0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்!

டைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்…!
– வாசுதேவன், பெங்களூரு

‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள்.
– மெடிக்கல் மிராக்கிள்!

கூலிப்படையை வெச்சு தாறுமாறா வெட்டிப் போட்ட நபர்கூட தானே நடந்துசென்று ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்வார்.
– மர்டர் மிராக்கிள்!

ஸ்கூல்வேன் டிரைவர் கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்தாலும் குழந்தையானது, சிக்காமல் ஒதுங்கிச் சென்று சிரிக்கும்.
– ஸ்கூல் பஸ் மிராக்கிள்!

ஷ்யா ஏவிவரும் அனைத்து ஏவுகணைகளும் நமுத்துப் போய் ‘புஸ் புஸ்’ என்று கீழே விழும்.
– மிஸ்ஸைல் மிராக்கிள்!

ப்ரீவெட்டிங் ஷூட், செல்ஃபி என ரயில் தண்டவாளம், நதிகளில் அபாயகரமாக போஸ் கொடுக்கும் இளசுகள் உயிர் தப்பி ட்ரென்டிங் ஆவார்கள்.
– கேமிரா மிராக்கிள்!

இப்படி எத்தனையோ…

******************************

ங்களுக்குப் பிடித்த தேர்த்திருவிழா எது?
– எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

த்தை வீட்டுக்கு வெகேஷன் போன பாசமலர்களின் கதை ஒண்ணு கைவசம் இருக்கு! சொல்லட்டுமா? அது ஒரு மோசமான வெயில் காலங்கிறதால, தங்கையும் அவருடைய அன்பான அண்ணன்களும் 108 பானை குளிர்ந்த நீரில் நீராடுகிறார்கள்.

உடம்புக்கு ஒத்துக்குமா? சளி, காய்ச்சல்னு அவஸ்தைப் படறாங்க! அதனால ‘போக்’னு ஓர் ஆயுர்வேத சிகிச்சை தரப்படுது.

அப்ப தங்கைக்காரி, “அண்ணே… சின்ன அண்ணே… நாம்ப எல்லாம் நம்ப அத்தை வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்” ஐடியா கொடுக்குறா!

தங்கமான தங்கச்சி ஆசைக்கு மறு பேச்சு ஏது?

மூணு பேருக்கும் தனித்தனியா தேர் தயாராகுது. 12 நாள் ப்ரோகிராம் போடறாங்க! மூணு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ‘குண்டிச்சா’ங்கிற இடத்துக்குப் போய் ‘ஹாய்யா‘ இருந்துட்டுத் திரும்பி வர்றாங்க! இவங்க ‘டூர்’ போனதுல, அண்ணிக்காரிக்கு செம கோபம்! வழக்கமா வர்ற பொசசிவ்னெஸ்!

“என்ன விட்டுட்டு நீ மட்டும் எப்படி உங்க வீட்டு மனுஷாளோட ஜாலியா இருந்துட்டு வரலாம்?”னு கோவிச்சுக்கிட்டு வீட்டு வாசல் கதவை அடைச்சுடறா!

“அம்மாடி! மகாலட்சுமி, ஏதோ சின்னப் பொண்ணு கேட்டுதேன்னு போனோம். ஸாரிம்மா… உன்னைக் கூட்டிக்கிட்டுப் போகாதது தப்புதான்! என் செல்லம்… கதவைத் திறடிம்மா பட்டு!”னு ஏதேதோ தாஜா பண்றார்.

பொண்டாட்டி கதவைத் திறந்ததும், அவளை அணைச்சுக்கிட்டு ரசகுல்லா இனிப்பு கொடுத்ததும் மனசு இறங்குவாளாம் மவராசி!

ஒடிஸா மாநிலக் கடற்கரை நகரமான பூரி ஜகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்குச் சொல்லப்படும் புராணக்கதை இது!

உலகின் பிரம்மாண்டமான இந்தத் தேர் திருவிழாவில், ஸ்ரீபூரி ஜெகன்னாதர், ஸ்ரீபலபத்ரர், ஹசுபத்திரை போன்றோர் முறையே 16, 14, 13 அடி உயரத்தில் ஆன தேர்களில் உலாவரும் அழகே தனிதான்!

பக்தியும், கலையும், கேளிக்கைக் கொண்டாட்டமாக நடக்கும். இந்தத் தேரோட்டம், பார்த்தாலே பரவசம் தரக்கூடியது! ஒருமுறை போய் வாங்களேன்!

பின்குறிப்பு:- இந்தத் தேரோட்டத்தில் பயன்படுத்தப்படும் மூன்று தேர்களும் வருஷா வருஷம் புதிதாகக் கட்டமைக்கப்படும். தேரோட்டத்தின்போது, தேர் வீதிகளை ஒடிஸா மகாராஜா ‘கஜபதி திவ்ய சிங்க தேவா’ என்பவர் தங்கத் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வாராம்!

