0,00 INR

No products in the cart.

சவாலே சமாளி!

கேக் படுத்திய பாடு!

தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்.

ரு அலுவலகத்தில் நிர்வாகம், கணினி, நிதி, மார்கெட்டிங், விற்பனை என்று எந்தப் பொறுப்பில் இருந்தாலும்  எந்தப் பதவியில் இருந்தாலும் பணிகளை திறமையாக செய்வதில் இன்று பெண்கள் தூள் கிளப்பு கிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இன்றைய பெண்களின் பங்கு மகத்தானது. தொழில் முனைவோராகவும் பலர் வெற்றிகரமாக உலா வருகிறார்கள்.

இருந்தாலும் பணிகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். சொந்தப் பிரச்னைகள், அலுவலகப் பிரச்னைகள் என்று நிறையவே. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

தொழில் முனைவர் ,வங்கிகள், அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளில் பணிபுரிவோர் இவர்களுக்கெல்லாம், அவர்களைத் தேடிவரும் வாடிக்கையாளர் அல்லது  திருவாளர் பொதுஜனம் வாயிலாக ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் வந்திருக்கும். அவர்களை மீட்க நேரிடும். அல்லது அவர்களாலும் சிக்கல் வந்து அவற்றைத் தீர்க்க வேண்டிய தருணங்களும் ஏற்படும். அவை எரிச்சலூட்டும், நகைக்க வைக்கும் அல்லது பரிதாபப் பட வைக்கும்.

சில மற்றவர்களுக்கு பாடமாகவும் அமையும்.

வெவ்வேறு துறைசார் பெண் ஆளுமைகள்  அத்தகைய சம்பவங்களை மங்கையர் மலர் வாசகிகளுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது…

சவாலே சமாளி!

ன்லைனில் பேக்கரி நடத்தும் இளம் பெண் மகேஸ்வரி சித்ரவேல் அவர்களை சந்திப்போம். மகேஸ்வரி சென்னை மாம்பாக்கத்தில் கேக் அண்ட் க்ரஷ் (Cake & Crush) என்ற பெயரில் இயங்கி வரும் கேக் கடைக்கு சொந்தக்காரர். இந்த வருடம்தான் எம்.பி.ஏ முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருப்பவர்.

இவருக்கு ஒரு ஆன்லைன் ஆர்டர் வந்திருக்கிறது. ஒரு பெண்மணி தனக்கு திருமண நாள் என்று பெரிய கேக் ஆர்டர் செய்திருக்கிறார். மகேஸ்வரியும் தனது இடத்தில் தயார் செய்து டெலிவரி பாய்ஸ் மூலம் கேக்கை அனுப்பி விட்டார்.

அவர்களும் ஜாக்கிரதையாக பிரித்து, கஸ்டமரை  சரிபார்க்கச் சொல்லி ஒகே செய்த பின் கிளம்பி வந்து விட்டனர்.

மாலையில் மகேஸ்வரிக்கு போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திலிருந்து ஃபோன். உடனே வரச் சொல்லி அழைப்பு. போனால் கேக் ஆர்டர் செய்த அந்த பெண்மணி அமர்ந்து கொண்டிருக்கிறார்.

கேக்கை அவர்கள் எப்படி ஹேண்டில் செய்தார்களோ தெரியவில்லை. ஆனால், கேக் முழுவதும் விருந்தினர் வரும் முன்பே, சரிந்து கலைந்து விட்டதாகவும், தனது திருமண நாள் கொண்டாட்டம் பாழாகி விட்டதாகவும், கேக் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்றும் புகார் கொடுக்க, நேரே போலீஸ் கமிஷனர் ஆஃபீசுக்கே சென்று விட்டார் அந்த கஸ்டமர்.

“மேடம் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே…” என்று மகேஸ்வரி கேட்க, “நான் கால் பண்ணினேன் யாரும் எடுக்கவில்லை” என்று பதில் வந்தது;  தனக்கு மிஸ்ட் கால் எதுவும் வரவில்லையே என்று  குழம்பினார் மகேஸ்வரி. டெலிவரி செய்த ஊழியர்களுக்கு ஃபோன் செய்தார்.

வாடிக்கையாளரிடம் கையெழுத்து வாங்கிய ரசீது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு உடனே வரச் சொன்னார். அதற்குள் அந்த பெண்மணி வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றும், புகாரை போலீஸ் சீக்கிரமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவசரப்படுத்த ஆரம்பித்தார். பேக்கரிக்கு ஃபோன் செய்து கம்ப்யூட்டரில் பதிவு செய்திருந்த ஆர்டர், பில் இவற்றையெல்லாம் ப்ரிண்ட் போட்டு கொண்டு வரச் சொன்னார் மகேஸ்வரி. எல்லாம் வந்து சேர ஒரு மணி நேரம் ஆயிற்று.

