0,00 INR

No products in the cart.

அன்புவட்டம்

மழைக்குப் பிறகு எப்படி இருக்குது உங்க ஏரியா?
– என்.பாலகிருஷ்ணன், மதுரை

இருக்குதுங்க, ‘ஏரி’யா!

வாக்கிங் செல்லும் பெண்கள் தங்கள் தாலியைக் கழற்றிக்கொள்கிறார்களே?
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

ரு கிராம் தங்கம் ஐயாயிரத்தைத் தொடவிருக்கிறது. இதுல தாலி சென்டிமென்ட் பார்த்தால் நஷ்டம் நமக்குத்தான். ஸோ, லெட் அஸ் பீ பிராக்டிக்கல்! கணவனின் ஆயுஸோட முடிச்சு போடறதெல்லாம் ஓல்ட் மாடல் மேடம்! கோல்டு ரேட்டுக்குத் தாங்காது. வாக்கிங் மட்டுமில்லை; பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ எங்கே போனாலும், மினிமம் நகை, மேக்ஸிமம் புன்னகை என போனால்தான் நிம்மதியாக வீடு திரும்பலாம். என்னைக் கேட்டால், விலை உயர்ந்த செல்ஃபோனில் ஊர்க் கதை பேசிக்கிட்டே வாக்கிங் போறதுகூட செம டேஞ்சர்! தலையில் ஒரு மடார் அடி! ஒரு தள்ளு! அவ்வளவுதான் கண் விழிப்பது (எமன் ஏமாந்தால்) எந்த ஹாஸ்பிடலிலோ?!

பராசக்தி, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை – இதில் எந்தத் திரைப்பட நட்சத்திரங்கள் உங்களை ஆச்சரியப்பட வைத்தனர்?
– சி.கார்த்திகேயன், சாத்தூர்

‘பராசக்தி’ என்றதும் குணசேகரன் என்கிற சிவாஜி மட்டுமே ஞாபகத்துக்கு வருகிறார். ‘வெண்ணிற ஆடை’யில் ஜெயலலிதா என்ற நட்சத்திரம் மட்டுமே கலைத் தாரகையாகப் பளிச்சிட்டார்.

ஆனால், மூணாவதா ஒரு படம் சொன்னீங்க பாருங்க… ஒரு இளையப் பட்டாளமே, ச்சும்மா கேஷுவலா கலக்கியிருப்பாங்க. அளவு எடுத்து கச்சிதமாகத் தைத்த மாதிரி, டெய்லர் மேட் நட்சத்திரத் தேர்வு!

முத்துராமன் – காஞ்சனா, ரவிச்சந்திரன் – ராஜஸ்ரீ, நாகேஷ் – சச்சு. விடுங்க… இவங்களாவது இளம் ஜோடிகள். இந்த, ‘யூத்’ கோஷ்டியில் பாலையாவும் சேர்ந்து அதகளம் செஞ்சிருப்பாரு! ஆகையால, ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்கே என் வோட்டு!

குருவாயூரப்பனை தரிசனம் செய்த அனுபவம்…?
– வாசுதேவன், பெங்களூரு

ஓ! பலமுறை! பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் கிருஷ்ணன் கோயிலுக்குப் போகிறோம் என்ற ஐடியா ஏதுவுமில்லாத சிறுமியாக ஒருமுறை! விடியற்காலை கடுங்குளிரில், பாசிப் படர்ந்த தீர்த்தக் குளத்தில் அப்பா என்னை முங்கச் செய்தது… ‘ஜில்’ என்று நினைவில்!
அதற்குப் பிறகு எனக்குக் கொஞ்சம் விவரம் வந்துவிட்டது… (மெய்யாலுமா?)
குருவாயூரும் பிரபல சுற்றுலாத் தலமாகிவிட்டது.
ஸ்ரீநாராயணீயம் இயற்றப்பட்டது இங்கேதான்.

“கிருஷ்ணா, நீ இந்த லீலைகளை எல்லாம் செய்தாயா?” என்று பட்டத்ரி கேட்கக் கேட்க, ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகைத்து, ‘சம்மதம்’ என்று தலை அசைத்தானாமே!
நம்ப மோடி கூட தமது வெற்றிக்குப் பிறகு எடைக்கு எடை, ‘தாமரை’ துலாபாரம் தந்தாரே!

இதுபோல நிறைய விஷயங்கள் ஸ்லைட் ஷோ போல நினைவுக்கு வரும்.
குருவாயூர் கோயிலுக்குள் நுழையும்போதே, ‘ஓம் நமோ நாராயணா’ என்ற வாசகம் மின் எழுத்தாய் ஓடும்! அதைப் பார்த்ததுமே பரவசம் ஆகிவிடும்! அப்புறம் அந்த முன் முகப்புக் குத்துவிளக்கு! என்ன உயரம்? எத்தனை அடுக்கு? மாலை வேளைகளில் சுற்றுப் பிராகாரங்கள் ஒளியேற்றப்பட்டு, ஒரே தீப மயம்! சன்னிதிக்குள் நுழையும்போது, ‘கேசவன்’ என்ற யானையின் நீண்ட பிரம்மாண்டமான இரட்டைத் தந்தங்கள் வாசலிலேயே வரவேற்கும். துளசியும் நெய்யும் கலந்த ஒரு சுகந்தம் சூழ, எந்த வேளையில், எந்த ரூபத்தில், உன்னிக்கிருஷ்ணனை தரிசித்தாலும் ஆனந்தம் ஆனந்தமே!

துண்டு வாழை இலையில் துளியூண்டு அசல் சந்தனம் தெளிப்பார்கள்; எட்டு ஊருக்கு மணக்கும்! அதிர்ஷ்டமிருந்தால் யாராவது நெய் அப்பமோ, பால் பாயசமோ விநியோகிப்பார்கள்.

ஜண்டை மேளம் முழங்க, யானைகள் பரிவாரத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் வலம் வரும்போது ‘கனி காணும் நேரம், கமல நேத்ரன்டே’ என்று தப்பாகக் கூட மலையாளத்தில் பாடத் தோன்றும். குருவாயூரில் எந்நேரமும் திருவிழா கூட்டம்தான்! ஆனால், நாங்கள் சமீபத்தில் போனபோது (கொரோனாவுக்கு முன்) கூட்டமில்லை. ‘புனர் தரிசனம் தருவாய் கிருஷ்ணா’ என்று வேண்டிக்கொண்டேன். என்ன ஆச்சரியம்! மறுபடி க்யூ நகர்ந்து ஃப்ரீயாகி விடவே ‘புனர் தரிசனம்’ உடனே கிடைத்து விட்டது.
“எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா…!”

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...