******************************

ந்தக் காலத்தில் சிபாரிசு இல்லாமல் எதுவும் நடப்பதில்லையே அனு மேம்?
– வீ. கணேஷ், ஷெனாய் நகர்

அதிக நேரம் இருக்காதது – அதிர்ஷ்டம்.

நீண்ட தூரம் வராதது – சிபாரிசு.

எப்போதும் கிடைக்காதது – உதவி.

எப்போதும் ஜெயிப்பது திறமையும் தன்னம்பிக்கையும்!
முயற்சியை கைவிடாதிங்க பாஸ்! ஆல் தி பெஸ்ட்!

******************************

சீஸன் தொடங்கிவிட்டதே… குற்றாலத்துக்கு வருவீர்களா அனுஷா?
– பிரகதா நவநீதன், மதுரை

வ்வளவு அன்பொழுக அழைத்தால், வராமல் இருப்பேனா பிரகதா? குளு குளு அனுபவத்துக்கு நான் ரெடி! ஆனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே குளிக்க அனுமதி… எல்லா இடத்திலும் ஜனத் திரள். சில அருவிகளில் டோக்கன் சிஸ்டம். பல அருவிகளில் நீண்ட நெடிய க்யூ!

கொரோனா இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் கட்டாயம்! மட்டமான எண்ணெய் மசாஜ். அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ அண்ணாச்சிகள்… சுகாதாரமற்ற பலகாரங்கள்னு சில சங்கடங்களைச் சந்திக்கணுமே! எல்லாவற்றையும் மீறி அந்த சாரல் மழை, மூலிகைக் காற்று, ரம்மியமான சூழல், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி, குற்றாலம்னாலே கும்மாளம்தான்! துவட்டிக்கத் துண்டும் விக்ஸ் டப்பாவும் வாங்கிட்டா போச்சு!

2 COMMENTS

  1. இந்த வார அன்பு வட்டம் அமர்க்களம் அனு….குற்றால சீஸன் தொடங்கியதில் மகிழ்ச்சி. நம் மங்கையர் மலரில் ஏதாவது போட்டி வைத்து வெற்றி பெறுபவர்களை குற்றாலத்திற்கு தங்கள் செலவில் அழைத்துச்சென்றால் அனுவுடன் நாங்களும் வருவோம்லே…..குற்றாலத்தில் கும்மாளம் அடிக்க நாங்க ரெடி…..அனு மேடம் நீங்க ரெடியா?

  2. குற்றால அருவியில் குளித்து வந்தது போல் இருக்கிறது அனு மேடத்தின் பதிலை படிக்கும் போது அருமை

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

‘செஸ்’ விளையாடத் தெரியுமா மேடம்? - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி செஸ்ஸா? யாராவது அறிவு ஜீவிங்க விளையாடட்டும்! நாம்ப ஜஸ்ட் ரசிக்கலாம்! பொறுமையைச் சோதிக்கும் இந்த விளையாட்டில் எந்த ஆர்வமுமில்லை! ஆனா... ஓரளவு புரியும்! அப்புறம்,...

அன்புவட்டம்!

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி... - எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி பெரிய பெருமைதான் கெஜலட்சுமி! உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நம்ப சென்னை செஸ் ஒலிம்பியாட். செஸ் ஒலிம்பியாட்டை நடத்தணுங்கிற...

அன்புவட்டம்!

தாலியைக் கழற்றி வைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் கணவருக்கு விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை இப்போதெல்லாம் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே, பல நாகரிகப் பெண்கள் போடும் முதல் கண்டிஷனே...

அன்புவட்டம்!

 இளையராஜாவின் எம்.பி. பதவி சர்ச்சைக்குள்ளானதே! - கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி நான் பத்தாவது படிக்கும்போது, வயல் வரப்புகளில் உட்கார்ந்து தேர்வுகளுக்குத் தயாராவது வழக்கம். கால்களின் அடியே ஜில்லென்ற ஏற்றம் பாய்த்த நீர் பாய்ந்துகொண்டிருக்கும். அப்போது நெல்,...

அன்புவட்டம்!

“பயணிகளுக்கு எச்சில் தொட்டு பஸ் டிக்கெட்டுகளைக் கொடுக்கக்கூடாது” என்று பஸ் கண்டக்டர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளதே! - வாணி வெங்கடேஷ், சென்னை எச்சில் மட்டுமா? எங்க ஊர் கண்டக்டர்களை வந்துப் பாருங்க வாணி! நெற்றி, கழுத்துல...