0,00 INR

No products in the cart.

ஒருவார்த்தை!

சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே!

து ஒரு ரொம்பவே நடுத்தரக் குடும்பம். கணவன் – மனைவி இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இன்னிக்கு ஒரு கெளரவமான நிலைமைக்கு வந்திருக்காங்க. அவங்களுக்கு ஒரே பெண் சிவானி. அவள்தான் அந்தக் குடும்பத்தின் முதல் பட்டதாரிப் பெண்ணும்கூட! உள்ளூர் அரசுக் கல்லூரியில, ஏதோ ஒரு டிகிரிய முடிச்சுட்டு இலக்கு இல்லாம பொழுதுபோக்குற பொண்ணு. மகாகவி பாரதி, எத்தனையோ சொல்லியிருக்க, “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே…”ன்னு சொன்னது மட்டும் சிவானிக்கு பிடிச்சுடுச்சு!

மணிக்கணக்கா மொட்டைமாடில ஃபோன் பேசறதும், அசந்தர்ப்பமான வேளைகள்ல, அபத்தமான காரணங்களுடன் ஊர் சுத்தறதுமா இருந்தா டவுட் வராதா? பொண்ணு எங்கியோ சீரியஸா லாக் ஆயிட்டான்னு பெத்தவங்களுக்கு வயித்திலே ஒரு வேதனைக் குறுகுறுப்பு. நைஸா எதுவும் தெரியாத மாதிரி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுருக்காங்க. வழக்கம்போல, “இப்ப வேணாம், “நான் மேலே படிக்கப் போறேன். “காமெடி பண்ணாதீங்க… எதுக்கு ஃபோர்ஸ் பண்றீங்க?”ன்னு சிவானி திமிறத் திமிற பெத்தவங்களுக்கு இன்னும் பயம்!

என்ன ஆச்சோ? எப்படி கன்வின்ஸ் செஞ்சாங்களோ? “காதல் கீதல் கதையெல்லாம் நம்ப குடும்பத்துக்கு ஆகாது! மீறி எதுன்னா செஞ்சா, எங்களை உயிரோட பார்க்க முடியாது!”ன்னு இமோஷனல் பிளாக்மெயில் நடந்ததோ என்னவோ!

ஏதோ ஒரு மாப்பிள்ளையை முடிவு செஞ்சு நல்லநாள் பார்த்து, பெண் பார்க்க வரச் சொல்லியிருக்காங்க!

ந்த நாளும் வந்தது. அம்மாக்காரி, மகளைக் கொஞ்சி, கொஞ்சி, அதட்டி எப்படியோ சரி கட்டிட்டா! சிவானி அப்பாகிட்ட வந்து, “சரி, எனக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் குடுங்க. நான் பியூட்டி பார்லர் போணும்”னு கேட்டிருக்கா. அப்பாவும் சந்தோஷமா ஆயிரம் ரூபாயாவே குடுத்து அனுப்பிருக்காரு.

சாயங்காலம் அஞ்சு மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வருவதாக ஏற்பாடு. இரண்டு மணிக்கு பியூட்டி பார்லர் போன சிவானி, நாலு மணி ஆனாலும் வரலை. பரிதவித்துப் போன தாய், ஃபோன் செய்தால், செல்ஃபோன் ஸ்விச் ஆஃப்!

நாலரை மணிக்கு ஸ்கூட்டியில் சாவகாசமாக வந்து இறங்குறா சிவானி.

“அம்மாடி! வயித்துல பாலை வார்த்தியே… ஏண்டி இவ்ளோ நேரம்? போய் டிரஸ் பண்ணிக்க!”னு கோபத்தை மறைச்சு, குரலில் பாசம் காட்டுகிறாள் அம்மா.

அப்பாவுக்கும் ஆர்வம்! அழகு நிலையம் போய் எப்படி மேக்கப் செய்திருக்காளோன்னு பார்க்க..

வீட்டுக்குள் வந்து ஹெல்மெட்டைக் கழற்றுகிறாள் பெண்! ஷாக்கோ ஷாக்! மொட்டைத் தலை! ‘மழமழ’ன்னு க்ளீன் ஷேவ்வில் பெண்ணைப் பார்த்ததில் பெற்றவர்களுக்கு அதிர்ச்சியில் மயக்கமே வந்திருக்கும்.

“என்னடி இது கோலம்? பாவி மகளே…?”

“எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதை நிறுத்துங்க. எனக்கு இஷ்டமில்லைன்னு நானும் எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். நீங்க கேட்கறதா இல்லே. ஓ.கே. உங்க இஷ்டப்படியே மாப்பிள்ளை வரட்டும். என்னை இந்தக் கோலத்துல பார்த்தப் பிறகும், கேள்விக் கேட்காம, பிடிச்சுருக்குன்னு சொன்னா நான் ரெடி!” என்கிறாள் கூலாக!

பெத்தவங்க இதுக்கு மேல் என்ன செய்ய முடியும்?

“உன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்”னு விட்டுட்டாங்க. ஒரு ஃபோனை போட்டு, “இப்ப சவுகரியமில்லே… ஸாரி”ன்னு மாப்பிள்ளை வீட்டாருக்குத் தகவல் சொல்லிட்டாங்க.

