0,00 INR

No products in the cart.

ஐலாபுரம் ‘தம்’ பிரியாணி!

தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பேட்டி!
-ராகவ் குமார்

ஏ.எம். ரத்னத்தின் குடும்பத்தில் ரத்தினமாக ஜொலித்து வருகிறார் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.
ல துறைகளில் பெண்கள் சாதனை புரிந்து வந்தாலும், அவர்கள் திரைதுறைக்குள் நுழையாத ஏரியா சில இருக்கின்றன. அதில் தயாரிப்பு துறையும் ஓன்று. ஆனால், அதிலும் ஐஸ்வர்யா அவர்கள் நுழைந்து பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். ஆரம்பம், என்னை அறிந்தால், கருப்பன், தெலுங்கில் ஆக்சிசன் என பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.

சமீபத்தில் அவர் தயாரித்து வெளிவந்துள்ள ‘வீரபாண்டியபுரம்’ என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை சுசீந்திரன் இயக்க, ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மருமகள் ஆவார். படத்தின் ரிசல்ட் இல் கொஞ்சம் பிஸியாக இருப்பவர் நேரம் ஒதுக்கி நம்மிடையே பேச ஆரம்பிக்கிறார்…

மகிழ்ச்சி :வீரபாண்டியபுரம்’ படம் முழுக்க முழுக்க திண்டுக்கல் மாவட்ட பின்னணியில் எடுத்தது. சுசிந்திரன் சார் மேக்கிங் வித்தியாசமாக இருக்கும். பரபரப்பாக கதை சொல்லும் டைரக்டரின் பாணி எனக்கு பிடித்து இருந்ததால் தயாரிக்க முன் வந்தேன். மக்களுக்கும் பிடித்து இருப்பதாக ரிசல்ட் வந்து கொண்டு இருக்கிறது. ரிசல்ட் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆராய்ச்சி – டு – தயாரிப்பாளர் : நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த சென்னைதான். எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி முடித்துவிட்டு ஆராய்ச்சித் துறையில் சில பணிகளை மேற்கொண்டிருந்தேன். திருமணம் ஆன பின்பு மாமனார் ரத்னம் அவர்களை பார்த்தும், சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தாலும் தயாரிப்பாளரானேன்

பெண் தயாரிப்பாளர் : ந்த ஒரு துறையிலும் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. இருந்தாலும் சினிமா தயாரிப்பு துறையில் பெண்கள் அதிகமாக கிடையாது. காரணம் ரிஸ்க் அதிகம். ஆரம்ப காலத்தில் ரத்னம் அங்கிள் நிறைய வழிகாட்டினார். இப்போது நானாக தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறேன்.

தேவை பயிற்சி: டைரக்‌ஷன், கேமரா இப்படி பல துறையிகளில் பெண்கள் வர ஆரம்பித்து விட்டனர். இப்பெண்கள் அசிஸ்டன்ட் டைரக்டர், அசிஸ்டன்ட் கேமரா உமனாக இருந்து பயிற்சி பெறுகிறார்கள். அதே போல, தயாரிப்பு துறையில் நுழைய விரும்பும் பெண்கள், தயாரிப்பாளர்கள் யாரிடமாவது உதவியாளராக இருந்து, பின்பு தனியாக படம் தயாரித்தால் நல்லது. அப்போதுதான் எது சரி, எது தவறு என்று முடிவு எடுக்க முடியும்.

நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல: ற்ற துறைகளில் இருக்கும் ஆண்களில் சிலர் தங்கள் துறைகளில் உள்ள பெண்களை மனதளவில் பலவீனமானவர்கள் என்று நினைப்பார்கள். நாம் எது சொன்னாலும் அப்படியே நம்புவார்கள், கேட்பார்கள், என்று நினைப்பார்கள். இது சினிமா துறையியிலும் உள்ளது. இதை இங்கே வேலை செய்யும் பெண்கள் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும். நான் பெண் தயாரிப்பாளர் என்று என்னை யாரும் தனியாக பிரித்து பார்க்க நான் அனுமதிக்கமாட்டேன்.

அட்வைஸ் அஜீத் : ஜீத் சாரை வைத்து படம் பண்ணும் போது அவருடன் பழக வாய்ப்பு கிடைத்தது. மிக சிறந்த மனிதர். இதை தாண்டி சமையல், ஆன்மீகம் என பன்முக தன்மை கொண்டவர் அஜீத் சார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பல்வேறு சமையல் செய்து அசத்துவார். செய்வதோடு மட்டும் இல்லாமல், அவரே பரிமாறுவார். நான் அப்போது ரெஸ்டாரெண்ட் வைத்திருந்தேன். அந்த ரெஸ்டாரெண்ட் வளர்ச்சிக்கு பல்வேறு டிப்ஸ் கொடுத்தார்.

