கவிதைத் தூறல்!

கவிதைத் தூறல்!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 
-எஸ்.பவானி, திருச்சி
அபத்தம்

காலில்
கட்டோடு வந்தவரிடம்
காலில் அடியா என
அபத்தமாய் கேட்டவருக்கு
பதில் சொல்கிறார்
தலையை மட்டும்
ஆட்டி.

*******************************

அவசரம்

காலிங் பெல்லை
அழுத்திவிட்டு
காத்திருக்கிறான்
கதவில்
பூட்டு தொங்குவதை
கவனிக்காத ஒரு
அவசரக்காரன்.

*******************************

மணி ஓசை

கோவில் மணி
பக்தர்களுக்கு அருள்கிறது
பள்ளியின் மணி
படிப்பதற்கு அழைக்கிறது
தலைவர்களுக்கோ
ஆங்காங்கே ஒலிக்கிறது.
தொண்டர்களின்
ஜால்ரா மணி.

*******************************

அநாவசியம்

கணவர் நாத்திகம்
மனைவி ஆன்மீகம்
இது
எப்படி சாத்தியம்
மற்றவர் ஆராய்வது
அநாவசியம்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com