‘கேக்’கிலே கலைவண்ணம் காண்போம்!

‘கேக்’கிலே கலைவண்ணம் காண்போம்!
Published on

– சேலம் சுபா

ந்த சீமந்த விழாவில் அனைவரின் பார்வையையும் கவர்ந்து இழுத்தது வண்ணமயமான அந்தக் கேக்தான். 'கருவுற்ற பெண்ணை அச்சு அசலாகக் கேக்காக வடித்து வைத்தது யார்' எனும் கேள்வியுடன் பாராட்டுகளும் அந்தக் கேக்கை வடிவமைத்தவருக்குக் கிடைத்தது. அந்தந்த சூழலுக்கேற்ப காட்சிகளை கேக்கின் மூலம் சொல்வதில் திறமைசாலியாக இருக்கிறார். இப்படி, பட்டுப்புடைவை, சிங்கம், கிடார் போன்ற நிறைய உருவங்களை கேக்காக செய்து அசத்துகிறார் சேலத்தை சேர்ந்த பவித்ரா.

ஏழு வருடங்களுக்கு முன் இல்லத்தரசியாய் இருந்த பவித்ரா, தனக்குப் பிடித்தமான கேக் செய்யக் கற்றுக்கொள்ளும்போது இவ்வளவு உயரத்தை அடைவோம் என நினைக்கவில்லை. ஆர்வமும் ஈடுபாடும் வித்தியாசமான சிந்தனையும் எந்தத் துறை என்றாலும் பேச வைக்கும் என்று நிரூபித்துள்ளார் இவர்.

[metaslider id=14683]


எப்படி வந்தது இந்தத் திறமை?

பவித்ராவே பகிர்கிறார் :
''பிறந்த ஊர் கோவை. புகுந்த ஊர் சேலம். கணவர் ராதாகிருஷ்ணன். 11 மற்றும் 9 வயதில் மகள்கள் உள்ளனர். குழந்தைகள் பிறந்து வளர்ந்ததும் நிறைய நேரம் கையில் இருப்பதை உணர்ந்தேன். நேரத்தை வீணாக்காமல் ஏதேனும் சாதிக்க முடிவு செய்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே வித்தியாசமாக சிந்திக்கும் திறன் இருந்தது. அது மட்டுமின்றி; இனிப்பு வகைகளை நான் விரும்பிச் சாப்பிடுவேன்.

அப்படித்தான் காணொளிப் பதிவுகள் மூலம் பார்த்து கேக் வகைகளைச் செய்ய நானாகவே கற்றுக்கொண்டேன். அதை என் ஸ்டைலில் செய்து பார்ப்பேன். வித்தியாச சுவையுடன் வரும்வரை விடாது, அதே சிந்தனையோடு இருந்து முயற்சிப்பேன். பிறந்த நாள் கேக்குகள் எல்லா கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கும். முன்பே செய்து பதப்படுத்தப்பட்ட கேக்குகள் கடைகளில் தயாராக வைக்கப்பட்டு வாங்கப்படும். ஆனால், ஹோம் பேக்கர்ஸ் முறையில் அன்றன்று ஆர்டர் தருபவரின் நிகழ்ச்சியை மனதில் வைத்து அதை சித்தரிக்கும் வகையில் வித்தியாசமாக கேக் வகைகள் செய்துத் தருவதை அனைவரும் பாராட்டினர்.

நிகழ்ச்சியில் பார்க்கும் மற்றவர் என் வாடிக்கையாளர் ஆகி விடுவர். இப்படித்தான் இல்லத்தரசியான என் நேரங்கள் இப்போது மதிப்பு மிக்கதாகியது. இதனால் என் தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. நமக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு அதைச் சிறப்பாகக் கையாண்டால் வெற்றி நமக்குத்தான்" என்று அவர் செய்து அசத்தும் கேக்கின் சுவை போலவே, இனிமையாகப் பேசுகிறார் பவித்ரா.

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய போட்டியில் பல கட்டங்களைக் கடந்து இறுதிப் போட்டியில் நுழைந்து, அகில இந்திய அளவில் சிறந்த கேக் வடிவமைப்பாளராக பரிசை வென்று அந்த நிறுவனத்தின் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

'இறுதிப் போட்டியில் இந்தியா'
எனும் தலைப்பில் இவர் உருவாக்கிய
கேக், நடுவர்களை நெகிழ
வைத்ததுடன், அனைவரின்
கவனத்தையும் கவர்ந்து
பரிசைப் பெற்றுத் தந்துள்ளதை
பெருமையாக நினைக்கிறார்.
அவர் மென்மேலும் உயரங்களைத்
தொட வாழ்த்தினோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com