0,00 INR

No products in the cart.

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வித்தையின் விலை!

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை கங்கை கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியானம் முடிந்து கண் திறந்தபோது ஒருவர் நீர் மேல் நடந்து வருவதைக் கண்டார். இதைப் பார்த்து அவர் சிரிக்கலானார்.

அம்மனிதர் இராமகிருஷ்ணர் அருகே வந்து, “இந்தக் கடினமான வித்தையை நான் பத்து ஆண்டுகளாக முயன்று கற்றுத் தேர்ந்துள்ளேன். இதைக் கண்டு நீங்கள் ஏனோ சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இல்லை, நீர் கற்ற வித்தை காலணாவுக்குத்தான் பயன்படும்,” என்று பதில் கூறினார் இராமகிருஷ்ணர்.

“அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்,” என்று மீண்டும் கேட்டார் அம்மனிதர்.

“காலணா கொடுத்தால்தான் படகில் கரையைக் கடந்து விடலாமே?” என்று பதிலளித்தார் இராமகிருஷ்ணர்.

சராசரி மனிதர்களான நமக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்கள், நம்முடைய எதிர்பார்ப்புகள், எல்லாமே நான், எனது, என்ற சிறிய வட்டதினுள்ளேயே சூழல்கிறது. அதைத் தாண்டி நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு குருவின் பார்வை நமக்கு நிச்சயம் தேவை படுகிறது என்பதை இக்கதை அழகாக உணர்த்துகிறது.
– ஆர். ராமலெட்சுமி, திருநெல்வேலி

சமத்துவம் போற்றும் நாணயம்.

மெரிக்காவைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் ‘மாயா ஏஞ்சலோ’ நினைவாக அவரது உருவம் பொறித்த நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

கறுப்பினத்தைச் சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர்.

அங்கு சம உரிமைக்காக நடத்தப்பட்ட ‘ அமெரிக்கன் சிவில் ரைட்ஸ்’ இயக்கத்தில் மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் போன்ற தலைவர்களுடன சேர்ந்து உரிமை போராட்டம் நடத்தினவர் மேரி. அமெரிக்காவில் கறுப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

தட்டும் பயன்களும்
  • நாம் உண்ணும் உணவில் இருக்கும் முக்கியத்துவம் உணவு உண்ணப் பயன்படுத்தும் தட்டிலும் இருக்கிறது. எந்தத் தட்டில் சாப்பிட்டால் என்ன பயன் என்று பார்க்கலாமா?
  • தங்கத் தட்டில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும். பித்தம், வாயு, உடல் சூடு கட்டுப்படும். மெலிந்த உடல்காரர் புஷ்டியாவார்கள்.

  • வெள்ளித்தட்டில் சாப்பிடுபவர்களுக்கு கபம், குளிர்ச்சி ஆகியவற்றால் ஏற்படும் நோய் தீரும். உடம்பில் தனி பொலிவு உண்டாகும்.
  • செம்புத்தட்டில் உணவு உண்டு வந்தால் உடம்பில் எந்தவித நோயும் அணுகாது. உடல் வலிமை அதிகரிக்கும். கண் பார்வை கூர்மையாக இருக்கும். ரத்த சம்பந்தப்பட்ட நோய், பித்த நோய் விலகும்.
  • சோர்வு, மயக்கம், மற்றும் பலவீ்னமாக இருப்பவர்கள் வெண்கல தட்டில் உண்ணலாம். தாது வலிமைக்கு நல்லது. உடலில் பூரிப்பு கூடும்.
  • வாழை இலையில் சாப்பிடுகிறவர்களுக்கு சரும பளபளப்பு உண்டாகும். கபம் கட்டி இருந்தால் நீங்கும். வாத நோய் தீரும். பித்தத்தைச் சமப்படுத்தும்.
    – ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

 

1 COMMENT

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

வெயிலுக்கேற்ற குளுகுளு மோர்! தேவையான பொருட்கள்: மோர்-1கப், இஞ்சிச் சாறு  - 2 டீஸ்பூன், விதை நீக்கிய நெல்லிக்காய் - 3, நாட்டுச் சர்க்கரை-1டேபிள் ஸ்பூன், புதினா - 1 பிடி, உப்பு -...

முத்துக்கள் மூன்று!

தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் “கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போது என் பெயரை அழைத்த கேப்டன் அருண், என்னை கேப்டன் ஹரிதா என்று அழைத்து புல்லரிக்க  வைத்தார்.’ என்கிறார்...

ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?

-தனுஜா ஜெயராமன் ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள்...

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

கடவுளை வணங்குவதும் பழக்கமே! தினமும் காலை கடமைகளை செய்துவிட்டு குளித்து பின் கடவுளை வணங்கவும். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். சின்ன, சின்னதாக 2 வரியில் சொல்லும் ஸ்லோகங்கள் சொன்னாலும் பக்தியுடன் சொல்ல பழக்குங்கள். எனக்கு அதற்கு...

ஜோக்ஸ்!

ஓவியம்: பிரபுராம்   “உன் வீட்டுக்காரர் ஜெயிலே கதின்னு இருக்காரா? அவர் என்ன ஆயுள் கைதியா?” “இல்லை… ஜெயில் வார்டனா இருக்காரு!” -ஆர். மகாதேவன், திருநெல்வேலி =================== “வோட்டுப் போட வந்தவங்களை ஏன் திரும்பிப் போகச் சொல்றாங்க?” “ஏற்கனவே 120 சதவிகிதம் வோட்டு...