ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!
Published on
ஓவியம்: பிரபுராம்

''ன் மனைவி ஒரு சீரியல் பைத்தியம்!"

"துக்காக ஓடாத டிவியைப் பார்த்துகூட அழுவது நல்லவா இருக்கு?"
– எஸ்.கே.சௌந்தரராஜன், திண்டுக்கல்
…………………………………….


''கைதியின் பெயரை சத்தமில்லாமல் மெதுவாக
டவாலி கூப்பிடுகிறாரே, அவ்வளவு பயமா?"

"ல்லீங்க… ஜட்ஜ் பெயரும் அதுதானாம்!"
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………….


"ம்ம கட்சி தோற்றதற்கு தலைவரே காரணமாயிட்டாரே…"

"ன்ன சொல்றீங்க?"

"ல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று
மக்களுக்குத் தேர்தல் அறிக்கையில் அவர் கோரிக்கை
விடுத்ததைத்தான் சொல்றேன்!"
– எஸ்.பவானி, ஸ்ரீரங்கம்
…………………………………….


"ஒ
ரு பறவை உனக்குச் சோறு போடும்னு
ஒரு சாமியார் சின்ன வயசில் என்னிடம் சொன்னார்!"

"ப்போ என்ன பண்றீங்க?"

"கிளி ஜோஸ்யம் பார்த்து பலன் சொல்றேன்!"
– ஆர்.யோகமித்ரா, சென்னை
…………………………………….


"நேத்து செஞ்ச பொங்கலை விட,
இன்னிக்கு ருசி கூடுதலா இருக்கே?"

"து மாட்டுக்குச் செஞ்ச பொங்கலுங்க!"
– ஆர்.ராஜலட்சுமி, ஸ்ரீரங்கம்
…………………………………….


"ழலைப் பற்றிப் பேச அவருக்கு
எந்தத் தகுதியும் இல்லை!"

"ஏன் தலைவரே…?"

"ழலைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்?"
– ஆர்.உமா, ஈரோடு
…………………………………….


"நீ அதிர்ஷ்டக்காரன்யா! உன் பெண்டாட்டி
நம்ம ஊர் பஞ்சாயத்துத் தலைவரா ஆயிட்டாங்களே!"

"டப் போய்யா… சும்மாவே வீட்ல பாத்திரமெல்லாம்
கழுவச் சொல்லுவா. இனி, என்னென்ன சொல்வாளோ?"
– ஆர்.உமா, ஈரோடு
…………………………………….


"ந்த இடுப்பளவு வெள்ளத்திலே பஸ் வருமா?"

" பஸ் வராது… ஆனா, படகு வரும்!"
– ஆர்.உமா, ஈரோடு

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com