0,00 INR

No products in the cart.

எவனோ ஒருவன்!

சிறுகதை: மஞ்சுளா சுவாமிநாதன்
ஓவியம் : தமிழ்

“அம்மா காபி கொடு,” என்று உற்சாகமாக ஞாயிற்றுக் கிழமை காலை எழுந்து வந்தாள் சாரு. “இன்னிக்கு உன்னை பொண்ணு பார்க்க வராங்க, பிரண்ட்ஸோட ஊர் சுத்த போயிடாத,” என்று காபி டம்பளரை நீட்டியவாறே அம்மா சொன்னாள்.  சாருவின் முகம் சற்றே வாடியது. “போட்டோ பார்க்கரியா?” என்று கேட்ட அம்மாவிடம், வேண்டாம் என்று தலையசைத்த வாறு, “நேர்லயே பார்த்துக்கறேன்,” என்றபடி நகர்ந்தாள் சாரு.

இது அவளது 3 வது பெண் பார்க்கும் படலம். முதல் பையனை இவள் வேண்டாமென சொல்ல, அடுத்தவன் இவளை வேண்டாமென சொல்ல, வருகிற 3 வது பையன் தான் ரகு.  இதற்குள் சாருவின் வீட்டில், ‘இவள் காலம் முழுவதும் கல்யாணமே ஆகாமல முதிர்ந்த கன்னி ஔவையாரைப் போல் ஆகிவிடுவாள்,’ இப்போவே கொஞ்சம் குண்டு ஆயிட்டா… இப்போ வேலைக்கு போறா வேற! பீசா கீசா சாப்பிட்டு இன்னும் குண்டாயிட்டா ஒரு பையன் கட்டிக்க மாட்டான்,’ என ஏகத்திற்கு இடித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதிலே கல்யாணம் காட்சி என்று போனால் போதும், ‘ அண்ணா நகர்ல  ஒரு பையன் இருக்கான்,’ ‘அமெரிக்காவுல ஒரு பையன் இருக்கான்னு,’ ஆளாளுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அட! வீட்டுக்கு வர சொந்தகாரங்க வேற சாருவ ஏற இறங்க பார்த்துட்டு, ‘பொண்ணுக்கு கல்யாண களை வந்திருச்சு, எப்போ கல்யாண சாப்பாடு போட போற?’ எனக் கேட்டு விட்டு அவர்கள் பாட்டுக்கு கிளம்பி போயிடுவார்கள். ஆனால், சாருவின் வீட்டிலோ அது ஒரு சின்ன பூகம்பத்தையே உண்டு பண்ணி விடும்.

“போன மாசம் இவளோட படிச்ச அனுக்கு கல்யாணம், ஏ. வி. எம் ராஜேஷ்வரில ஜாம் ஜாம் ன்னு கல்யாணம் ஆச்சு, இவளுக்கு எப்போ தான் ஆகுமோ?” என்று அம்மா ஆரம்பிப்பாள்…

“நல்லா ஹீரோ மாதிரி கலரா, கை நிறைய சம்பளத்தோட வர பையனுக்கு தான் என் பொண்ண குடுப்பேன்,” என்று அப்பா ஆகாசக் கோட்டை கட்டுவார்…

“சரி, நம்ம என்ன மாளிகைலயா இருக்கோம்?  ஏன் உனக்கு இப்படி புத்தி போறது? நல்ல தன்மையான பையனா, நம்ம வசதிக்கு ஏத்தா மாதிரி பையன் பாருங்கோ,” என்பார் தாத்தா…

“எனக்கு புடிச்சா தான் கல்யாணம் பண்ணிப்பேன். நான் தான் டிசைடு பண்ணுவேன்,” என்பாள் சாரு…

“அடி கட்டையால! நாங்க எல்லாம் பேசிதான் கல்யாணம் பண்ணின்டோமா? நாங்க நன்னா இல்ல?”  அப்படீணு பாட்டி திட் டுவார் … இப்படி ஒவ்வொரு தடவையும் இந்த உரையாடல் ஒரு மன்ஸ்தாபத்துலதான் முடியும்.

