0,00 INR

No products in the cart.

சொல்ல விரும்புகிறோம்!

ப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? ஆரம்பமே அமர்க்களம்!
– சுஜாதா வேங்கடகிருஷ்ணன்

நிரஞ்சன் பாரதிக்கு வாழ்த்துக்கள். மகாகவி பாரதி பிறந்த நாளில், அவரது வழித்தோன்றல் நிரஞ்சன் பாரதியின், ‘எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்’ தொடரை மிகுந்த எதிர்பார்ப்போடு படிக்கக் காத்திருந்தேன். வந்தது தொடர்… படித்தேன். ஆரம்பமே அசத்தல்.
‘உயிரைச் சேர்க்கும் உயிரினைக் காத்திடும்
உயிரினுக்கு உயிராய் இன்பம் ஆகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
ஊது கொம்புகள்! ஆடுக களிகொண்டே!’
இதைப் படித்தபோது, நிரஞ்சன் பாரதி வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கப்போகிறார் என்றும், பாரதியின் வாழ்க்கை வரலாறு மாதிரி போகிறதே என்றும் யோசித்தேன். நிச்சயமாக புதிய கருத்துக்களாக, புதிய சிந்தனைகளை உள்ளடக்கி சுவையுடம் தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள்!
இன்னொரு சந்தேகமும் வருகிறது. காசியில் இருந்தபோது பெண்ணடிமைச் சிந்தனை வந்ததாக வருகிறது. ஆனால், காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற பாரதி, அன்னை நிவேதிதாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட அல்லது நிவேதிதா அவர்கள் சொன்ன அறிவுரையே இந்த தேசத்தைப் பற்றியும், பெண்ணடிமை பற்றியும், சாதிய வேறுபாடு களையவும், மத துவேச மறுப்பு கொள்கையைக் கடைப்பிடிக்கவும், சமதர்ம சிந்தனையை வளர்க்கவும் உறுதி பூண்டு அன்னையை குருவாக ஏற்று உறுதி எடுத்து, அதன்படி கடைசி வரை நடந்தார் என்றும் வரலாறு சொல்கிறது. ஒருவேளை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள நான் அவசரப்படுகிறனோ?
– ஆறுமுகபாண்டி.

பாரதி காலத்தால் அழியாத மகாகவி!
– ஆர்.ஜெயலக்ஷ்மி

ரம்பமே அமர்க்களமாக உள்ளது. சூப்பர்!
– கே.எஸ்.கிருஷ்ணவேணி

‘எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்’ தொடர் பாரதியுடன் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த நிகழ்வுகளைப் படிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
– நளினி ராமச்சந்திரன்

Niranjan, imagined that you are orating this article in my mind while reading it. good one, will keep watching for more episodes.
– Vijayakumaran

‘எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்’ முதல் அத்தியாயமே அசத்தலான ஆரம்பம். பாரதியார் குறித்த புதுமையான தகவல்களை சலிப்பில்லாமல் ஒரே மூச்சில் படிக்க வைக்கும் விறுவிறுப்பான நடை. தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.
– இசக்கி செல்வி சுபாஷ்

பாரதியார் பிறந்த இடம் மற்றும் எட்டயபுரம் அரண்மனை ஆகியவற்றை நேரில் பார்த்தது போல் இருந்தது. வாசகர்கள் அனைவரும் பாரதியாரோடு பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம்.
– இரமணி, பெருங்களத்தூர்

காகவி பாரதியாரின் பிறந்த நாளன்று தொடங்கிய, ‘எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்’ தொடர் மூலம், அவரது சரிதையைப் படிக்கப் பரவசத்துடன் தயாராகி விட்டோம்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

*******************************

பெண் என்பவள் வெறும் போகப் பொருளல்ல. இதைப் புரிந்துகொண்ட நாடு நிச்சயம் உண்மையாகப் பெண்மையைப் போற்றும் என்று அழகான, தெளிவான பதில் சொன்ன அனுஷாவிற்கு ஒரு ராயல் சல்யூட்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை

Excellent article. When hearing such discouraging words from others, as you mentioned, either keep cotton in the Ear Or hear from one ear and leave it from another ear immediately. This will help surely to go ahead further. Myself also experienced.
– மீனலதா

