0,00 INR

No products in the cart.

டாணாக்காரன்

  -மஞ்சுளா சுவாமிநாதன்

ப்ரல் எட்டாம்  தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி  தளத்தில் வெளியான, விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் பார்த்தேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றியே இத்திரைப்படத்தை பார்க்கத் துவங்கினேன்…

டாணாக்காரன் என்றால் போலீஸ்காரனுக்கு மற்றொரு பெயராம்! சத்ரியன், மூன்று முகம்,  வேட்டையாடு விளையாடு, சிங்கம்,  தெறி, என அதிரடி cop  படங்கள் போல இப்படம் இருக்கும் என்று  நினைத்தால் நீங்க ஏமாற்றம் அடைவீர்கள். ஏனெனில் எந்த போலீஸ் பட சாயலுக்கும் பொருந்தாத கதை இது. போலீஸ் பயிற்சியின்  போது  நடைபெறும் சம்பவங்கள், பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் வாழ்க்கை, பயிற்சி எடுக்கும் சீனியர் போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை, அச்சுறுத்தல் என கதை நகருகிறது.

இயக்குனர்  தமிழின் இயக்கத்தில் திரைப்படம்  சற்றே மெதுவாக நகர்ந்தாலும், கதை மிகவும் ஆழமாக, நெஞ்சை உருக்கும் கதையாக இருப்பதால், படத்தின் ஓட்டத்தைப் பற்றி நாம் கவலைக் கொள்ள வேண்டியதில்லை.

நான் சமீப காலங்களில் பார்த்த முக்கால்வாசி தமிழ் படங்கள் கணிக்கக் கூடிய கதை, கண்ணை அயர்த்தும் எடிட்டிங், கதைக்கு சம்பந்தமே இல்லாத ஹீரோ மாஸ் காட்சிகள், அர்த்தமற்ற காதல் காட்சிகள் மற்றும் தேவையில்லாத பாடல்கள் என்று இருந்த நிலையில்… இப்படம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது  வரவேற்கத்தக்கது.

படத்தில் காதல் காட்சிகள் மிகவும் குறைவு. கதாநாயகனைத்  தாண்டி படத்தில் நடிக்கும் மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. என்னை பெரிதாக ஈர்த்த  கதாபாத்திரங்கள் என்றால் செல்லக்கண்ணாக நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் மதியாக நடித்திருக்கும் போஸ்  வெங்கட். திரையில் சிறிது நேரமே வந்தாலும், அவர்களின் தாக்கம் நிச்சயம் இருந்தது.

அதே போல, கதையில் சில நீளமான காட்சிகள் கதாப்பாத்திரத்தின்  குணத்தை மிகவும் அழகாக எடுத்துக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு படத்தில் சித்தரிக்கப்பட்ட ஒரு கடும் பயிற்சிக் காட்சியில், ஹீரோ அறிவு என்கிற விக்ரம் பிரபுவின் மனோவலிமை மிகவும் அபாரமாக இருந்தது.

இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் என் மனதில் ஆழப்  பதிந்துள்ளது. ஹீரோவின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டன், ஐந்திற்கும்  குறைவான நிமிடங்களே தோன்றினாலும், நம் மனதைத் தொட்டுவிடுகிறார். மொத்தத்தில் ‘டாணாக்காரன்’  தன்னம்பிக்கைத் தரக்கூடிய ஒரு அரிய படம்.

——————–———-

என்ன வாசகீஸ்! மங்கையர் மலரில் திரை விமர்சனம் பார்க்க ஆச்சரியமாக உள்ளதா? இந்த கொரோனா ஊரடங்கு காரணத்தால், பல திரைப்படங்கள் இணையத்தில், ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.  இது பல குடும்பங்களுக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. இனி நாம் அண்ணாத்தே முதல் டாணாக்காரன்  வரை அதிக செலவில்லாமல் இணையத்திலேயே பார்த்து விடலாம்.

நீங்கள் சமீபத்தில் பார்த்து ரசித்த, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களை, எம்மொழியானாலும், உங்கள் பாணியில் அலசி, [email protected] என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் வெளியாகும்.

2 COMMENTS

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...