0,00 INR

No products in the cart.

கதம்ப வா. ஜா…!

அருகம்புல் பொரியல்

தேவையானவை:
அருகம்புல் – 1/2 கப் பொடியாக நறுக்கியது,
பயத்தம்பருப்பு – 1/2 கப், பூண்டு – 2 பல், இஞ்சி – சிறிய துண்டு,
உப்பு – தேவைக்கேற்ப, காய்ந்த மிளகாய் – 2,
மிளகு -1/4 ஸ்பூன், ஜீரகம் – 1/4 ஸ்பூன்.

செய்முறை:
அருகம்புல்லை மண் போக நன்கு அலம்பி பொடி பொடியாக நறுக்கி , வேகவைத்த பயத்தம் பருப்புடன் கலந்து, பூண்டு, இஞ்சி நசுக்கி போட்டு , உப்பு , மிளகு ஜீரக பொடி சேர்த்துக் கிளரினால் அருகம்புல் பொரியல் ரெடி. இதை சாப்பிட்டால் உடலுக்கு சத்தும் கிடைக்கும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும்.
– சௌமியா சுப்ரமணியன், சென்னை

வெந்நீரின் மேன்மைகள்

வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளைச் செய்யக்கூடியது. நம்மில் பலரும் இதனைப் பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் …

ன்கு காய்ச்சிய நீரில் இருந்து வெளிப்படும் நீராவியை ஆழமாக உள்ளிழுத்து சுவாசிப்பது, மூக்கடைப்புக்கு நிவாரணம் தரும். சைனஸ் தொந்தரவுகளைப் போக்கும்.

சைனஸ் பிரச்னையை எதிர்கொண்டவர்களுக்கு தொண்டை முழுவதும் சளி சவ்வுகள் படர்ந்திருக்கும். சூடான நீரைப் பருகுவது அந்தப் பகுதியை சூடாக்க உதவும், சளி, தொண்டை வலியையும் போக்கும். மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு சூடான நீர் நிவாரணம் தரும்.

அறை வெப்ப நிலையை கொண்ட பானத்தைவிட சூடான பானம் பருகுவது தொண்டைக்கு இதமளிக்கும். அதே சமயம் மிகவும் சூடாக இருக்கும் தண்ணீரை பருகுவது உணவுக் குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். சுவை மொட்டுகளை சிதைக்கலாம். எனவே, வெந்நீர் குடிக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள்.

வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துகள் உடலுக்கு கிடைக்கச் செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.

சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. உடலின் ஒவ்வொரு அத்தியாவசிய செயல்பாட்டுக்கும் தண்ணீர் தேவை.

உடற்பயிற்சி செய்பவர்கள் சூடான நீர் பருகுவது அவர்களது உடல் வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவுகிறது.

இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும். 130 டிகிரி பாரன்ஹீட் முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலை ஏதுவானது. அதற்கு மேலும் வெப்பநிலை அதிகரித்தால் சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.

ரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும்.

எந்த வெப்பநிலை கொண்ட நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம்.
தொகுப்பு – கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி

ஓட்ஸ் ரெசிப்பீஸ்!

ட்ஸ் உடன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.

கார்னுடன் ஓட்ஸ் சேர்த்து பிஸ்கட் செய்யலாம். இது சுவையாகவும், சத்தாகவும் இருக்கும்.

ட்ஸ் உடன் கோதுமை கலந்த சப்பாத்தி செய்தால் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

டை செய்வதற்கு மாவு அரைக்கும்பொழுது மாவு தண்ணீராகி விட்டால் அத்துடன் ஓட்ஸ் மாவினை சேர்த்து வடை செய்யலாம்.

ட்ஸ் பாயசம் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் எளிதில் செய்யக்கூடிய சத்தான பாயசம் இது.

ட்ஸ் உடன் வாழைப்பழம் சேர்த்து பணியாரம் செய்யலாம். இது சுவையான இனிப்பு பணியாரம் போல் இருக்கும்.

வெண்டைக்காய் பொரியலில் கடைசியில் பொடித்த ஓட்ஸினை சேர்த்தால், சுவையான சத்தான பொரியல் தயார்.

பொடியாக நறுக்கிய காலிப்ளவரை சிறிது வதக்கி அத்துடன் ஓட்ஸினை கலந்து கட்லட் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

னிப்பு கொழுக்கட்டையை அரிசி மாவில் செய்யாமல் ஓட்ஸ் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

சாதாரணமாக உப்புமா செய்வதைப் போலவே ரவைக்கு பதில் ஓட்ஸ் சேர்த்து ஓட்ஸ் உப்புமா செய்யலாம்.
– ஏ.எஸ். கோவிந்தராஜன்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

மனிதாபிமானம் இல்லாத மதம் தேவையில்லை! ஒருநாள் ரமணாசிரமத்தில் எல்லோரும் பகல் உணவுக்கு அமர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெண் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். ஏன்?  என்று ரமணர் கேட்டார். அங்குள்ளவர்கள் அந்த பெண் வீட்டிற்கு விலக்கு, ஆதலால் நாம்...

வாய்ச்சொல்லில் வீரரடி!

-சேலம் சுபா  “கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ  எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கருணை காட்டும் கஸ்தூரி சுகாதாரத் துறையில் 39 வருடங்களாக திறம்படப் பணியாற்றி வரும், சமுதாய நல செவிலியரான திருமதி. கஸ்தூரி மணிவண்ணன், தனது சமூகப் பணிக்காக  மத்திய அரசு வழங்கும்...

ஜில்லென்ற மூணாறு டூர்!

வாசகர் சுற்றுலா! -ஜெயகாந்தி மகாதேவன் சென்னை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை என் நெருங்கிய தோழி சியாமளா சிவராமன் தொலைபேசியில் அழைத்தார். நலம் விசாரித்துவிட்டு அவங்க  கூறியது, "ஜெயா, ஸ்டெர்லிங் ஹாலிடேஸ்...

ஜோக்ஸ்!

படங்கள் : பிள்ளை "ருசி தெரியலைனா அது கொரோனா அறிகுறியா கூட இருக்கலாம் சார்!” "நீங்கவேற! கல்யாணமானதுலேர்ந்தே அப்படித் தாங்க இருக்கு எனக்கு!" -வி.ரேவதி,தஞ்சை -----------------------------                    ...