
– ஆர். மீனலதா, மும்பை
படித்தவரில்லையெனினும்
பண்பிலே உயர்ந்து நின்று
பாமரர்களின் கல்விப் பசி, வயிற்றுப்
பசியாற்றி பனைமரமென உயர்ந்த
பச்சைத் தமிழர்!
சிறைச்சாலையின் தீவிர
சித்ர வதையிலும்
சிரித்த முகத்துடன்
சிந்தித்து தன் அறிவினை வளர்த்த
சிந்தனைச் சிற்பி!
அரசியல் எதிரிகளை
அன்புடன் நடத்தி
அனைத்து மக்களும் நலன்பெற
அரசின் ஆணைகளை மாற்றிய
அறிவுச்சுடர்
நதிகளைத் தடுத்துக் கட்டி
நாட்டினுள் திருப்ப
நல்ல விதமாக செயலாற்றி – இந்திய
நாடு வளம் பெற உதவிய
நடு நிலைமையாளர்!
பொறுப்புடன் ஆட்சி நடத்தி
'பொற்காலம் இதுவன்றோ'வென
பொது ஜனங்கள் மனதார வாழ்த்திய
புகழ் நிறைச் செம்மல்!
கடல் கடந்தோரும்
'கல்விக் கண் திறந்த
கறுப்பு காந்தி'யென
காலமெலாம் போற்றும்
கர்ம வீரர், கடமை
தவறாதவர்-
அவரே காமராஜர்!