ஒரு முறை சாருவோட அம்மா, பொண்ணுக்கு நல்ல எடத்துல கல்யாணம் ஆகனும்னு அதீத விரதம் இருந்து, உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிட்டாங்க. அப்போ சாரு தான் கூட இருந்து அம்மாவை பார்த்துகிட்டா.  மிகவும் பலவீனமாக இருந்த அவளது அம்மா, அவளிடம், “எவ்வளவோ பூஜை செய்யறேன், ஆனால், உனக்கு நல்ல இடம் அமைய மாட்டேங்குதே,” என்று கூறி வருத்தப்பட்டாள்.

சாருவிற்கு 23 வயது, அவள் அம்மாவிற்கோ 45 வயது, என்னவோ முதுமையால ரெண்டு பேரும் கஷ்ட படறா மாதிரியும், கடவுள் இவங்க விஷயத்துல கண்ண திறக்காத மாதிரியும், கண்ணீரும் கம்பலையுமாக அவள் அம்மா ஒரு குணசித்திர நடிகையாக மாறியதைக் கண்டு சாரு மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

காலம் முழுக்க சேர்ந்து வாழப் போகும் வாழ்க்கைத் துணையை தேட ஏன் தான் அவள் வீட்டில் இவ்வளவு அவசரப்படுகிறார்களோ? என்று தோன்றியது சாருவிற்கு.

ன்று மாலை ரகுவும் அவனது பெற்றோர்களும் வந்திருந்தார்கள். அலங்கரிக்கப்பட்ட பொம்மை போல சாருவிற்கு புடைவையை கட்டி, ‘அடக்கமாக பணிவாக நடந்து கொள்,’ என்று அம்மா கூறி, அவர்கள் முன் ஒரு நாற்காலியில் சாருவை அமரச் செய்தாள்.

ரகுவை உற்றுநோக்கிய சாருவிற்கு மனதிற்குள் பல சிந்தனைகள்… பார்க்க சாதுவாக தெரிகிறான், நிஜத்தில் எப்படி இருப்பானோ?  தண்ணி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்குமா இவனுக்கு? என்னை இவர்கள் வீட்டில் கொடுமை படுத்துவார்களா? எப்போதோ பார்த்த விசு படங்களும், பாலச்சந்தரின் 47 நாட்கள் படமும், சிவப்பு ரோஜா படமும் சேர்ந்து அவளை பயமுறுத்தியது. அட  ச்சே! ஒரு நல்ல எண்ணம் கூட வர மாட்டேங்குதே… பேசி தான் பார்ப்போம் என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள் சாரு.

“நா பொண்ணோட கொஞ்சம் தனியா பேசணுமே,” என்று ஆரம்பித்தான் ரகு. அப்போது தான் கொஞ்சம் அமைதியடைந்தாள் சாரு. தனிமையில் அவனுடன் பேசுகையில், அவள் கண்களைப் பார்த்து ரகு நிதானமாக பேசியது அவளுக்கு பிடித்திருந்தது. மேலும், முழு கவனமும் அவள் மேல் வைத்தவனாய், ஒருமுறை கூட அலைபேசியை பார்க்காமல் பேசினான் ரகு.

இருவருக்கும் பிடித்த ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில், பிடித்த பெண் கதாபாத்திரம் ‘பூங்குழலி’ என்று அவன் சொன்னபோது சாருவிற்கு  இன்னுமே அவனை பிடித்துப் போனது . எப்போதும் மூர்ச்சை அடைந்து போகும் மென்மையான ‘வானதி’யை சொல்லி விடுவானோ என்று அஞ்சினாள் சாரு. ஆனால், அவன் கூறியதோ படகோட்டும் திடமான ‘பூங்குழலி’யை. இது ரகுவை கணவனாக தேர்ந்தெடுக்க போதாது தான் என்றாலும், அவனது ரசனை அவளுக்கு பிடித்திருந்தது.

“திருமணத்திற்கு பிறகு உங்க மனைவியிடமிருந்து நீங்க என்ன எதிர்பார்க்கறீங்க?” என்று வினவினாள் சாரு. அவளுடைய இந்த கேள்விக்கு இதற்கு முன் பார்த்த இருவரும் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை…

சற்று யோசித்த ரகு , பொறுமையாக “எனக்கு அவள் நல்ல தோழியாக இருக்க வேண்டும்,” என்று கூறி, மேலும் “சாரு, நா ரொம்ப பணக்கார வீட்டு பையன் கிடையாது, நீ வசதி, மற்றும் ஆடம்பரத்தை எதிர்ப்பபார்த்தால் என்னால் தர முடியாது, ஆனால் உன்ன சந்தோஷமா வெச்சுப்பேன்,” என்று முடித்தான். அவனது இந்த பதிலில் ‘கிளீன் போல்ட்’ ஆனாள் சாரு .

