0,00 INR

No products in the cart.

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை!
-ஜி.எஸ்.எஸ்.

று மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.  புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு திருப்புமுனை அரங்கேறியது.

நியூயார்க்கில் உள்ள மெமோரியல் ஸ்லோவா கெட்டரிங் புற்றுநோய் மையத்தில் நடத்தப்பட்டிருக்கிறது இந்த சாதனை.   டாக்டர் ​லூயி அல்பெர்டோ என்ற டாக்டரின் தலைமையில்  அமைந்த மருத்துவக் குழு இதைச்  செ​ய்திருக்கிறது. டாஸ்டர்லிமாப் (dostarlimab) என்ற மருந்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

நோயாளிகளுக்கு இந்த மருந்தை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என்று ஆறு டோ​ஸ் அளித்த பிறகு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை நிகழ்த்தப்படும் என்று டாக்டர்கள் முடிவு எடுத்திருக்க, அவற்றிற்கு அவசியமே இல்லாமல் போனது.

அந்தப் பன்னிரண்டு பேரின் உடலிலும் புற்றுநோய் செல்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டிருந்தன. அவர்கள் பெருங்குடலின் கடைசிப் பகுதியான மலக்குடலில் இருந்த புற்றுநோய் செல்கள் முழுவதுமாக மறைந்து விட்டிருந்தன.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் என்ற மதிப்புக்குரிய ஒரு மருத்துவ இதழில் வெளியாகியிருக்கிறது.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அத்தனை நோயாளிகளும் முழுப் பலன் அடைந்தது புற்றுநோய் வரலாறில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

நம் உடலின் ஜீரண மண்டலத்தின் இறுதிப்பகுதி என்று பெருங்குடலை குறிப்பிடலாம். இங்கு புற்றுநோய்க் கட்டி உருவானால் மலத்தில் ரத்தப்போக்கு, எடை குறைவு, எப்போதும் சோர்வு என்பவை அறிகுறிகளாக வெளிப்படும். முதுமை, இறைச்சி, மது, புகை, உடல் பருமன், மரபணு போன்ற பலவும் இந்தப் புற்றுநோய் உண்டாகக் காரணமாக அமையக்கூடும்.

உலக அளவில் பலவித புற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே பெருங்குடல் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள்.   பலருக்கும் இந்த வகைப் புற்றுநோயால் இறப்பு நேரிட்டிருக்கிறது.

டாக்டர் ஆனந்த ராஜா

இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி சென்னை கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில்  புற்றுநோய் அறுவையியலில் சிறப்பு பெற்றுள்ள பேராசிரியர் டாக்டர் ஆனந்த ராஜாவிடம் பேசினோம். இந்தப் புதிய மருந்து குறித்தும், அதன் செயல்பாடு பற்றியும், இது புற்றுநோய் சிகிச்சையில் ஏற்படுத்தப்படுத்தக் கூடிய  தாக்கம் குறித்தும் கேட்டோம்.  அவர் விளக்கமாகவே விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

முதலில், “இந்தப் புதிய மருந்து எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம். நம் உடலிலுள்ள டி செல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. தொற்றுக்கெதிராகச் செயல்படுகின்றன. இவை புற்றுநோய் செல்களோடு போரிடக் கூடியவை.

புற்றுநோய் செல்களில் உள்ள புரதமும் (இதை PD L1 என்கிறார்கள்), டி செல்களில் உள்ள புரதமும் (இதை PD 1 என்கிாறர்கள்) வேறானவை.

சிலரது மரபணுக்களில் ஒருவித குறைபாடு இருக்கும்.  மிஸ் மேட்ச் ரிப்பேர் (MMR) டெஃபிஷியன்ட் என்ற (அதாவது சரியாக ஜோடி சேராத) மரபணுக்கள் இருக்கும். அவற்றை எம்எம்ஆர் மரபணுக்கள் என்பார்கள். இந்தக் குறைபாடு இருப்பவர்களுக்கு மேலே உள்ள இருவகைப் புரதங்களும் எளிதில் ஒன்றோடொன்று சேர்ந்துவிடும். எனவே டி செல்கள் செயலிழந்து விடுகின்றன.

டி செல்களின் புரதமும் புற்றுநோய்ப் புரதமும் இணைவதை இந்த புதிய மருந்து  தடுக்கிறது.  புற்று நொய் செல்களை இனம் காண வைக்கிறது.  இதனால் டி செல்கள் அங்கு அனுப்பப்படுகின்றன.  புற்றுநோய் செல்கள் அழிகின்றன.

