0,00 INR

No products in the cart.

கவிதைத் தூறல்!

கவிதைகள்: -பி.சி. ரகு, விழுப்புரம்

எங்கண்ணே?
ண்ணே அண்ணே!
நாம ஓடி ஆடி
விளையாடிய
ஆற்றங்கரை எங்கண்ணே?

ம்பது பேருக்கு நிழல் தரும்
ஆலமரம்
அதில் பாட்டு கட்டிப் பாடும்
பறவை கூட்டம் எங்கண்ணே?

ரும்பு கொல்லையில
மடைய போட்டு
நெல்லு கொல்லையில
கதிர் அடிச்சு
அசதியா வரப்பு மேல உட்காந்து
வெங்காயம் கடிச்சு
கூழ் குடிச்ச
அந்த விளைநிலமெல்லாம் எங்கண்ணே?

விழிச்சிருந்த நேரத்துல
களவுபோன கோவணமா
காணாம போயிடுச்சே
நம்ம வயக்காட்டு கிராமம்
எங்கண்ணே?
***********************************************

ஏமாற்றம்

ருவதைப் போலில்லை
ஆனாலும்,
வந்துவிட்டது மழை!

ருவதைப் போலில்லை
ஆனாலும்,
வந்துவிட்டது புயல்!

ருவதாய்
சொல்லிவிட்டுச் சென்ற
நீ மட்டும்தான்
வரவேயில்லை
கடைசி வரையில்!
***********************************************

மிதியடி!

னிதர்களை
தலையில் தூக்கி வைத்துக்
கொண்டு ஆடுகிறது
மிதியடி…
அதைத் தூக்கி
வாசலில் வீசிவிட்டுப்
போகிறார்கள்
மனிதர்கள்!
***********************************************

காரணம்

ழை என்பதால்
உனக்கும்
ஏளனமா?
எங்களிடம் வர மறுக்கிறாயே
பணமே!
***********************************************

நம்பிக்கை

யார் மீதும்
நம்பிக்கையில்லை…
தன் வீட்டை
தானே சுமக்கும் நத்தை!

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவிதைகள்!

-பி.சி.ரகு, விழுப்புரம் எப்படி சிரிப்பது? மணமேடையில் உட்கார்ந்திருக்கும் என் காதருகில் தோழி வந்து சொல்லிவிட்டுப் போகிறாள் சிரித்த முகமாய் இருக்கச் சொல்லி... என் தாலி செய்வதற்காக அம்மாவின் தாலி விற்கப்பட்டதையும்... என் திருமணச் சீர் செய்ய அப்பா ஆசையாய் பயிரிட்ட ஐந்து ஏக்கர் நிலம் விற்கப்பட்டதையும்... திருமணச் செலவிற்காக இருந்த வீட்டையும் அடமானம் வைத்த என் குடும்பநிலையை எண்ணும்போது எப்படிச்...

அன்னையர் தின சிறப்புக் கவிதை! 

-மாலதி ஜெகந்நாதன்   விசித்திரத் துறவி    சுமப்போம் என்று தெரிந்தே சுமக்கும்  'சுமைதாங்கி'! அறுப்போம் என்று உணர்ந்தே குலை தள்ளும் 'வாழை '! மிதிப்போம் என்று அறிந்தே கிடக்கும் ' மிதியடி' ! வெறுப்போம் என்று தெரிந்தே அன்பூட்டும் ' பிறவி '! இன்றும் பொறுப்போம் என்றாவது...

கவிதை!

2
-செ.கலைவாணி, சேலம்  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! உழைப்பென்னும் படைப்பூக்கச் செயலாலே, உருவானாதே இவ்வுன்னத உலகம். உடலெனும் இயந்திரத்தால் உழைப்பை உரமாக்கி, உலகை எந்நாளும்  இயங்கச் செய்பவனே உழைப்பாளி. உழைக்கும் வெள்ளையணுக்களால் இயங்கும் உழைப்பாளியின் உடல் உலகிற்காய் உழைக்கிறது. உழைப்போரின் வியர்வைத்துளிகள்  உருவாக்கிய உலகம், உழைப்போரால்...

கவிதைத் தூறல்!

1
கொரானா போனது,  கோவில்கள்  திறந்தது! ஏலேலோ ஐலசா … ஏலேவோ ஐலசா… ஏலேலோ  ஐலசா… ஏலேலோ ஐலசா … கோவில் நடை திறந்தாச்சு, சக்தியம்மன் வந்தாச்சு, சன்னதியில்  கூட்டம்  நிறைஞ்சாச்சு, சந்தோசமாய் மக்கள் கும்பிட்டாச்சு. ஏலேலோ ஐலசா… ஏலேலோ  ஐலசா… - கிரிஜா ராகவன் —---------------------------- வெறுப்பு  ஜொலிக்கும் முழு...

மரங்களின் புலம்பல்!

0
கவிதை! -மாதவி, திருவானைக்காவல்   எங்களின் வேர்கள் பிடித்திருப்பது மண்ணையல்ல உங்களின் மனங்களை பறவைகள் கூட விதைக்கும் எங்களை மனிதர்கள் ஏன் சிதைக்கிறீர்கள்? நாங்கள் மழை, காற்றின் வாகனங்கள் உங்கள் பராமரிப்பு நேசமெனும் எரிபொருளால் நிரப்புங்கள் உங்கள் பேர் சொல்ல ஒரு மரம் நடுங்கள் எங்கள் கிளைகள் கிளைகலல்ல மனித உடலின் மூச்சுக்குழாய்கள் இலைகளெல்லாம் உலகின் நுரையீரல்கள் அடிமரம் பூமியின் அஸ்திவாரம் வேர்களெல்லாம் அண்டத்தின் கால்கள் இயற்கை விஞ்ஞானியின் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நாங்கள் பறவைகளின் பாசறை உயிரினங்களின் ஊன்றுகோல் நீங்கள்  வெட்ட நினைப்பது எங்களை...