0,00 INR

No products in the cart.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!

 – கட்டுரை: தனுஜாஜெயராமன்

ல்லா காலங்களிலும் பெண்களுக்கு சேலை கட்டுவதென்பது மிகவும் பிடித்தமானதாகவே இருந்திருக்கிறது. சேலை கட்டுவது பெண்களுக்கு அழகியல் சார்ந்தது. நமது வீட்டு பீரோக்களில் முக்கால் பங்கு இடத்தை அடைப்பது பெரும்பாலும் சேலைகளே. விதவிதமான புடவைகளின் மீதான மோகம் பெண்களுக்கு எப்போதுமே குறைவதில்லை. எப்படிபட்ட உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் பாந்தமாய் பொருந்திவிடுவது சேலை. இதுவே பலரும் அதனை விரும்பக் காரணம்.

சேலை கட்டுவது என்பது மிகப் பெரிய வேலையாகி போனதே என சிரமப்படும் தற்கால பெண்களுக்கு ஏற்றாற்போல, ரெடிமேட் ரக சேலைகளும் தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வயதான பாட்டிமார்களின் சுங்குடி சேலை முதல் இளம்குருத்துகளின் ஷிபான் ரக புடவைகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கும். கடைகளில் கூட சேலை விற்கப்படும் இடங்கள் மட்டும் “ஜே ஜே” வென திருவிழா கூட்டம் போல களை கட்டும்.

அப்போதைய பெண்கள் சிறுவாடு காசுகளை சேர்த்து, மாதம் ஒரு முறை வரும் புடைவைகாரர்களிடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் புடைவைகளை வாங்கி சேர்த்து வைப்பது உண்டு. பெண்களையும் புடைவை மோகத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது. எவ்வளவு புடைவைகள் பீரோவில் அடுக்கியிருந்தாலும் வெளியில் செல்கையில் கண்ணில் படும் அழகு புடைவைகளை வாங்கி பதுக்குவதில் இருக்கிறது அவர்களது புடைவை மீதான ஆர்வம்.

புடைவைகளில் முதன்மையானது காஞ்சிபுரம் பட்டு சேலையே. தரமான பட்டு நூல்களை கொண்டு கைத்தறிகளால் நெய்யப்படும் காஞ்சி பட்டானது உலகத்தரமும் உலகப்புகழும்  பெற்றவை. நீண்ட நாள் உழைக்கக்கூடிய தரம்மிக்க உன்னதமான பட்டு சேலைகள் அவை. பட்டு சரிகைகள், அகலமான பார்டர்கள், எழில்மிகு, நேர்த்தியான டிசைன்கள் என நம் கண்களையும், கருத்தையும் கவருபவை அவை.

காஞ்சிபுரம் பட்டுப்  புடைவைகள் உலகெங்கும்  ஏற்றுமதி செய்யப்படுகிறது. காலம் காலமாக, திருமணம் போன்ற வைபவங்களில் காஞ்சி பட்டுப் புடைவைகள் முக்கிய அம்சமாக இருக்கும். மணப்பெணிற்கு புடைவை எடுக்க ஒரு பெருங்கூட்டமே கடைக்கு செல்வது வழக்கம்.

காட்டன் புடைவைகள் என்பது பலரின் விருப்ப சாய்ஸ். கண்களை உறுத்தாத கலர்களில், எளிமையாக டிசைன்கள் வைத்து நெய்யபடும் காட்டன் புடைவைகள் அழகானவை. அவற்றை துவைத்து, கஞ்சி போட்டு, அயர்ன் செய்து உடுத்தும் போது வரும் கம்பீரமும், அழகும், எந்த விலையுயர்ந்த உடைகளுக்கும் வராது. அலுவகங்களுக்கோ, நேர்காணல்களுக்கோ காட்டன் புடைவைகளை உடுத்துபவர்க்கு தனி மதிப்பும், மரியாதையும் தானாகவே வரும்.

தினந்தோறும் உடுத்தும் ஷிபான் ரக புடைவைகள், மிக வசதியானவை, எளிமையானவை. காட்டன்  புடைவைகள் போன்ற பராமரிப்பு இதற்கு தேவையில்லை.   இந்த ரக புடைவைகள் உடுத்தினால் அழகாய் ‘சிக்’ கென்று இருக்கும். எப்படிபட்ட உடல்வாகுக்கும், பொருத்தமாகவும், வசதியாகவும் இருப்பதால் பெண்களின் விருப்பபட்டியலில் முதலிடம் பிடிக்கிறது இந்த ரக சேலைகள்.

சுங்குடி சேலைகள் தமிழகத்தின் பாரம்பரியத்துடன்  பின்னிப்  பிணைந்தது. இன்றும் கிராமங்களில் பலரும் இந்த சுங்குடி சேலைகளை அழகாக , பாந்தமாக உடுத்துவதை பார்க்கலாம். அந்த சேலைகளை அவர்கள் உடுத்தும் பாங்கே நமது கண்ணை கவரும். மென்மையான பருத்தியில் நெய்யப்படும் இந்த ரக சேலைகள், எளிமையானவை, ஆனால், எழில்  கொஞ்சுபவை. மதுரை, சுங்குடி சேலைக்கு மிகவும் புகழ்பெற்றது

தற்போது விதவிதமாய் சேலைகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதுமைகளுடன் விற்பனையாகின்றன. காலத்திற்கேற்றார் போல் நம் ரசனைகளும் மாறுவதில் வியப்பில்லை.  தற்போது நிறைய கொசகொசவென டிசைன்களை அள்ளித் தெறித்தார் போன்று இருக்கும் ‘கலம்காரி’ புடைவைகள் பல பெண்களின்  விருப்பத் தேர்வாக இருக்கிறது.