‘சிவாஜி” படத்துல ரஜினி மொட்டைத் தலையில தட்டி உருட்டியபடி “சிவாஜி, தி பாஸ்!”னு சொல்வாரே, அதைவிட கெத்தா, “சிவானி, தி மாஸ்!”னு ஸ்டைல் காட்றாளாம் வீடியோல!

சிவானி வெரி ஹேப்பி…!

  • நிச்சயதார்த்தத்தோட நிறுத்தறது…
  • கல்யாண மண்டபத்துல நிறுத்தறது…
  • ரிசப்ஷன் முடிஞ்சதும் ஓடிப் போறது…
  • கல்யாணமானதும் காணாமப் போறது…
  • குழந்தை பிறந்ததும் தூக்குல தொங்கறது
  • காதலனோட சேர்ந்து விஷம் சாப்பிடறது.
  • காதலனோட சேர்ந்து கணவனைக் கொல்வது
  • இல்ல, மூணே மாசத்துல விவாகரத்து கேட்கறது.
  • பொய் கேஸ் போடறது.

இப்படி எந்த அதளபாதாள கொடூர ரூட்டுக்களைப் பிடிக்காம, வீட்டுக்கும் நாட்டுக்கும் பெரும் உதவி செஞ்ச சிவானிப் பொண்ணே… வெரிகுட்!

இந்த அறிவை, சமயோசிதத்தை, நல்லவிதமாவும் பயன்படுத்தி முன்னுக்கு வந்தப்புறம், காதல் கல்யாணம் பண்ணிக்கம்மா…! பட், ஒண்ணு மட்டும் மனசுல ஆழமா பதிச்சுக்கம்மா…

சரி இல்லாத ஆளை நம்பி போனீன்னா, அவன் போட்டுடுவான் உனக்கு ஃபைனல் மொட்டை! நீ பியூட்டி பார்லர் போகாமலே… ஓ.கே?

********************************************
அன்பு வாசகர்களே…

அமரர் கல்கி அவர்களின் அழியாப் புகழ் காவியம் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலைப் படித்து ரசித்து சுகித்தவரா நீங்கள்?

‘பொன்னியின் செல்வன்’ வாசிப்பின் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், உங்களைக் கவர்ந்த கதாபாத்திரங்கள்,
நாவல் நிகழ்விடங்களை பார்த்த சமயம் உங்களை நெகிழ வைத்த சம்பவங்கள், இந்த கதாபாத்திரங்களின் நினைவோட்டமாக உங்கள் குடும்ப அங்கத்தினர்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்தது முதல் சிலிர்ப்பூட்டும் செய்திகள் வரை நமது ‘ கல்கி ஆன்லைன்.காம்’ இணையத்தில் பொன்னியின் செல்வன் வாசகர் பங்களிப்பு பகுதியில் இடம்பெற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்!

பிரசுரிக்க நாங்கள் காத்திருக்கிறோம்…
பங்கேற்று கொண்டாட நீங்கள் தயார்தானே!

அன்புடன்,

லக்ஷ்மி நடராஜன்
ஆசிரியர், கல்கி குழுமம்

********************************************

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

ஒரு வார்த்தை!

ரொம்ப நாளாச்சே கதை சொல்லி! லெட் மி ஸே எ குட்டி ஸ்டோரி. ஜப்பான் நாட்டில் நடந்த கதை இது! ஓர் இளவரசனுக்கு முடி சூட்டும் விழா நடக்கப் போகிறது. பட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாடி,...

ஒரு வார்த்தை!

ஸ்ரீமதி, சரளா, ரம்யா, சிவகாமி, யோகலட்சுமி என்ன அழகான பெயர்கள்! இளவயசு பெண்கள்? என்ன ஆச்சு, இந்தச் சிறுமிகளுக்கு... தமிழக மக்கள் விக்கித்தும் துக்கித்தும் போயிருக்கின்றனர்! இளமை கொலுவிருக்கும் இளம் குருத்துக்கள் தற்கொலை செய்து...

ஒரு வார்த்தை!

அந்த இரண்டு மாத பெண் சிசுவுக்கு ‘குஷி’ன்னு பெயர் வைக்கலாம் கண்மணீஸ்... பெயரிலாவது ஆனந்தம் இருக்கட்டுமே! தூக்க மருந்து கலந்த பாலைக் குடிச்சுட்டு, சுளீர் வெயில் முகத்தில் அறைஞ்சாலும், வாய் பிளந்து, ஆடாமல்...

ஒருவார்த்தை!

உஷா வீட்டுல விசேஷம்! கல்யாண மண்டபத்துக்குள்ள என்ட்ரி கொடுக்கறதுக்கு முன்னால உஷா பற்றி ஓர் அறிமுகம். அவள் எனக்கு தூரத்து உறவினள். வீட்டுல வசதியில்லாததால, அவளே தன்னுடன் வேலை பார்த்த வேற்று ஜாதிக்காரரைத்...

ஒரு வார்த்தை!

முன்குறிப்பு:- நான் சர்வநிச்சயமாக, ‘ஊபர், ‘ஓலா’, ‘ஸ்விக்கி’, ‘ஸோமேடோ’ போன்ற எந்தவிதமான சேவை நிறுவனங்களின் பங்குதாரரோ, ப்ரமோட்டரோ இல்லை; இது சமூக, தார்மிக, மனிதநேய, தரும, etc, etc, விழிப்புணர்வு சிந்தனைக் குவியலில்...