம் சமைக்கும் போது அதிக அளவில் எண்ணை சேர்ப்பதால் ஜீரணமாவது கடினமாக இருக்கும். சைவ உணவில், எந்த அளவு புரதம் (புரோட்டீன்) இருக்கிறதோ அதே அளவு மாவுச் சத்தான கார்போஹைடிரேட்டும் இருக்கும் பருப்பு சமைக்கும் போது எண்ணை குறைவதால் ஜீரணம் எளிதாக இருக்கும்.

டயட்டில் இருப்பதால் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை. சப்பாத்திதான் சாப்பிடுகிறேன் என்று சிலர் சொல்வது பற்றி…?

கோதுமையிலும் அரிசியிலும் பொதுவாக ஜி.ஐ. எனப்படும் (GI- Glycemic Index) இருந்தாலும், அது கோதுமையில் குறைவாகவே இருக்கிறது..

இரண்டிலும் கேலரிகள் சம அளவில்தான் இருக்கின்றன.

முழுவதும் பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் வெறும் ஸ்டார்ச் மட்டுமே அனேகமாக இருக்கும். செமி பாலிஷ் அரிசியில் சிறிய அளவில், விட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் கிடைக்கும்.

கைக்குத்தல் அரிசியில் நிறையவே இரும்புச்சத்து, நார்ச்சத்து, விட்டமின் பி, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. கோதுமையை அரைத்து அந்த மாவை அப்படியே சப்பாத்தி செய்து சாப்பிடுவது நல்லது. அதில் நார்ச் சத்து அதிகம் இருக்கும்.

சப்பாத்தி சாப்பிடும் போது மூன்று அல்லது நான்குக்கு மேல் சாப்பிட முடியாது என்பதால் சாதத்தை விட அளவு குறையும் என்பது பொதுவான நம்பிக்கை. அரை கப் சாதம் அல்லது ஒரு சப்பாத்தியில் கேலரிகள் ஒரே அளவில் தான் இருக்கும்.

க்ளைசிமிக் இண்டெக்ஸ் என்பது என்ன டாக்டர்?

நாம் உண்ணும் உணவு எத்தனை சீக்கிரம்  செரிமானம் ஆகி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது என்பதைக் குறிக்கும் குறியீடுதான் GI.

அதிகம் க்ளைசிமிக் இண்டெக்ஸ்  கொண்ட உணவு விரைவில் ஜீரணிக்கப் பட்டு சர்க்கரையின் அளவை ஏற்றி விடும். பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் இந்த ஜி.ஐ அதிகமாக இருப்பதால், அதை அதிகம் உட்கொள்ளுவோருக்கு  சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

Already பால் முழு உணவு என்பார்கள். ஆனால் சிலருக்கு பால் அலர்ஜி இருக்கிறதே

தை லேக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose Intolerance) என்கிறோம். பாலில் இருக்கும் லேக்டோஸ் சிலருக்கு ஜீரணம் ஆகாமல் வயிற்றில்  பிரச்சனை ஆகும்.

சிலர் ,காஃபி, டீ குடித்தால் ஒன்றும் செய்வதில்லை வெறும் பால் தான் அலர்ஜி என்பார்கள். அது தவறு. பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு அதை எப்படி எந்த உணவில் எடுத்தாலும்  பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதாவது நம் இம்யூனிடியை அதிகரிக்க சரியான உணவு எது?

முதல் முக்கிய குறிப்பு,  ஒழுங்காக சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பொதுவாக உடலுக்கு 5 வகை உணவு தேவை. தானியம், பருப்பு, பால், பழங்கள், காய்கறிகள். தானியம் என்பதில் அரிசி, கோதுமை வரகு சாமை போன்றவை இருக்கும்.

பருப்பு வகைகளில் சமையலுக்கு பயன் படுத்துவது தவிர, சென்னா, ராஜ்மா போன்றவற்றை வாரம் 2 தடவை சுண்டல் போல செய்து உண்ண வேண்டும்.

காய்கறிகள், பழங்கள் இவற்றை குறைந்த பட்சம் ஒன்றறை கோப்பை அளவுக்கு தினமும் உட்கொள்ள வேண்டும். கொழுப்பு குறைக்கப்பட்ட டோன்ட் பால், தயிர், மோர் இவை குறைந்த பட்சம் 400 மில்லி லிட்டர் தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.

இந்த முறையில் புரோட்டீன், ஸிங்க் (Zinc), செலேனியம், விட்டமின் C போன்றவை உடலுக்கு கிடைக்கும் இவையெல்லாம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட உதவும்.

ஜீரண சக்தி குறைந்து போகும் போது என்ன செய்ய வேண்டும்?

யுர்வேத மருத்துவம், ஜீரண சக்திக்கு உதவுகிறது இப்போது ஒருங்கிணைந்த சரிவிகித உணவு முறை (Integrated Dietics) பரிந்துரை செய்து வருகிறோம். அதன்படி நவீன மருத்துவம், ஆயுர்வேதம்,பாரம்பரிய உணவு முறை எல்லாம் இணைந்த ஒரு முறை இது. செரிமானக் கோளாறுகளை சரி செய்து, ஜீரண உறுப்புக்களை சரியாக இயங்க வைக்கிறது.

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு சரிவிகித உணவு எப்படி இருக்க வேண்டும்?

து பற்றியும். பெண்களுக்கு பிரசவத்துக்கு அப்புறம் என்ன உணவு தரவேண்டும், மனதுக்கும், உடலுக்கும் பொருந்தும் உணவு எது போன்ற பல கேள்விகளுக்கும் தொடர்ந்து பதிலளிக்கிறார் டாக்டர் தாரிணி அவற்றை அடுத்த இதழில் பார்க்கலாம்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

இல்லத்தரசியின் கனவு!

முயன்றால் எதுவும் முடியும்...     - சேலம் சுபா நல்லதொரு குடும்பம் அமைந்த பெரும்பாலான  பெண்கள் தங்களிடம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த ஆர்வமின்றி குடும்பம் எனும் பாதுகாப்பான கூட்டுக்குள் இருந்து வெளியே வர விரும்ப...

சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!

உரையாடல் : பத்மினி பட்டாபிராமன்   ஸ்வப்னோபூரண் - பூர்த்தியாகும் கனவுகள் மேற்கு வங்காள  எல்லையை ஒட்டிய, கல்வி வசதி அவ்வளவாக இல்லாத, சுந்தர்பன்ஸ் தீவு கிராமங்களில் ஆங்கில மீடியம் பள்ளிகளை அமைத்து, அந்த ஏழைக் குழந்தைகளுக்கு...

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...