சூப்பர் மேடம். பெண்கள் முன்னேற லட்சியத்தை நோக்கிப் (காதில் வாங்காமல்) போய் கொண்டேயிருக்க வேண்டும்.
– ஆர்.ஜெயலக்ஷ்மி

ருமையான வார்த்தைகள். லட்சியத்தோடு, ஒரு குறிக்கோள் இருந்தால் சறுக்கல்கள் காணாமல் போய்விடும். பெண் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்று உண்டா? கிரேட்!
– சியாமளா

கோமதியின் வித்தியாசமான கேள்வியும் அதற்கு மேடத்தின் உணர்வுபூர்வமான பதிலும் மிக மிக அருமை. தக்காளி ஜோக்ஸ் அனைத்தும் அருமை.
– தி.வள்ளி

ருப்பட்டியின் மருத்துவ குணங்கள் அறிந்தேன். கருப்பட்டிக்கு இத்தனை குணங்கள் உள்ளன என்பது பிரமிக்க வைத்தது. இனிவரும் காலங்களில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் ஜீனிக்குப் பதில், கருப்பட்டிக்கு மாறி விடுகிறேன். வாசகர்கள் அனைவருக்கும் நல்ல செய்தியைத் தந்த மங்கையர் மலருக்குப் பாராட்டுக்கள்.
– கி.இரமணி

‘அலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ கதையை மையமாக வைத்து, அப்பெயர் கொண்ட சின்ட்ரோமுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி ஜி.எஸ்.எஸ். எழுதிய கட்டுரை, விடை காண முடியா வினாவிற்கு விடை தேடும் விதமாக அமைந்தது.
– என்.ராமச்சந்திரன், நாமக்கல்.

ந்த விமரிசனத்தையும் காதில்போட்டுக் கொள்ளாமல், இலக்கை நோக்கிப் பயணித்தால் வெற்றி நிச்சயம் என்பதை, ‘ஒரு வார்த்தை’ தவளைக் கதை மூலம் தெளிவாகச் சொல்லி விட்டார் அனுஷா!
– ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

காதிலே புகையும், கண்ணிலே பகையும் நிறைந்து பொறாமைப்படுவதையே பெருமையாக எண்ணும், ‘பொறாமை பொன்னரசி’யிடமிருந்து தப்பிக்க ஜி.எஸ்.எஸ். வழங்கிய யுக்திகள் ஆயிரம் பொன் பெறும்.
– அனுராதா சிதம்பரம்

வெற்றி வேண்டுமா? (காதிலே) வைத்துப் பாரடா… ஓர் உருண்டை பஞ்சு!’ என்று, ‘ஒரு வார்த்தை’ பகுதியில் வெற்றிக்கான ரகசியத்தை காதோடு காதாகச் சொல்லி விட்டார் ஆசிரியர்!
– ஆர்.ஹேமாம்புஜம், ஓசூர்

பொறாமை பொன்னரசி’ நம்மைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஒரு அருமையான தகவல் என்று புரிந்தது. பொன்னரசி போன்றவர்களை எப்படி எதிர்கொள்ளலாம் என்று அழகான டிப்ஸ் சொன்னது பயனுள்ள தகவல். நம்மைப் பற்றி யாராவது எதிர்மறையான விமர்சனம் செய்தால், அது பொறாமை என்று மட்டும் எண்ணாமல், அது நியாயமானதா என்பதை கவனித்து நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரு அறிவுரையும் சொன்ன விதம் அருமை.
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை

‘வாசகியர்களின் காமெடி வசனப் பதிவுகள்’ ஒவ்வொன்றும் சிரிப்பை அள்ளி வீசுகின்றன. ‘எந்த மாதிரி படம் கொடுத்தாலும் நாங்கள் அதற்கு வசனங்கள் எழுதுவோம்’ என்று நிரூபித்த அனைத்து வாசகிகளுக்கும் பாராட்டுக்கள். அதை அழகாகப் பார்த்துப் பிரசுரித்த மங்கையர் மலரின் சேவை எங்களுக்குத் தேவை.
– பிரகதா நவநீதன், மதுரை

‘பாவை நோன்பு பிறந்த கதை’ என்று மார்கழி சிறப்புப் பற்றிப் படித்ததும் மார்கழி நமக்கு எவ்வளவு உன்னதமான நன்மைகளைத் தரும் மாதம் என்று புரிந்தது. மனதில் உறுதி கொள்ள வைத்த அருமையான பக்கங்கள். உடலும் உள்ளமும் சிலிர்த்தது.
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை

த்மினி பட்டாபிராமன் அவர்களின் பயண அனுபவம் படிக்கும்போது நாமும் அவருடனேயே பயணிப்பது போல இருக்கிறது. ஸ்வீடன், டென்மார்க், நார்வே என்று எல்லா இடங்களுக்கும் சென்று அந்தந்த இடங்களை நேரில் பார்ப்பது போல மிகவும் தத்ரூபமான பயணக்கட்டுரை. அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கவிருக்கும் இடங்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.