பிறகு, கேக் டெலிவரி செய்த ஊழியர்களும் வந்து  ரசீதையெல்லாம் காட்டி, தாங்கள் சரியாகவே பாக்ஸைப் பிரித்துக் காட்டி அவர்கள் செக் செய்ததாகச் சொல்ல அந்தப் பெண்மணி கோபத்தோடு எழுந்து போய் விட்டார். முன்னாலேயே என்னிடம் டிஸ்கஸ் செய்திருந்தால் நமக்கு கஸ்டமர்தான் முக்கியம் என்று நான்  பணத்தில் ஒரு பகுதியை ரீஃபண்ட் ஆவது செய்திருப்பேன்” என்கிறார் மகேஸ்வரி.

ஆர்டர், பில், ரசீதுகள் எல்லாம் பத்திரமாக இருந்ததால், சிறந்த சாட்சியங்களாக இருந்து மகேஸ்வரியை இக்கட்டிலிருந்து காப்பாற்றின!

வாசகீஸ்…

தொழில் முனைவோர் அல்லது அலுவலகப் பணியில் இருப்பவர்கள் தங்களது வாடிக்கையாளருடன் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவம் அல்லது பிரச்னை குறித்தும், சவாலை எதிர்கொண்டு சமாளித்தது குறித்தும் www.kalkionline.com மென்பேனா பகுதி வாயிலாகப் பதிவேற்றம் செய்யலாம்.

[email protected] என்ற மின்னஞ்சல்முகவரிக்கும் அனுப்பலாம்.

பத்மினி பட்டாபிராமன்
பத்மினி பட்டாபிராமன் மூத்த எழுத்தாளர். பத்திரிகையாளர். குறுநாவல்களும் சிறுகதைகளும் பிரபல பத்திரிகைகளில் நிறைய எழுதி முதல் பரிசும் பெற்றவர். இவற்றின் தொகுப்பாக இதுவரை ஏழு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். மருத்துவம், தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், கட்டுரைகள் மங்கையர் மலரிலும், கல்கியிலும், தினமணி நாளிதழிலும், வெளிவந்து கொண்டிருக்கின்றன உலக நாடுகளில் சுமார் 80 நாடுகளுக்கு மேல் சென்றிருப்பவர். தன் அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக, எழுதி வருபவர். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் வகுப்புக்கள் நட்த்திய அனுபவம். சென்னை தொலைக்காட்சியில் அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அகில இந்திய வானொலி எஃப். எம்மில் செய்தி வாசிப்பாளர், பிக்ஸல் மாயா அனிமேஷன் பயிற்சி நிலையத்தின் மந்தவெளிப் பிரிவு இயக்குனர். மாணவர்களுக்கு மல்டிமீடியா, அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் வீணை வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர். சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். “உரத்த சிந்தனை” அமைப்பின் தற்போதைய தலைவர்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

போற்றி செல்வனும் போளியும்!

2
-ஆர். மீனலதா, மும்பை ஓவியம்: பிரபுராம் ஆவணி அவிட்டம் 11.08.22 “பொன்! பொன்னம்மா! கொஞ்சம் இங்க வரமுடியுமா?” லேடீஸ் க்ளப் பிரஸிடெண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்த ‘பொன்’ என்கிற பொன்மலர், மொபலை அணைத்து, “என்ன விஷயம்? ரொம்ப குழையற மாதிரி இருக்கே!” “நோ குழைசல்!...

ஊறுகாய் ரெசிபிஸ்!

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி முள்ளங்கி ஊறுகாய் தேவை: முள்ளங்கி – 400 கிராம், கடுகு – 50 கிராம், மிளகாய்ப் பொடி – 2 மேஜைக்கரண்டி, மஞ்சள் பொடி – 2 மேஜைக்கரண்டி,...

ஜெயித்திடடா!

0
கவிதை! - ஜி. பாபு, திருச்சி வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடமடா! அது வழங்கும் பாடங்கள் அதிகமடா! வரும் நாட்களை நினைத்துப் பாரடா! அது வளமாவது உன் கையில் இருக்குதடா! சிக்கனமாய் செலவு பண்ணுடா! வாழ்க்கை சீரும் சிறப்புமாயிருக்கும் பாரடா! எக்கணமும் யாரிடமும் ஏமாறாதேடா! வரும் இன்பத்தை...

நன்மைகள் அறிவோம்!

0
- ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி தலைச் சளி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, ருசியின்மை, சிறுநீ்ர் தடங்கல், தாது பலவீனம் ஆகிய பிரச்னைகளைத் தயிர் போக்கும். நன்கு உறைந்து இனிப்புச் சுவையுடன் உள்ள தயிர்தான்...

கோயில் யானை வருகுது…

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க... ஆகஸ்ட் 12 – உலக யானைகள் தினம் - ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி   காந்திமதியின் காலுக்குச் செருப்பு! திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானைக்கு பக்தர்கள் சிலர்...