ஆக புதிய மருந்து புற்றுநோய் செல்களை நேரடியாக அழிப்பதில்லை.  ஆனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சரியான விதத்தில் செயல்பட வைக்கிறது.

புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்கப் பிரிவில் கார்பன் இரும்பு சிகிச்சை, ரோபோடிக் அறுவைசிகிச்சை போன்றவை பெரும் திருப்புமுனைகள். அந்த வரிசையில் புதிய மருந்தை சேர்க்கலாம்தா​ன்.

மிகப் பாராட்டத்தக்க தி​ருப்புமுனை இது.  ஆனால் வேறு சில பின்னணி களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

வெறும் பன்னிரண்டு பேரைத்தான் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி க​ண்டி ருக்கிறார்கள். பரவலாக பலருக்கும் நடைபெறும்போதுதான் உண்மை நிலவரம் முழுவதுமாகத் தெரியும்.

தவிர எல்லா வகைப் புற்றுநோய்க்கும் இந்த மருந்து பலனளிக்காது.  எம்எம்ஆர் மரபணுக்களைக் கொண்டுள்ள நோயாளிகளுக்குதான் இது பலனளிக்கும். (பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் பத்து சதவிகிதம் பேர் உடலில்தான் எம்எம்ஆர் மரபணுக் குறைபாடு இருக்கிறது).

மருந்தைக் கொடுத்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் அதன் பலன் குறித்து முடிவெடுப்பது சரியாக இருக்கும். அந்த விதத்தில் இந்த 12 பேரில் முதலில் மருந்து செலுத்தப்பட்டவரின் உடல் 24 மாதங்களுக்குப் பிறகும், கடைசியாக மருந்து செலுத்தப்பட்டவரின் உடல்  ஆறு மாதங்களுக்குப் பிறகும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் ​மேலும் அதிக காலத்துக்குப் பிறகு சோதனை செய்யும்போதுதான் புற்றுநோய் செல்கள் முழுவதுமாக அழிந்து விட்டதை உறுதி செய்து கொள்ள முடியும்.

ஒன்பது ​டோஸ்களுக்கான இந்த மருந்தின் விலை சுமார் இரண்டு கோடி ஆகும். இது எவ்வளவு இந்தியர்களுக்கு  சாத்தியம் என்பதையும் பார்க்க வேண்டும்.

இருப்பினும், பொதுவாக புதிய மருந்துகளை நான்காம் கட்ட புற்றுநோயில் இருப்பவர்களுக்குதான் முதலில் அளிப்பார்கள். (நான்காம் கட்டப் புற்று நோய் என்றால் குணமாவது கிட்டத்தட்ட இயலாதது என்று பொருள்).  மேற்படி மருந்தை இரண்டாவது மூன்றாவது கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தி வெ​ற்றி காண வைத்திருப்பதே ஒரு புரட்சிதான்’’.

ஜி.எஸ்.எஸ்.
பொருளாதாரம், வங்கியியல், வணிக நிர்வாகம், பணியாளர் மேலாண்மை ஆகியவற்றில் முதுநிலைக் கல்வி பயின்றவர் ஜி.எஸ்.எஸ். என்று பரவலாக அறியப்படும் ஜி.எஸ். சுப்ரமணியன். இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளையும், அருண் சரண்யா என்ற பெயரில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியவர். வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் மனநலம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பல வினாடிவினா நிகழ்ச்சிகளையும்  வழங்கியிருக்கிறார். பல நிறுவன ஊழியர்களுக்கு மனிதவளப் பயிற்சிகளும் ஆங்கில மொழிப் பயிற்சியும் நடத்தி வருகிறார்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

அரசியலும், பெண்களும்!

0
- ரங்கஸ்ரீ களஞ்சியம்! மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில் ஜனவரி – 1995,...

பகுத்தறிந்து புரிந்து கொள்வோம்!

0
தொகுப்பு: இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் ஓவியம்:  சேகர் அன்று: துரோணரைத் தாக்கிய ஓணான்!  பாண்டவர்களுக்கும்  துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணாச்சாரியார் இருந்தார். பாண்டவர்களோ அறிவில் சிறந்து விளங்க , துரியோதனாதியர்களோ மூடர்களாக விளங்கினார்கள். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து...