0,00 INR

No products in the cart.

ஏலமோ ஏலம்!

ஆர். மீனலதா, மும்பை
வீடு ஏலமா? கம்பெனி ஏலமா? பொருட்கள் ஏலமா?
இல்லை! இல்லை! இல்லை! பின் எதற்காக?

IPL டி- 20 கிரிக்கெட் விளையாட்டின் 15 ஆவது ஸீஸனிற்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்க பெங்களூருவில் மெகா ஏலம் இரு நாட்கள் (பிப்ரவரி 12, 13) பரபரப்பாக நடைபெற நேரடி ஒளிபரப்பானது தொலைக்காட்சியில்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ள (IPL) கிரிக்கெட் ‘டி – 20’ போட்டி மார்ச் மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. அதற்காகத்தான் ஏலமோ ஏலம்!

புது பாணியில் ஆள் சேர்ப்பு.
ழைய முறையில், அணிகள் பெரும்பாலான வீரர்களைத் தக்க வைத்து, சில புது வீரர்களை சேர்க்கும் வழக்கம் மாற்றப்பட்டு, 2 முதல் 4 வீரர்களை மட்டும் தக்க வைத்து, பல புதிய வீரர்களைச் சேர்க்கவேண்டுமென கூறப்பட்டது.

புதியதாக லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் (அகமதாபாத்) இரு அணிகள் இணைய, மொத்தம் 10 அணிகள் ஆனது.

திவு செய்யப்பட்ட 1214 வீரர்களில் இருந்து, 590 பேர்கள் அடங்கிய பட்டியல் அறிவிக்கப்பட்டது. (இந்தியர்கள் 370, வெளிநாட்டவர்கள் 220)
நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை மற்றும் வீரர்களின் எண்ணிக்கை
2 கோடி – 48
1.5 கோடி – 20
1 கோடி – 34
சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்குத் தலா 50 லட்சம், 40 லட்சம், 20 லட்சம் என அறிவிக்கப்பட்டன.

நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், கார்ப்பொரேட் மற்றும் பாலிவுட் நடிகர்/நடிகையர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இளைய தலைமுறையினரான ஆர்யன், சுகானா (நடிகர் ஷாருக்கானின் பசங்க); நடிகை ஜூஹி சாவ்லாவின் மகள் போன்றோரும் கலந்து கொண்டனர்.

அணி மற்றும் தொகை பட்டியல்:

அணி     தொகை:
பஞ்சாப்  -72 கோடி
ஐதராபாத் – 68 கொடி
ராஜஸ்தான் – 62 கோடி
பெங்களுரு  – 57 கோடி

மும்பை – 48 கோடி
சென்னை – 48 கோடி
கொல்கத்தா – 48 கோடி
டெல்லி – 47.5 கோடி
லக்னோ – 60 கோடி
அகமதாபாத் – 53 கோடி

சுவாரசியமான செய்திகள்:

ல்ரவுண்டரான இங்கிலாந்து வீரர் ‘லியம் லிவிங்ஸ்டன்’ ஐ, பஞ்சாப் கிங்ஸ் அணி 11.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. காஸ்ட்லியான வெளிநாட்டு வீரர்.
ஆல் ரவுண்டரான சிங்கப்பூர் வீரர் ‘டிமோதி ஹேல் டேவிட்’ இன் அடிப்படை விலை 40 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போதும், 8.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது பெரிய ஆச்சர்யம். சிங்கப்பூரானுக்கு அதிர்ஷ்டம்.

கிரிக்கெட் வீரர் மகன், வேகபந்து வீச்சாளர், அதிரடி பேட்ஸ்மேன் ‘அர்ஜூன் டெண்டுல்கரின்’ அடிப்படை நிர்ணய விலை 20 லட்சம். ஒருவரும் ஆர்வம் காட்டாததால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 30 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

இஷான் கிஷான்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ‘ஜோப்ரா ஆர்ச்சர்’ முழங்கை வலி காரணம் கடந்த பல மாதங்களாக விளையாடவில்லை. ஓய்வில் இருப்பினும், ஏலத்தில் அவரை எடுக்க போட்டியோ போட்டி. இவரை எப்படியாவது வாங்கி விடமேன்டுமென்ற முனைப்பில், அடிப்படை நிர்ணய விலை 2 கோடி எனினும், 8 கோடி கொடுத்து வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ஆகிய ‘இஷான் கிஷானை’, மும்பை இந்தியன்ஸ் 15.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

U-19 வீரர்கள் ‘யாஷ் துல்’லை டெல்லி கேப்பிடல்ஸ் 50 லட்சத்திற்கும், ‘ராஜ் அங்கத்’ஐ பஞ்சாப் கிங்ஸ் 2 கோடிக்கும், ‘ராஜ் கர்தனை’ சென்னை சூப்பர் கிங்ஸ் 1.5 கோடிக்கும் வாங்கினர். இவர்களின் அடிப்படை விலை 20, 40 லட்சம்தான்.

590 பேர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து, முதல் நாள் 74, இரண்டாம் நாள் 130 ஆக மொத்தம் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

IPL வரலாற்றில் தேசிய அணிக்காக விளையாடாத ‘ஆவேஷ்கான்’ஐ 10 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது.

தீபக் சாஹர்

முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் 10 கோடிக்கும் அதிகமாக, மேற்கொண்டு 4 கோடி கொடுத்து, 14 கோடிக்கு ‘தீபக் சாஹரை’ ஏலத்தில் எடுத்துள்ளது.

முதல் நாளில் ஏலத்தில் எடுக்கப்படாத உமேஷ் யாதவ், மறுநாள் 2 கோடிக்கு எடுக்கப்பட்டார். இஷான் சர்மா, அமித் மிஸ்ரா, சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லா, ஸ்டீவன் ஸ்மித், மார்டின் கப்தில் போன்ற பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லையென்பது ஏமாற்றத்திற்குரிய விஷயம்.
இப்படி பல – பல, பலே – பலே திருப்பங்களுடன் மார்ச்சில் IPL பார்க்கலாம்.

 

2 COMMENTS

  1. IPL ஏலம் பல ஆச்சர்யத்தையும், சில ஏமாற்றத்தையும் அளித்தது. இருந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமான தகவல்கள்.
    ஆர்.வித்யா சதீஷ்குமார்,
    பள்ளிக்கரணை.

  2. கிரிக்கெட் என்ற ஆட்டத்துக்கு இவ்வளவு பணம்,புகழ் கிடைக்க யார் காரணம் என வியந்தேன்.இந்தியா ஏழை நாடா?இந்த ஏலம் பற்றிய அடிப்படைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

மீனலதா
ஆர். மீனலதா, தொலைபேசி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். விருதுகள் பல பெற்றவர். சிறந்த நாடக நடிகர், பேச்சாளர், எழுத்தாளர், சினிமா, இசை, கவிதை, சமையல், Ad.supervision, விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்கும் ஆல்ரவுண்டர். நிகழ்ச்சி அமைப்பாளரும்கூட.. பழகுவதற்கு இனிமையான பண்பாளர். பலருக்கும் முன்னோடியாக விளங்குபவர். மங்கையர் மலரின் மும்பை நிருபர். உற்சாக ஊற்று.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...