ஆன்மிகம், ஜோதிடம் பற்றி புரிதல் உள்ளவர். நானும் அஜீத் சாரும் ஒரே ராசி, எங்கள் ராசிக்கு என்ன நடக்கும் என்பதை பற்றியும் பொதுவான ஜோதிட விஷயங்களை பற்றியும் விவாதிப்பார். பல பொக்கிஷங்களை தன்னுள் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் ஆழ்கடலை போல, பல விஷயங்களை தனக்குள் வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பவர் அஜித் சார்.

பாடகி ஐஸ்வர்யா : நான் தயாரித்த தெலுங்கு படமான ஆக்சிசன் படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளேன். இந்த பாடல் தெலுங்கில் மிக பெரிய ஹிட் ஆனது. இது எனக்கு நல்ல நம்பிக்கையை தந்துள்ளது. சில நாட்கள் கழித்து தமிழிலும் என் குரலை கேட்கலாம்.

ஐலாபுரம் பிரியாணி :
லாபுரம் என்ற ஊர் விஜயவாடா அருகில் உள்ளது. இங்கே உள்ள பிரியாணிக்கு தனி சுவை. ஐலாபுரம் பிரியாணி என்ற பெயரில் சென்னை போரூர் அருகில் ரெஸ்டாரெண்ட் வைத்திருந்தேன். இந்த ஹோட்டலில் ஐலாபுரம் பிரியாணி சுவையை மண் பானையில் வைத்து ‘தம்’ பிரியாணியாக தருவேன். மக்களிடம் மிக பிரபலமாக இருந்தது எங்கள் பிரியாணி.

தயாரிப்பு துறைக்கு வந்த பின்பு ரெஸ்டாரண்டில் கவனம் செலுத்தி நடத்த முடியவில்லை. இது சாப்பாட்டு விஷயம். பக்கத்தில் இருந்து பார்த்து செய்ய வேண்டிய வேலை. தயாரிப்பையும் பார்த்துக் கொண்டு, ஹோட்டலையும் கவனிக்க முடியவில்லை. சில வருடங்களுக்கு பின்பு மறுபடியும் ஐலாபுரம் பிரியாணி கடையை துவக்கும் எண்ணம் உள்ளது.

திரைக்கு பின்னால் மட்டும் தான்: ‘நீங்க பார்க்க அழகா இருக்கீங்க, சினிமாவில் நடிக்கலாமே?’ என்று சிலர் சொல்வதாக கேள்வி பட்டிருக்கிறேன். நமக்கு என்ன வேலை தெரியுமோ அந்த வேலை மட்டுமே செய்யணும். தெரியாத வேலையை செய்ய கூடாது என்பது என் பாலிசி.

தயாரிப்பு பணி என்பது மிக நுட்பமானது. அதே போல பெரிய வேலையும் கூட. முதல் நாள் கிளாப் அடிப்பது முதல் கடைசியில் பணம் செட்டில் செய்வது வரை தயாரிப்பு பணி மிக நீண்டது. கடினமான இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

 

1 COMMENT

ராகவ்குமார்
ராகவ்குமார் கல்வித் தகுதி: எம் பில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல்.கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி குழும பத்திரிகைகளில் தம் படைப்புகளை ஏற்றி வரும் நிருபர், எழுத்தாளர். திரை விமர்சனங்கள், நேர்காணல்கள், சினி கட்டுரைகள் இவரது கோட்டை. 12 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா, கிராபிக்ஸ் & அனிமேஷன் துறையில் ஆசிரியர் பணி.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!

1
-லதானந்த் பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக்...

அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?

-சேலம் சுபா சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம்,  அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான...

கோவையின் மின்சாரப்  பெண் ஹேமலதா அண்ணாமலை!

1
-லதானந்த் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை எரிபொருளாகக்கொண்டு வாகனங்களை இயக்குவதில் செலவு அதிகம்; சுற்றுச்சூழலும் பெருமளவு மாசடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில், கோவையில், படித்த பெண்மணி ஒருவர் மின்சாரத்தால் இயங்கும் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும்...

ஆட்டிஸம் எனும் விந்தை!

- மஞ்சுளா சுவாமிநாதன் பிரிட்டனை சேர்ந்த Stephen  Wiltshire, 47, ஒரு திறமையான ஓவியர். இவர் ஒரு முறை ஒரு நிலப்பரப்பைப் பார்த்து விட்டால், இம்மி பிசகாமல் அந்த இடத்தை தத்ரூபமாக வரைந்துவிடுவார். இவருக்கு மூன்று...

தத்ரூப ரங்கோலிகள் – இல்லத்தரசியின் சாதனை!

1
-சேலம் சுபா அந்தக் குழந்தையின் கண்களில் தெரியும் துள்ளலும் உதட்டு சிரிப்பும் பார்க்கும் யாரையும் இன்னும் சிறிது நேரம் பார்க்கும்படி தூண்டும். நீரில் மிதக்கும் அழகிய வாத்து, மரத்தில் தொங்கும் மாங்காய், கண்களில் காதலுடன்...