வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
Published on
வால்நட்டின் சிறப்புகள்!
  • வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
  • உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வால்நட்ஸை, தேனுடன் சேர்த்து கலந்து, 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
  • நமது உடலில் பித்தப்பைகளில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. அதை கரைப்பதில் வால்நட்ஸ் சிறப்பாக செயல்படுகிறது
  • வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் தீங்கான நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.
  • வால்நட் பருப்புகளை அடிக்கடி உண்டு வரும் பெண்களுக்கு, மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
  • இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.
  • இதய தசைகளை நன்குவலுப்படுத்துகிறது வால்நட். இதயத்தில் இரத்த ஓட்டங்கள் சீராக இருக்க உதவுகிறது.
  • வால்நட் பருப்புகளில் உள்ள ஒமேகா 3 எனும் ஃபேட்டி ஆசிட், ஞாபக மறதியைப் போக்கி, நினைவுத் திறனை மேம்படுத்தும்.
  • தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், தினமும் இரண்டு வால்நட் பருப்புகளை உண்டு வந்தால், ஆழ்ந்த உறக்கம் வரும்.

– ஆர். பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்

————————————

கோடையை குளிர்ச்சியாக்கும் நன்னாரி!

கோடை வந்து விட்டாலே உடல்சூடு, வேர்க்குரு, கட்டி என அவதியுறுவோம். அதற்கு  நன்னாரி  சிறந்த  பலனைத்  தரும். இது கொடி வகையைச் சேர்ந்தது. இலை  நீண்டு இருக்கும். இலையின் நடுவில் வெண்மை கலந்த பச்சையும், ஓரங்களில் அடர்ந்த பச்சையும் இருக்கும்.  இரண்டு  வகையான  நன்னாரி  உள்ளது.

சுருள் சுருளாக இருந்தால்  சீமை நன்னாரி, மாகாளிக்கிழங்கு வேர் தான்  நாட்டு நன்னாரி.  இது பானங்கள் தயாரிக்கவும், நோயை  குணப்படுத்தவும்  பயன்படும். இதன் வேரை தண்ணீரில்  ஊற  வைத்து கஷாயமாகவோ, சர்பத்தாகவோ அருந்தலாம்.

நன்னாரிப் பொடியை ஒரு கப் பாலில்   ஒரு ஸ்பூன்  கலந்து  அருந்த  சிறுநீர் மஞ்சளாக போவது நிற்கும். வயிற்றுப்போக்கு, இருமலைக் குணப்படுத்தும். நன்னாரி வேரைச் சுட்டுக்கரியாக்கி பொடித்து, சீரகம், சர்க்கரை  சேர்த்து நெய்யில் குழைத்து தினமும் இரண்டு  வேளை பத்து  நாட்கள் சாப்பிட  சிறுநீர் எரிச்சல், கடுப்பு, சூடு குணமாகும்.

நன்னாரி  பசியைத்  தூண்டும். சூட்டைத் தணிக்கும். உடலுக்கு  குளிர்ச்சி  தரும். இது வாதம், மூட்டுவலி, வேர்க்குரு, வேனல்கட்டி, தலைவலி, தலைசூடு போன்ற உபாதைகளை போக்கும்.

நன்னாரி வேரைக் காய்ச்சி, நீரில் பெருங்காயம், நெய் கலந்து  குடிக்க  வாந்தி  நிற்கும். பொடித்து தேனில் குழைத்துச்சாப்பிட அல்சர்  வராது.

-மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்

————————————

பயனுள்ள அழகு குறிப்புகள்!
  • கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால்  தலைமுடி நன்கு வளரும்.
  • தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
  • பப்பாளிப்  பழத்தை மசித்து  பூசி  வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
  • வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
  • உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் பளபளப்பாக இருக்கும்.
  •  நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க, சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்
  • பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
  •  பாதாம் பருப்பை அரைத்து  தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
  • எலுமிச்சை பழச்சாறு, பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
  • பெண்கள் பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
  • கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்
  • பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.
  •  எலுமிச்சை பழச்சாறுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
  • பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
  • தயிரில் கசகசாவைச் சேர்த்து அரைத்து தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக பூசி வந்தால் முகம் பளப்பளப்பாகும்.
  • அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும.
  • சம அளவு நெல்லிக்காய் சாறு, பாதாம் எண்ணெய் எடுத்து அதில் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து இரவு தலையில் நன்றாக தேய்த்து காலையில் தலைக்கு குளித்து வந்தால் கூந்தல் கருப்பாகும்.
  • குங்குமப்பூவை பாலேட்டில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்து நன்றாக பிசைந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டின் கருமை நிறம் மாறி உதடு சிவப்பாகும்.
  • சோற்று கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் குறையும்.
  • -சுந்தரி காந்தி, சென்னை

————————————

ஆலிவ் எண்ணையின் பயன்கள்! 

லைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளம் சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஜ் செய்து ஊறிய பின் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

ஆலிவ் ஆயில், வைட்டமின் ஏ, சி, ஈ, போலிக் ஆசிட் ,செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை  கொண்டதால் சருமம் மினுக்கும்; கூந்தலும்  மிளிரும்!

ஆலிவ் எண்ணெயுடன் சிறிது பொடி உப்பை கலந்து சொரசொரப்பான கை மற்றும் காலில் பித்த வெடிப்பு உடையவர்கள் தேய்த்துக் கொண்டால் கை கால்கள் மென்மை பெறும்.

-இந்திராணி தங்கவேல், சென்னை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com