ங்கையர் மலர் வாசகிகள் என்றாலே, ஏதேனும் வித்தியாசமாகச் செய்வதில் வல்லவர்கள். ‘வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க’ பக்கத்தில், ‘உருளைக்கிழங்கு ஜாமுன்’ பற்றிப் படித்து மிகவும் வியந்துபோனேன்.
– உஷா முத்துராமன், திருநகர்

‘மின்னலை ரசம்’ படித்ததும் எனக்குப் பழைய நினைவுகள் வந்துவிட்டன. என் மாமியார் மின்னலைக் கீரை மோர்க்குழம்பு வைப்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். வயல்களில் கிடைக்கும் அந்தக் கீரை.
– இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்

‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ நேர்காணல் படித்தேன். ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதே தனது வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டுள்ள தேவியை நினைத்தால் மிகவும் பெருமையாகவும், பாராட்டும்படியாகவும் உள்ளது. பெண் கல்விக்கு ஆதரவாகவும், குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் சமூகத் தொண்டு ஆற்றிவரும் தேவியின் லட்சியம் நிச்சயம் நிறைவேறும். மங்கையர் மலர் வாசகர்களின் சார்பாக அவரைப் பல்லாண்டு நீடூழி வாழ்கவென்று மனமார வாழ்த்துகிறேன்.
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி

1 COMMENT

 1. சாெ ல்ல விரும் புகி றாே ம் பகுதியில் இடம்
  பெ ற்றுள்ள வாசகர் விமர்சனங்கள் மிக மிக உ ண் மையை த்
  தருகிறது. தற் ே பாது மனமுவந்து அருமை யாக
  பாராட்ட லாம் அ னு மேடம?
  து.சேரன்
  ஆலங்குளம்

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

சொல்ல விரும்புகிறோம்!

5
Excellent work. Appreciate your simple and clear language and presentation which a commoner can relate to and enjoy. Thanks for the wonderful work. - Bhuvaneshwari...

சொல்ல விரும்புகிறோம்!

0
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? அற்புதமான கட்டுரை. நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பாராட்டுக்கள் பல. - கே.எஸ்.கிருஷ்ணவேணி பாரதியாரை பற்றி எவ்வளவோ படித்திருக்கிறோம். பாரதியின் எள்ளுப்பெயரர் நிரஞ்சன் பாரதி எழுதும் இத்தொடரில், பாரதி காங்கிரஸ்...

சொல்ல விரும்புகிறோம்!

0
எப்படிப் பிறந்தாள் புதுமைப்பெண்? Amazing information... every story of HIS is like a blessing. - ஆதித்யா மஹாகவி சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளை மட்டுமே படித்த பலரும், மஹாகவி பாரதியாரின் எள்ளுப் பேரனுடைய இந்தக்...

தாகத்தைத் தணிக்க உதவும் உணவுகள்!

வாசகர் ஜமாய்க்கிறாங்க! - ஏ.எஸ்.கோவிந்தராஜன் ஆப்பிள் : தினமும் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்றுதான் ஆப்பிள். ஆப்பிளை கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிடுவதால், அடிக்கடி தாகம் எடுப்பதைத் தடுக்கலாம். ப்ளம்ஸ் : கோடை வெயிலில் ஏற்படும் கடுமையான தாகத்தைப்...

நடப்பதால்…

படித்ததில் பிடித்தது வாசகர் ஜமாய்க்கிறாங்க! உங்கள் கால்களை செயல்பாட்டிலும், வலுவாகவும் வைத்திருங்கள். வயதாகும்போது தலைமுடி நரைத்து, சருமம் தளர்ந்து, முகத்தில் சுருக்கங்கள் வந்தால் பயப்படக் கூடாது. உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால் உங்கள்...