பட்டுப் புடைவைகளின் கனம், மற்றும், அதன் காற்றோட்டமின்மை  காரணமாக, இன்றைய பெண்களில் பெரும்பாலானோர் லைட் வெயிட்டாக இருக்கும் ‘சாப்ட் சில்க்’  புடைவைகளையும்  விரும்பி உடுத்துகின்றனர் .

புடைவைகளின் அழகு தோற்றமே, அதற்கு மேட்சாக போடப்படும் ரவிக்கைகளின் அழகில் தானே வருகிறது. இன்று இளம்பெண்களின் ப்ரத்யேக தேர்வு புடவைக்கு மேட்சாக விதவிதமாய், வகைவகையாய் தைக்கப்படும் ஜாக்கெட்டுகளில் இருக்கிறது. பல்லாயிரம் ரூபாய் கொடுத்து கூட ஜாக்கெட்டுகளை தைத்து உடுத்துவது வழக்கமாகி விட்டது.

தற்போது இதற்கென டிசைனர்கள் வந்துவிட்டனர். இவர்கள் புடைவைக்கேற்ற டிசைன்களில், அழகுணர்ச்சியுடன் ஜாக்கெட்டுகளை உருவாக்கி தருகிறார்கள். அவை சிலசமயம், புடைவை விலையை விட பலமடங்கு அதிகமாக இருப்பதும் உண்டு. தற்போது, கடைகளில் கூட ரெடிமேட் ஜாக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகிறது.

புடைவைகளுக்கென்றே புகழ்பெற்ற ஊர்களும் உண்டு. காஞ்சிபுரம் பட்டுப்புடவை,  சேலம்  சின்னாளம் பட்டு, ராசிபுரம் பட்டு, கோவை சுங்குடி சேலை, மதுரை சுங்குடி சேலை, நெகமம் புடைவைகள், தமிழ்நாட்டில் மிகப் பிரபலமானவை.

குஜராத்தின் சூரத் சேலைகளும்,  ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேலைகளும் கூட பெண்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவை. சன்ன ரகமாக, செயற்கை ஜரி வைத்த மார்வாடி ரக சேலைகள் மிக மிக அழகாக இருக்கும். இவை எம்ராய்டரி தைத்தும் ,  கற்கள் பதித்தும் ப்ரத்யேகமாக தயாரிக்கபடுகின்றது.

தற்போது திருமணங்களில், மணப்பெண், மணமகன் உருவம் பதித்த சேலைகள் ஒரு பேஷன் ஆகியுள்ளது. சிற்பங்கள், புகழ்பெற்ற ஓவியங்கள், என நமது விருப்பத் தேர்வுகளுக்கும் சேலை நெய்து தருகிறார்கள். தற்போது  புடைவைகளில், நவீனரக வேலைபாடுகள், கலைநுணுக்கங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியதுவம் தரப்படுகிறது.

காலங்கள் மாறினாலும் … புடைவைகளின் விலையில், மாடலில்,  டிசைன்களில் மாற்றம் வந்தாலும்… பெண்களுக்கு  புடைவை அணிவதில் ஆர்வம் குறையவில்லை என்பதே நிஜம்.

இன்றும் கோவில்களில், திருவிழாக்களில் , பண்டிகை காலங்களில் , திருமணம் போன்ற வீட்டின் பல்வேறு சுபநிகழ்சிகளில் தவறாமல் இடம்பெறுகிறார்கள் சேலைகட்டிய பெண்கள்.  இன்றும் இளம்பெண்கள் தழைய தழைய புடவையணிந்து, நெற்றியில் விதவிதமாக பொட்டுகளை வைத்து,  தலைபின்னி, பூவைத்து கொள்ளும் காட்சிகளை அழகாய் ரசிக்கலாம்.

‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு’ என சும்மாவா பாடிவைத்தார் கவிஞர்.  ஆமாம்! சேலை கட்டிய பெண்களுக்கு வாசம் மட்டுமல்ல நேசம், பாசம் என எல்லாமே உண்டு!

 

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பணக்காரர்  ஆவது எப்படி ?

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது - லாவோ எவ்வாறு எந்த ஒரு பெரிய பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறதோ, அவ்வாறே பணக்காரர் ஆவது என்ற இலக்கை நோக்கிய நெடுந்தூரப் பயணமும்,...

தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!

பகுதி -1 சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்! -சித்ரா மாதவன் தமிழ்நாடு எனும் புண்ணிய பூமியில் எங்கு திரும்பினாலும் கோயில்களைக் காணலாம். மாபெரும் கற்கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும், கிராமத்திலும் என...

மால் எனும் மாயா பஜார்!

-மஞ்சுளா சுவாமிநாதன் என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ  பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும். போன வாரம் சென்னையில...

ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!

சாதனை! -தனுஜா ஜெயராமன். பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி  ரவி.  வேலைக்குச் சென்று கொண்டே வீட்டையும் திறம்பட கவனித்துக் கொண்டு சைக்கிளிங்,...

ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!

-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன் ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத்...