0,00 INR

No products in the cart.

ஜோக்ஸ்!

ஓவியங்கள்: பிரபுராம்.

 “மேடம்… உங்க கணவருக்கு சமீபத்தில் அடிச்ச விஷக் காய்ச்சலால் காது சுத்தமா கேட்கலே… நீங்க பேசறது எதுவும் காதில் விழாது.”

“டாக்டர்… நீங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டேன். நீங்க நடமாடும் தெய்வம்!”
-ஆர். யோகமித்ரா, சென்னை

******************************

“பாட்டி உன் இளமையின் ரகசியம் என்ன?”

“தினமும் காலை அரைமணி நேரம், மாலை அரை மணி நேரம் உன் அம்மாவுடன் வாய்ச்சண்டை பயிற்சி எடுத்துக்கிறேன் பேராண்டி!”
– கு. அருணாசலம், தென்காசி

******************************

ஜோக்ஸ்: வி. ரேவதி, தஞ்சை.

ஓவியங்கள்: பிள்ளை.

மனைவி: தூங்கும்போது என் வாய்க்குள் ‘ஈ’ போயிடுச்சுங்க!

கணவன்: தூங்கும் போதாவது உன் வாயை மூடக்கூடாதாடி…?

******************************

ந்த வண்டிக்கு ரோட் டேக்ஸ் இல்ல… பெட்ரோல், டீசல் தேவையில்ல…. நம்பர் பிளேட் தேவை இல்லை டோல் கேட் பிரச்னையில்ல…

ன்ன வண்டி அது ?

மாட்டு வண்டிதான்… ஆனா கிளம்ப வேண்டிய இடத்துக்கு ரெண்டு நாள் முன்னாயே கிளம்பணும் அம்புட்டுதான்…!

******************************

“டிவில ஆங்கரா இருந்த என் பொண்ணு இப்ப சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சிட்டா!”

“எப்படி பங்கஜம்?”

“அவளுக்கு சிரிப்பை விட அழுகை நல்லா வருதுன்னு செலக்ட்   பண்ணிட்டாங்க!”

******************************

த்து சவரன் நகையை வச்சுக்கிட்டு லோன் வேணும் சார்!”

“வாங்கிக்கலாமே…!”

“அஞ்சஞ்சு பவுனா  பிரிச்சு என் பேரிலும், ப்ரண்ட் பேரிலும் வைக்கணும் சார்!”

2 COMMENTS

  1. I am eagerly waiting to view the cartoon picture and the connected witty messages published in the “Kalki” weekly issues every week. My humble ‘VaazhththukkaL’ to “KALKI’.

    – “Mandakolathur Subramanian.”, Chapel Hill, N.Carolina, USA.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...