இதழ்கள்
கவிதைத் தூறல்!
– பவானி, திருச்சி
ஆறுதல்
பருவ மழை பொய்த்ததால்
விவசாயம் இல்லை…
அடுத்த மகசூலில்
இரட்டிப்பாய் தருகிறேன்
சோர்ந்த விவசாயிக்கு
ஆறுதல் சொல்கிறது.
காய்ந்த நிலம்.
…………………………………………………………….
பொறுமை
கடலினும்
பெரிது
பொறுமை.
அதை மறந்தவர்க்கு
உலகம் புரிவது
அரிது.
…………………………………………………………….
மல்லிகை
இறைவனுக்கு
மாலையாகவோ
இளமங்கைக்கு
மாலையாகவோ
சேருமிடம் அறியாது
அன்று மலர்ந்த
மல்லிகை.
…………………………………………………………….
வித்தியாசம்
காலனி என்றால்
குடியிருப்பு.
காலணி என்றால்
காலில் அணியும்
செருப்பு.
ஒரு சுழி
காட்டுகிறது
இமாலய
வித்தியாசம்.
…………………………………………………………….
வசை மொழி
வாயில்லா ஜீவன்களின்
உணவு.
ஆறறிவு மனிதர்களுக்கு
வசைமொழி.
புண்ணாக்கு.