0,00 INR

No products in the cart.

கவிதைத் தூறல்!

-எஸ்.பவானி, திருச்சி

 

அபத்தம்

காலில்
கட்டோடு வந்தவரிடம்
காலில் அடியா என
அபத்தமாய் கேட்டவருக்கு
பதில் சொல்கிறார்
தலையை மட்டும்
ஆட்டி.

*******************************

அவசரம்

காலிங் பெல்லை
அழுத்திவிட்டு
காத்திருக்கிறான்
கதவில்
பூட்டு தொங்குவதை
கவனிக்காத ஒரு
அவசரக்காரன்.

*******************************

மணி ஓசை

கோவில் மணி
பக்தர்களுக்கு அருள்கிறது
பள்ளியின் மணி
படிப்பதற்கு அழைக்கிறது
தலைவர்களுக்கோ
ஆங்காங்கே ஒலிக்கிறது.
தொண்டர்களின்
ஜால்ரா மணி.

*******************************

அநாவசியம்

ணவர் நாத்திகம்
மனைவி ஆன்மீகம்
இது
எப்படி சாத்தியம்
மற்றவர் ஆராய்வது
அநாவசியம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

தாயே அனுமதி கொடு!

1
கவிதை! -ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு இதுவரை உன்னை முந்திப்போக நினைத்ததில்லை! இப்போதெல்லாம் மூன்றுகால் போட்டியிலும் நீயேதான் முதலிடம் பிடிக்கிறாய்! எண்பது வயதிலும் எனக்கு எதுவும் தெரியாதென்றே நம்புகிறாய் நீ இல்லா விட்டால் எனக்கு வாழத் தெரியாது என்றும் புலம்புகிறாய். உண்மைதான்... நான் கட்டியிருக்கும் கந்தல் வேட்டியைக் கூட நீதான் கசக்கி பிழிகிறாய் நான் குடிக்கும் கஞ்சிக்கு கூட உப்பு போதுமா போதாதா என்று...

கவிதை!

0
-ச்ஜேஸூ, ஜெர்மனி செயற்கை உரம்! முடிச்சுக் கயிற்றின் முத்த உறவு விடுபட உற்சாகத் துள்ளலுடன் தாய்மடி மோதி பாலுண்ணுகிறது கன்றுக்குட்டி! இடையிடையே தாயின் நாவருடல் இதமான சுகம் தர மீண்டும் மடி கிறக்கம் தேடியோடுகிறது கன்று! சற்று நேரத்தில்- இளைத்த வயிறு ஊதிய பலூனாய் பெருக்கிறது யூரியா தின்று கொழுத்த பாலக்கீரை போலவே!

கர்ம வீரர் காமராஜர் பிறந்த தினம் – ஜூலை 15

0
கவிதை! (கறுப்பு காந்தி) - ஆர். மீனலதா, மும்பை படித்தவரில்லையெனினும் பண்பிலே உயர்ந்து நின்று பாமரர்களின் கல்விப் பசி, வயிற்றுப் பசியாற்றி பனைமரமென உயர்ந்த பச்சைத் தமிழர்! சிறைச்சாலையின் தீவிர சித்ர வதையிலும் சிரித்த முகத்துடன் சிந்தித்து தன் அறிவினை வளர்த்த சிந்தனைச் சிற்பி! அரசியல் எதிரிகளை அன்புடன் நடத்தி அனைத்து மக்களும் நலன்பெற அரசின்...

புகைப்படக் கவிதை!

- மங்கையர் மலர் வாசகீஸ் FB  பகிர்வு! பாடம் ..!  பயமறியா  பருவத்திலேயே பாசம், நேசமென போதித்தது இயற்கையா? இறைவனாயென இன்றளவும் யோசிக்கிறேன்...!! -பானு பெரியதம்பி, சேலம் பழைய தத்துவம் புதிய படத்திற்கு... நால்வரோடு சேர்ந்து ஐவரான உண்மை நண்பர்கள் ரசிக்கும் இயற்கை காட்சி -உஷாமுத்துராமன், திருநகர்   என்னப்பா  பார்க்கறீங்க நல்லா...

கவிதைத் தூறல்!

- பி.சி.ரகு, விழுப்புரம்   லஞ்சம் பல கோடி கொள்ளையடித்த அரசியல்வாதி கோயில் உண்டியலில் காணிக்கையாய் போட்டான் ஆயிரம் ரூபாய்! --------------------------------------------------- மன்னிப்பு மன்னிப்பது கடவுள் செயல் மன்னிப்பு கேட்பது மனித செயல் மனிதனாய் இருந்து கடவுளாய் வாழுங்கள்... ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறார் கடவுள்! -------------------------------------------- மவுனம் அவளது கொலுசு கூட ஏதோ ஒன்று பேசிவிட்டுத்தான் போகிறது... அவள் மட்டும்தான் இன்னும் மவுனமாகவே இருக்கிறாள்! -------------------------------------------- ரகசியம் காற்று அப்படி என்னதான் சொல்லியது? தலையாட்டி சம்மதம் தெரிவிக்கிறதே மரம்! -------------------------------------------- வரதட்சனண ஆசையாய் கேட்ட பொம்மையை ஆசையாய் கேட்ட...