இருந்தும் மனதில், ஒரு தரமே பார்த்த ஒருவனை எப்படி வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பது என்று தயங்கினாள் சாரு. பிடித்த எழுத்தாளர், பிடித்த சினிமா என நீண்டு கொண்டே போன உரையாடலில் அவ்வப்போது இந்த எண்ணங்கள் அவளை உறுத்தியது. இதனை புரிந்து கொண்ட ரகு, “ எனக்கும் உன்னை புடிச்சிருக்குன்னு சொல்ல ஒரு சான்ஸ் தான் இருக்கு. வாழ்க்கை ல சில முடிவுகளை நம்ம உள்ளுணர்வு வெச்சு தான் எடுக்கணும்,”  என்று சொன்னான்.

கிளம்பும் தருணத்தில், “ஒரு பாட்டு பாடேன் மா,” என்று ரகுவின் அப்பா கேட்க,”எங்கிருந்தோ வந்தான்… இடைஜாதி நான் என்றான்… இங்கிவனை யான் பெறவே…என்ன தவம் செய்து விட்டேன்…”என்று மஹாகவி பாரதியின் பாடல் வரிகள் சாருவிற்கு நினைவில் வர, ரகு என்ற அந்நியனும் நண்பனான தருணத்தை உணர்ந்து சிரித்தாள்.

ரகுவோ ஒரு படி மேலே போய் … “சாரு பாடலன்னா பரவால்ல, நான் பாடறேன்னு,” சொல்லி , “ கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால் என்னை கட்டியிழுத்தாய்…” என பாட அவர்கள் இருமனமும் அன்றே இணைந்தது.

 

1 COMMENT

  1. கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கும் வீட்டில் இருக்கும் எல்லா வயதினரின் மன உணர்வுகளையும் வெகு இயல்பாக படம் பிடித்து காட்டியது. படு எதார்த்தம் பாராட்டுக்கள். – ரேவதி பாலு

மஞ்சுளா சுவாமிநாதன்http://www.joyousassortment.com
மஞ்சுளா சுவாமிநாதன் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். பெரும்பாலும் ஆங்கில பத்திரிகைகளில் எழுதிய இவர், இப்பொழுது தமிழிலும் சமூகம் சார்ந்த கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். சரித்திரத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து எழுதுவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வேண்டுதல்! 

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன் படங்கள்: சேகர் திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி...

நடிப்பல்ல! 

கதை: மாதவி ஓவியம்: சேகர் கருணை இல்லத்தில் நடிகை மீராவின் கார் நுழைந்ததும் குழந்தைகள் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. கும்மாளமும் கூச்சலும் இல்லத்திலும் உள்ளத்திலும். கார் முழுக்க குழந்தைகளுக்கான பொம்மைகள், பலூன் மற்றும் விளையாட்டு சாமான்களுடன் ...

பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!

சிரிகதை : தனுஜா ஜெயராமன் ஓவியம்: தமிழ் அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை...

ஒரு பக்கக் கதைகள்!

3
ஓவியம்; தமிழ் துரோகம்! -புதுவை சுபா அதிகாலை 4.00 மணிக்கே அந்த நடுத்தர உணவகம் ஆயத்தமானது. “இன்னும் கொஞ்ச நேரத்துல வாடிக்கையாளர்கள் ‘டீ’க்கு வந்து நிப்பாங்க. இட்லி ஊத்தி எடுக்கணும். சட்னி சாம்பார் தயார் செய்யணும். வேலை...

மனத்துக்   கண்    மாசிலன்     ஆதல்…….

1
சிறுகதை - சாந்தி நாதன் ஓவியம்: லலிதா   மதிய உணவிற்குப் பின் சிறிது உறங்கி எழுந்த ராமநாதன் அறையை விட்டு வெளியே வரவும் , "உள்ளே வரலாமா?" என்று குரல் கொடுத்தவாறே அவர் நண்பர் சடகோபன்...